கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
மாயமான தாழ்மை:-
1.நம்மை நல்லவர்களாக மற்றவர்களிடத்தில் காண்பிக்க நாம் எடுக்கும் எல்லா பிரயாசங்களும் மாயமான தாழ்மைக்குள் அடங்கும்.
2.பொது இடங்களில் நம்மை அறியாத ஜனங்கள் மத்தியில் இயல்பாய் நடப்பதற்கு கொஞ்சம் அதிகமாய் நடப்பது மாயமான தாழ்மை!
3.நாம் ஜெபிப்பதை மற்றவர்களிடத்தில் மிகைப்படுத்தி பேசி நம்மை ஜெபவீரர்களாய் காட்டிக்கொள்வது மாயமான தாழ்மைக்கு ஓர் அடையாளம்.
4.ஒருவர் எல்லோரையும் முதலில் பேச சொல்லி கடைசியில் இவர் எல்லாவற்றையும் மிக சாந்தமாய் அலோசனைகளைத் தள்ளி இவருடைய ஆலோசனையை பணிவோடு எடுத்துரைப்பதும் மாயமான தாழ்மைக்கு ஓர் அடையாளம்.
5.பரிசுத்த அப்போஸ்தலர்கள் பேசின விதமாக தானும் அவ்வித பரிசுத்தவான் போல என்னி தன்னைக்குரித்து மிகைப்படுத்தி அப்போஸ்தலர்கள் போல் பொதுஇடத்தில் பேசுவதும் மாயமான தாழ்மை!.
6.தேவனுக்கு சாட்சியாய் வாழாமல் தன்னை ஒரு சாட்சியுள்ளவன் போல் பேசுகிறதும் மாயமான தாழ்மை! (தேவனுக்கு சாட்சியாய் வாழ்கிறவன் ஒருபோதும் தன்னை தாழ்மையுள்ளவன் போல் மிகைப்படுத்தமாட்டான்)
7.மற்றவர்களிடம் மிக மெல்லியக்குரலில் பேசும் அநேகர்.தனக்குப் பிடிக்காதவர்களை விமர்சிக்கும் போது கோபமாய் பேசும் எழுதும் ஒருவராய் இருப்பதும் மாயமான தாழ்மைக்கு ஒரு அடையாளம்
8.எந்த மனிதனுக்கு முன்பாய் தன்னை நல்லவன் என்று என்னத்தக்கவித்தத்தில் செய்கிற எல்லா கிரியைகள் அனைத்தும் மாயமான தாழ்மையே!
9.கடைசியாக சகோதரரே நாம் நம்மை நல்லவர்கள் என்று இருதயத்தில் என்னங்கொள்ளாமல் தேவன் ஒருவரே நல்லவர் நாம் துரோகிகள்,நம் துரோகச் செயல்கள் அனைத்தையும் ஒவ்வொருநாளும் மன்னித்து தயைக் காட்டி வருகிறார்.ஒரு நாளிலாவது ஒருவன் ஜெய ஜீவியம் செய்வானானால் அது தேவனுடைய பெலத்தில்தான் முடியும்.எல்லோருக்கும் ஏதாவது ஒரு பெலவீனம் உண்டு அதை குறி வைத்தே சாத்தான் தாக்குவான் ஆகையால் சுயத்தை நாம் வெறுக்கவும் தேவனே பெலனைத்தந்து நம்மில் இருக்கும் பெலவீனத்தை அகற்றி அதில் தேவன் தன்னுடைய பெலத்தை கொடுத்தே ஜெயிக்க வைக்கிறார்.
பல மனிநேரம் ஜெபிப்பதும் தேவனுடைய பெலனாலே! நீங்கள் உங்கள் இருதயத்தில் இன்று நான் அதிக நேரம் ஜெபிப்பேன் என்று தீர்மானம் எடுத்து ஜெபிக்கச் செல்லுங்கள் அன்று ஜெப நேரத்தில் உற்சாகத்தை இழந்து சீக்கிரமாய் சோர்ந்துப்போவீர்கள்.சுயமாய் நாம் எவ்வளவு முடிவெடுத்தாலும் அதில் நமக்குள் மாயமான தாழ்மையே காணப்படும் .
இந்த மாயமான தாழ்மை என்பது பெருமையின் இன்னொருபக்கம்.