தேவனுடைய வழியில் நாம் செல்லுகிறோமா என்று நம்மை நாமே சோதித்துப்பார்ப்போம்!
நாம் தேவனுடைய வழியில் நடக்க வேண்டுமானால் முதலில் நம் சுயம் செத்ததாக இருக்கவேண்டும் இல்லாமல் தேவனுடைய வழியில் நடக்கிறேன் என்று நாம் கூறுவதாய் இருந்தால் அது ஒரு வஞ்சகம் நம்மை நாமே வஞ்சிக்கிறோம் என்றே அர்த்தம் நியாயத்தீர்ப்பில் அவர் நம்மை அக்கிரம செய்கைக்காரரே என்று அழைக்க நேரிடும்
அவருடைய வழி(இடுக்கமான வழி )யில்தான் சிலர் நடந்துக்கொண்டு இருக்காங்க ஆனால் சத்தியத்தின்படி மனப்பூர்வமாக நடக்கிறார்களா? அல்லது தேவனுக்கு கீழ்படியாததால் சிட்சித்து தேவன் நடத்துகிறாரா என்பதை தேவனுடைய வழியில் நடக்கிறேன் என்பவர்களுக்கு முன் இதை வைக்கிறேன் .
.மனப்பூர்வமாய் என்றால் தேவனே என் விருப்பம் அல்ல உம் சித்தப்படியே ஆகட்டும் என்றப்படி நடப்பவர்கள் இப்படிப்பட்டவர்களை இக்காலத்தில் காணமுடியவில்லை என்பதே வருத்தமான பதில்! நாமும் அநேக நேரம் தேவனுடைய வழியை விட்டு பக்கவழியிலும்,குறுக்கு வழியிலும் போய்விட உந்தப்படுகிறோம் ஏன் போயும் விடுகிறோம் ,ஆனால் நம் தேவன் நல்லவர் கானாமல் போகும் ஆட்டைத்தேடி அவர் வந்து குற்றுயிராய் பின்மாற்றத்தில் கிடக்கும் நம்மை தோலில் சுமந்து அவருடைய வழியில் கொண்டுப் போய் விடுகிறார் .நாம் உடனே ஆவிக்குரிய நல்ல அனுபவத்துக்குள் வந்ததாய் நினைத்துக்கொள்கிறோம்.ஆனால் உண்மையில் அவருடைய கிருபையே நம்மைக் காத்து சுமந்து தப்புவித்து,நம்மை வழுவாது காத்துவருகிறது .ஆனால் அநேகர் இந்த நேரத்தில் நான் விசுவாசித்தேன்,நான் காத்திருந்தேன் ,நான் ஜெபித்தேன் அதனால் தேவன் என்னை விடுதலையாக்கினார் என்று அறியாமல் தன்னைக்குரித்தே சாட்சிப் பகருகிறார்கள்.
குறிப்பாக நாம் எத்தனை நற்கிரியைகளும்,ஆவிக்குரிய கணிகொடுத்தாலும் ,விசுவாசிப்பதும் எல்லாம் அவரே நம்மில் உண்டாக்குகிறார் அதுதான் தேவ கிருபை! உணருவோம் அவருடைய பாதையில் முறுமுறுக்காமல் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து வாழ்வோம் ,அவருடைய கிருபை நம்மில் இருந்து கிரியை செய்வதைப் பார்த்து தேவனுக்கே மகிமை செலுத்துவோம்!
பரலோக பந்தைய சாலையின் பக்கவாட்டில் இருபுறமும் சாத்தானால் உண்டாக்கப்பட்ட அநேக குறுக்கு வழியில் சுயத்தை கவரும் விளையாட்டுகள்,டான்ஸ் ,மற்றும் ,சினிமா கேளிக்கைகள்,இவைகள் மின்னிக்கொண்டு இருக்கும் .இந்த குறுக்கு வழிகளில் நாம் போவோமானால் விசாலமான பாதைதான் வரும் .
இந்த குறுக்கு வழியில் சென்று விசாலமான பாதையை அடைந்தால் நாம் நம்மை மறந்து உல்லாசத்தில் மிதப்போம் தேவனுடைய இடுக்கமான வழியை தொலைத்துவிட்டோம் என்றுக்கூட உணராதப்படி வஞ்சிக்கப்பட்டிருப்போம் .இப்படிப்பட்ட அவல நிலையை நாம் உணராதபடி நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய பாவ கயிறுகளால் நாம் பின்னிபினைக்கப்பட்டிருப்போம்.
நல்மனசாட்சியை இழந்து விசுவாச கப்பல் உடைந்திருப்பதைக் கூட நம்மால் உணரமுடியாது . காரணம் இன்றய செழிப்பு உபதேசத்தால் நம் அவல நிலையை கானாதபடி வஞ்சிக்கப்படுவோம் ஆகையால் எச்சரிக்கை!!!
எச்சரிக்கிற நான் ஆகாதவனாய் போகாதபடி என்னை நானே பயத்தோடு தேவனுக்கு முன்பாக நான் ஒன்றுமில்லை என்று தாழ்த்துகிறேன்
.ஆகையால் ஓடுகிற நாம் வழியைமாத்திரம் பார்த்து பொறுமையோடு ஓடினால் இந்த இடறலுக்கு தப்பலாம் .ஆனால் நான் இப்படிப்பட்டவைகளில் ஒரு போதும் விழுந்துப்போக மாட்டேன் என்று கூறும் அடுத்த வினாடியில் பரலோக பந்தைய சாலையிலே தன் கால் தடுக்கியே விழுவோம் ஆகையால் நாம் நிற்பது தேவ கிருபையில் என்ற எச்சரிப்பில் இவற்க்கு விலகி தேவனுக்கு செவிகொடுத்துப் பயனம் செய்வோம்
பூமிக்குரிய கானானை சுதந்தரிக்க இஸ்ரவேலரை வணாந்திரவழியாய் தேவன் நடத்தினார் என்றால் பரம கானானை சுதந்தரிக்கக்குடிய வழியில் உன்னை இவ்வுலகத்தில் சுகபோகமாய் நடத்துவாரா? இல்லை சகோதரா அநேக உபத்திரவம் இந்த இடுக்கமான வாசலில் தொடங்கும் நெருக்கமான பாதையில் வைக்கப்பட்டிருக்கிறது .உன் வாழ்கையில் உபத்திரவமே இல்லாமல் நன்றாய் செழிப்பாய் இருப்பாயானால் நிச்சயம் நீ இடுக்கமான வாசல்வழியாய் போய் நேருக்கமான பாதையில் நடக்கமுடியாமல் உன் சுயத்தை சார்ந்ததின் நிமித்தம் நேருக்கமான பாதையின் ஓரத்தில் ஆங்காங்கே பிசாசினால் உண்டாக்கப்பட்ட பக்கவழியினை நீ தெரிந்துக்கொண்டு பக்கவழியாய் சென்று விசாலமான பாதையில் பயனிக்கிறாய்
இஸ்ரவேலர்களும் தேவன் கூறின வழியில்தான் நடந்தார்கள் ஆனால் அவர்கள் முறுமுறுத்து நடந்தார்கள் அநேக சிட்சைகள் கொடுத்தும் தேவன் நடத்தினார் ஆனால் அவர்கள் மனப்பூர்வமாய் தேவனுக்கு ஒப்புக்கொடுக்காமல் சிட்சைக்கு பயந்து நடந்தார்கள் இருப்பினும் முறுமுறுத்ததின் நிமித்தம் வழியிலே அழிக்கப்பட்டார்கள்.ஆகையால் நாம் அவருடைய வழியில் முறுமுறுக்காமல் எல்லா தேவைக்கும் அவரையே சார்ந்து காத்திருந்து கிடைக்காமல் போனாலும் துன்பங்களை சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டு இயேசுகிறிஸ்து இப்படிப்பட்ட துன்பங்களில் எப்படி நடந்துக்கொண்டாரோ அப்படியே நாம் நடக்க வாஞ்சிப்போம் அப்போது நம்மில் கிரியை செய்யும் தேவ கிருபையானது அவர் நடந்ததுப்போல் அவருடைய அடிச்சுவடியைப் பின்பற்றி நடத்திச்செல்லும்!
!
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.