மாய்மால கிறிஸ்தவனே உன் மேல் கோபத்தோடு இருக்கும் தேவனிடத்தில் நீ போக்குச் சொல்லமுடியாது
மத்தேயு 5:42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே –என்றார் நம் அப்பா ஆனால் நீ அவரை பின்பற்றுகிறேன் என்று சொல்லியும் உன் கண் முன்னே புலம்பும் திக்கற்ற ஜனங்களைக் கண்டு அன்றய ஆசாரியன், லேவியன் போல பக்கமாய் விலகிப்போகிறாயே! (லூக்கா 10:31,32)
ஆகையால் நீ யார் கிறிஸ்துவின் புத்திரனாய் இருந்தால் நிச்சயம் உன்னிடத்தில் இல்லாதிருந்தால் அப்படிப்பட்டவர்களுக்காய் புலம்புவாய் கண்ணீர்வடிப்பாய் ! அந்த கிரியைக்கூட உண்ணிடத்தில் இல்லை! ஆனால் உன் செல்வப் பெருக்கால் தேவன் என்னை ஆசிர்வதித்தார் நல்ல வேலைத்தந்தார் என்று சாட்சி பகர்கிறாயே! II கொரிந்தியர் 8:15 சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடையசெல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.என்ற வசனத்தின்படியே! உன் செல்வம் இல்லாதவர்களை தாங்கத்தக்கதாக இருக்கவே உன்னைத் தேவன் ஆசிர்வதித்தார் ஆனால் உன் கிரியையைப் பார்க்கும் போது மத்தேயு 7:17 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். என்ற வசனத்திற்கு ஏதுவாய் கெட்ட கனி கொடுக்கிறாய்!
இல்லாதவனைக் கண்டு ஐயோ என்னிடத்தில் அவனுக்கு கொடுக்க ஏதும் இல்லையே என்று உண்மைக் கிறிஸ்தவன் புலம்பி தேவனிடத்தில் அழுகிறான் இதை தேவன் உற்றுக் கவனிக்கிறார்.இன்னும் சில உண்மை கிறிஸ்தவர்கள் தன்னால் முடிந்த உதவியை யாருக்கும் தெரியாமல் செய்து தன் வியாகுலத்தை சாந்தப்படுத்துகிறான் இதையும் தேவன் உற்றுக் கவனிக்கிறார்.இப்படிப்பட்ட நற்கிரியைகளை செய்யும் தன் சொந்த பிள்ளைகளைத் தண்ணோடு சேர்த்துக்கொள்ள துடிக்கிறார்.ஆனாலும் இன்னும் சிலர் கைவிடப்படக்கூடாது என்று அவர் வர காலம் தாழ்த்துகிறார்
நீயோ நான் கிறிஸ்தவன் என்று மார்தட்டிக்கொண்டு சமுதாயத்தில் மதிப்பையும் மரியாதையைம் பெற்றுக்கொண்டு உலகத்தின் பார்வையில் தான் தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்ற மாமதையில் உலாவருகிறாய்.
ஓ திக்கற்ற ஜனங்கள் பசியோடும் பட்டினியோடும் புலம்புகிறார்கள் அவர்கள் சத்தம் நித்தம் ஓய்யாமல் அவர் சமுகத்தை எட்டிக்கொண்டே வருகிறது
இதோ இவர்கள் படும் துயரை எண்ணி தேவன் இவர்களுக்காய் தன் மணதில் மணதுருகி கலங்கி அழுகிறார் நீ அவருடைய மனதுருக்கத்தை சுமந்தவனாய் நண்மை செய்யவே இரட்சித்தார் ஆனால் நியோ நன்றிக் கெட்டவனாய் மாறி அப்பாவை அழவைக்கும் பொல்லாதவனாய் மாறிப்போனதென்ன? உன் மாய்மாலத்தால் ஒரு வேளை ஜனங்களை வேண்டுமானால் ஏமாற்றிவிடலாம்! நம் அப்பாவை ஏமாற்றமுடியாது உன்னை உற்றுப்பார்க்கிறார் அவர் உன் மேல் மிகுந்த கோபத்தை உடையவராய் இருக்கிறார்! உனக்கான பரலோக வாழ்கை என்ற நிச்சயத்தை உன் அக்கிரம செய்கையாலும்,சுயநலத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கடைசியில் கைவிடப்படப்போகிறாய்! மனந்திரும்ப இப்போது உண்ணை அழைக்கிறார் தேவன் நீயோ உன் இருதயத்தைக் கல்லுபோல் ஆக்கிக்கொண்டு மீறிச் செல்லுகிறாய் .
உபாகமம் 26:12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு, --ஆனால் நீயோ தசம பாகத்தை எடுத்து லேவியனான ஊழியர்களுக்கு மாத்திரமே கொடுக்கிறாய் , பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் விட்டுவிட்டாயே! ஆதார வசனங்கள் (உபாகமம் 14:22-29), ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்
இன்று படிக்க பணம் இல்லாமலும் ,நல்ல உடைகள் வாங்க பணம் இல்லாமலும்,மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமலும்,படித்தும் வேலை கிடைக்காமலும்,ஆதரவு அற்ற நிலையில் இருக்கும் விதவை பெண்களும்,அநாதையாய் ரோட்டோரத்தில் அலைந்து திரியும் சிறுவர்களும் இரவில் கண்ணீர் சிந்தி இரவு எல்லாம் புலம்பும் போது அது தேவனின் சமுகத்தில் எட்டிவிட்டது ஆனால் இன்றய ஆசிர்வதிக்கப்பட்ட கிறிஸ்தவனோ இவர்கள் படும் துயரை தினந்தோறும் கண்டு தன் இருதயத்தை அவர்களுக்கு அடைத்துக்கொண்டு உல்லாசமாவும்,தன் பிள்ளைப் படிப்புக்காய் இலட்சம் கணக்கில் லஞ்சம் கொடுக்கவும்,போகிறான் இதையும் தேவன் உற்றுப் பார்க்கிறார் கிறிஸ்தவனே நீ ஒரு போதும் தப்ப முடியாது இதோ தேவனின் முகம் உன் மீதுள்ள கோபத்தால் சிவந்துப்போய் இருக்கிறது அவர் வெளிப்படும் போது எப்படித்தாங்குவாய் ? நீ அலறி புலம்புவதற்கு முன்பாய் மனந்திரும்பு! உன் உல்லாச வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து உன் பெலனுக்கு ஏற்றப்படி,ஏழை ஊழியர்களையும், பரதேசிகளையும்,திக்கற்றப் பிள்ளைகளையும்,ஏழைகளையும் நோக்கி உன் முகத்தை திருப்பி உதவி செய்வாயானால் நீ பிளைப்பாய்! கோபத்தோடு இருக்கும் தேவனிடம் நீ ஒருபோதும் போக்குச் சொல்லமுடியாது
-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 11:22:01 PM
__________________
Page 1 of 1 sorted by
இறைவன் -> கிறிஸ்த்தவ வாழ்க்கை! -> மாய்மால கிறிஸ்தவனே உன் மேல் கோபத்தோடு இருக்கும் தேவனிடத்தில் நீ போக்குச் சொல்லமுடியாது