என்பது. ஆனால் ஆண்டவராகிய இயேசு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சகல வியாதிகளையும் நீக்கி சொஸ்தமாக்கினார்.
மத்தேயு 4:23ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும்சகலநோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
சுருக்கமாக சொன்னால் இயேசுவானவர் நிபந்தனைகளுக்குட்பட்ட நியாயப்பிரமானத்தின் ஆசீர்வாதங்க்ளை நிபந்தனை இல்லாமல் இலவசமாக வழங்கினார்.
ஆகினும் நாம் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் இருந்து நோயினில் இருந்து விடுதலை ஆனவர்களுக்கு எல்லாம் மீண்டும் நோய் வராமல் இருக்கிறதா?
இல்லையே! எனக்கு தெரியும் பல கிறிஸ்த்தவர்கள்/ பாஸ்டர்கள் கேன்சர் வியாதிவரை வந்து மரித்துள்ளார்கள்!
பிறகு இயேசு நியாயப்பிரமான கட்டளைகளின் மேல் பயன்படுத்திய தேவ வல்லமை எங்கே போனது ?
அதற்குதான் வெகு தெளிவான பதிலை இயேசு இங்கே சொல்லியிருக்கிறார்:
யோவான் 5:14இதோ, நீ சொஸ்தமானாய், அதிககேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
ஆம் இதன் புரிதல் மிக சுலபம்.
ஆண்டவராகிய இயேசு ஒருவர் வாழ்வினில் வரும்போது அந்த நபர் செய்துள்ள எவ்வித பாவமானாலும் அதற்க்கு நியாயப்பிரமாண கட்டளைப்படி கிடைக்ககூடிய தண்டனையானாலும் அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டு செயலாற்றி எல்லாவித நோய் நொடிகள் சாபங்கள் போன்றவற்றை எவ்வித நிபந்தனையும் இன்றி நீக்கிவிட முடியும்
அனால் அதற்க்கு பின்னரும் பூமியில் வாழும் அந்த நபருக்கு மீண்டும் அதிக கேடுகளும் நோய் நொடிகளும் வராமல் இருக்க அதன்பின்னர் பாவம் செய்ய கூடவே கூடாது
அதிககேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
நியாயப்பிரமாணத்தினால் எவனும் தேவனுக்கு முன்னால் நீதிமானாகிவிட முடியாது என்பது உண்மை! ஆகினும் இயேசுவை ஏற்றுக்கொண்டு நீதிமானாகிய பிறகும் தேவன் கொடுத்துள்ள வாக்கு தத்தமாகிய "சகலநோய்களும் நம்மை விட்டு விலக வேண்டுமானால்" பாவம் செய்ய கூடாது. தேவனின் வார்த்தைகளை கைகொண்டு நடத்தல் அவசியம்.
அப்பாவத்திலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் செய்தால் அதனால் வரும் வியாதிகள் வேண்டுதல் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.
மரணத்துக்கு ஏதுவான பாவம் செய்தால் அதற்க்கு வேண்டுதல் இல்லை.
I யோவான் 5:16 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்று வசனம் மாறாதது தேவ கற்பனைகளை கைகொள்ளாதவர்னுக்குதான் நோய்கள் வரும்.
அதற்க்கு இசைவாக புதிய ஏற்பட்டில் கொடிய நோயாளியை குணமாகிய பிறகு இயேசு சொல்கிறார்
யோவான் 5:14இதோ, நீ சொஸ்தமானாய், அதிககேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
அடுத்து யாக்கோபு சொல்கிறார்
யாக்கோபு 5:14. உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள்கர்த்தருடையநாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
ஒருவன் பரிசுத்தவானா இல்லையா என்பதை தேவன் மட்டும்தான் தீர்மானிக்க முடியும்.
என்னுடைய முந்தைய பதிவில் உள்ளபடி ஒரு சுவீட் பாக்ஸ்ஐ தாராளமாக இன்னொருவருக்கு கொடுக்காத காரணத்தால் எனக்கு ஒரு சிறிய நோய் வந்துள்ளது. தேவனின் பார்வையில் அதுகூட பாவமாக இருக்கிறது
எனவே தேவனின் பார்வையில் பரிசுத்தம் என்பது நம் பார்வையில் தீர்மானிக்க முடியாதது.
-- Edited by SUNDAR on Friday 11th of November 2016 07:13:47 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒருவன் பாவம் செய்த பிறகு தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டால் அவனை மன்னிப்பார் ஆனால் அதட்குரிய தண்டனையை ஆண்டவர் அவனுக்கு கொடுப்பாரா?
அதாவது மன்னித்தாலும் அதட்குரிய தண்டனை உண்டா?
அதாவது இரட்சிக்கப்பட முன் செய்த சகல பாவங்களுக்கும் தண்டனை இல்லை ஆனால் ரட்சிக்கப்பட்ட பின் செய்யும் பாவங்களுக்கு தண்டனை உண்டு.. இது சரியான புரிதலா அண்ணா?
சில நேரங்களில் தேவன் வல்லமையாக பாவிக்கும் ஊழியர்கள் கூட நோய்களினால் மரித்து போகிறார்களே.. இதட்கு என்ன காரணம் ? அவர்களின் பாவமா? அப்படியாயின் அவர்களை ஆண்டவர் வல்லமையாக பயன்படுத்துகிறாரே...
பாவம் செய்த பின்பு மனந்திரும்பி மன்னிப்பு கேட்டால் பரலோகம் போகலாம் ஆனாலும் அதட்கான தண்டனை பூலோகத்தில் இருக்கும் போது ஆண்டவரால் அவர்களுக்கு கொடுக்கப்படும் இது சரியான புரிதலா ?
தேவன் மனிதனை படைத்த போது நோய்கள் இன்றி வாழக் கூடிய இயற்கை அமைப்புடைய சரீரத்துடன் படைத்தார். பூமிக்குள் பாவம் பிரவேசித்த போது (மனிதனின் வீழ்ச்சிக்கு பின் நிலமும்> கால நிலையும்> இயற்கையும் மனிதனின் சரீர அமைப்புகளை சீரழித்தது. அவ்விதமாகவே நோய்கள் மனிதனுக்குள் பிரவேசித்தது.
நாம் யாவரும் சீரழிக்கப்பட்ட சரீர அமைப்பில் குடியிருப்பதால் நாம் இரட்சிக்கப்பட்டாலும் படா விட்டாலும் நோய்கள் தாக்கத்தான் செய்கிறது. ஆனால் இரட்சிக்கப்பட்டவர்கள்விசுவாசத்தில் நோய்களை மேற்கொள்ள முடியும். அது தேவன் கொடுத்துள்ள பாக்கியமாகும்.
பூமிக்குள் பாவம் பிரவேசித்தமைதான் நோய்கள் தோன்றுவதற்கான காரணமாகும். ஒரு மனிதனுக்கு நோய் வந்தால் அதற்கு காரணம் பாவமாக இருக்கலாம். ஆனால் அது மட்டும்தான் காரணம் என்று கூற முடியாது. இவருக்கு நோய் வந்துள்ளது இவர் ஏதோ பாவம் செய்துள்ளார் என்று ஒருவரை நியாயம் தீர்க்க நமக்கு அதிகாரம் இல்லை.
ஒருவர் பாவம் செய்தாலும் செய்யா விட்டாலும் அவருக்குள் நோய்கள் வர முடியும். இல்லாவிட்டால் பாவமறியாத பிஞ்சுக் குந்தைகளை ஏன் நோய்கள் தாக்க வேண்டும்? நோய்கள் தாக்குவதற்கு முக்கிய காரணம் நம்முடைய சரீரத்தில் தேவன் அமைத்த இயற்கை அமைப்புகள் முதல் மனிதனின் பாவத்தினால் சீரழிக்கப்பட்டமையேயாகும். நமது சரீரம் வீழ்ச்சியடைந்த ஆதாமின் சந்ததியில் தோன்றியதாகும். எனவே யாருக்கும் வியாதி வரலாம்
கர்த்தருடைய ஊழியக்காரனான எலிசா வியாதிப்பட்டு மரித்தார். 2இராஜாக்கள்-13:14 அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய்> அவன்மேல் விழுந்து> அழுது: என் தகப்பனே> என் தகப்பனே> இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாயிருந்தவரே என்றான்.
தானியேல் வியாதிப்பட்டார் தானியேல்-8:27 தானியேலாகிய நான் சோர்வடைந்து> சில நாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து> ராஜாவின் வேலையைச் செய்து அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.
பவுலின் உடன் ஊழியர்கள் வியாதிப்பட்டார்கள் பிலி-2:26 அவன் (எப்பாப்பிரோதீத்து) உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும்> தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.
2தீமோ-4:20 எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டு வந்தேன்.
இரட்சிக்கப்பட்டவர்கள் நோய்களின்றி வாழ தேவன் அனுதினம் செய்யும் அற்புதங்களே காரணம். மரணத்துக்கு ஏதுவாக உண்டாகும் நோய்களை தேவன் தம்முடைய மகிமைக்கு ஏதுவாக மாற்றி அற்புதம் செய்வார். யோவான்-11:4 இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். பிலி-2:27 அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு எனக்கும் இரங்கினார்.
நோய்கள் வர ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. 1. சிலவேளை தேவன் நாம் செய்த பாவங்களுக்கு சிட்சையாக நோய்களை அனுமதிக்கிறார். அதுவும் நம்மை சிட்சித்து திருத்தும் நோக்கத்துடனேயே அனுமதிக்கிறார்.
2. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு நோய்கள் வரலாம். • கர்த்தருடைய பிள்ளைகளை பகைக்கிறவர்களுக்கு உபா-7:15 கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.
• இவ் வசனத்தில் எகிப்தியருக்கு வியாதியை வரப்பண்ணிணவர் தேவன் என்று கூறப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளை அடிமைப்படுத்தியிருந்ததால் அனுமதிக்கப்பட்ட வியாதிகளாக இருக்கலாம். யாத்திராகமம்-15:26 நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
• கர்த்தருடைய பெட்டியை கொண்டு சென்றதால் பெலிஸ்தியருக்கு தேவன் மூல வியாதியை கட்டளையிட்டார் 1சாமுவேல்-5:9 அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள் சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும் மூலவியாதியை உண்டாக்கி அவர்களை வாதித்தார்.
3. தகப்பனின் பாவத்துக்காக மகனை தேவன் அடித்து வியாதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் பெற்றோருக்காக பிள்ளைகளை தண்டிப்பதை குறித்து என்னால் ஒன்றையும் காண முடியவில்லை. இதுக்கு ஏதாவது காரணம் இருக்கலாம். 2சாமுவேல்-12:15 அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது. 4. எப்பாப்பிராதீத்து என்னும் பவுலின் உடன் ஊழியகாரன் ஊழியத்தினிமித்தம் வியாதிப்பட்டார். ஊழியத்தினிமித்தம் உடலை கவனியாது ஊழியம் செய்ததால். பிலிப்பியர் 2:30 ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு அவன் தன் பிராணனையும் எண்ணாமல் கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.
5. தேவனுடைய நாம மகிமைக்காக தேவனுடைய கிரியைகள் வெளிப்படும் படி சிலருக்கு வியாதி அனுமதிக்க படுகிறது. (யோவா 9:3) இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு ப்படிப் பிறந்தான். யோவா-11:4 இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
6. பிசாசின் சோதனையாக நோய் அனுமதிக்கப்படுகிறது. யோபு-2:5-7 ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால்; அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார். அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
இப்படி நோய்கள் வர பல காரணங்கள் இருக்கலாம் ஆக நாம் இவற்றிலிருந்து கற்றுக் கொள்வது என்னnடிவனில் மனிதனுக்குள் வியாதி என்பது தோன்ற காரணம் ஆதியில் உண்டான மனுக்குலத்தின் வீழ்ச்சியே. இவன் ஏதோ பாவம் செய்துள்ளான் அதனால்தான் இந்த வியாதி இவனுக்குள் வந்துள்ளது என்று குற்றம் சாட்ட கூடாது.