இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நியாயப்பிரமாணமும் கிருபையும் ஆவியின் பிரமாணமும்


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
நியாயப்பிரமாணமும் கிருபையும் ஆவியின் பிரமாணமும்
Permalink  
 


நியாயப்பிரமாணம் தேவனுக்கு எது பிடிக்கும் என்பதும்,எது பிடிக்காது என்பதும் செல்லுகிற வேத சட்ட புத்தகம். இந்த சட்டத்தை ஒரு மனிதனால் பூரணமாக நிறைவேற்ற முடியாது காரணம் பாவம் என்பது கொலையை எழுத்தின்படி செய்தால் மாத்திரமே கொலை என்ற போக்கில் மனிதர்கள் நினைத்துக்கொண்டார்கள் ஆனால் சகோதரனை காரணமே இல்லாமல் கோபித்துக்கொள்பவனைப் பார்த்தே தேவன் கொலை பாதகன் என்று அவன் இருதயத்தின் தன்மையை அறிந்து தீர்ப்பிடுகிறார்.

அப்படியே எழுத்தின்படி விபச்சாரம் செய்கிறவனையே மனிதன் விபச்சாரம் என்கிறான் ஆனால் தேவனோ ‘ ஒருவன் ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தாலே அவளுடன் விச்சாரம் செய்தாயிற்று என்று தீர்ப்பிடுகிறார்.

 

மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. 

 

மத்தேயு 5:22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;

 

I யோவான் 3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

 

 

ரோமர் 7:1 நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம்அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?

ரோமர் 7:7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.

 

 

 

ஆகையால் தேவன் அவருடைய சட்டத்தை மனிதனின் இருதயத்தில் எழுத நினைத்தார் அதனால் முதலில் பாவத்துக்கான தண்டனையை அவர் சிலுவையில் பெற்றுக்கொண்டு பாவத்தில் தண்டனையில் இருந்து முழு மனுக்குலத்தையும் மீட்டு விடுவித்து தன்னை ஜீவபலியாக கொடுத்து நம்மை கிரயம் கொடுத்து வாங்கிவிட்டார்.

ரோமர் 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 

 

 

இப்போது அவருடைய கிருபையை அனுப்பி தமக்கு சித்தமானவனை தெரிந்துக்கொண்டு அவனுக்குள் கிருபையை அளிக்கிறார் அதன் மூலம் அந்த மனிதனுக்குள் விசுவாசம் உண்டாகிறது .

 

 அப்போஸ்தலர் 10:43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்

 

அந்த விசுவாசம் என் பாவத்துக்காக இயேசு கிறிஸ்துவே தண்டனை பெற்றுக்கொண்டார்

எபிரெயர் 2:9 என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு  என்று எழுதப்பட்டப்படி ,அவர் மரிக்கும்போது என் பளைய மனிசனும் சேர்ந்து மரித்துவிட்டான் அவர் உயிரோடு எழுந்தார் அவருக்குள் என்னுடைய ஜீவனும் உயிரோடு எழுப்பப்பட்டது இனி நான் அல்ல என்னில் இயேசு ஜீவனாக இருக்கிறார் அந்த ஜீவனுக்குள் என்னுடைய ஜீவன் மறைந்திருக்கிறது .

எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

 

 

இனி அவரே எனக்கு பரிசுத்தம்,மீட்புமாக இருக்கிறார் இயேசுவே ஒருமனிதனில் ஜீவனாக இருப்பதால் அந்த ஜீவனில் தேவனுடைய குணம் பண்பு எல்லாம் இருக்கிறது இங்கு நியாயப்பிரமானம் மனதில் எழுதப்பட்டதற்கான அடையளமாக இருப்பினும் அது ஜீவனுக்குள் இருப்பதால் அதையே தேவன் நிறைவேற்றுகிறார்.

 

I கொரிந்தியர் 1:31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

 

 

இப்போது ஜிவனில் இருந்து கிருபையும் சத்தியமும் உண்டாகி நம் ஆவிக்கு பிரமானத்தை கொடுக்கிறது அந்த பிரமானத்தை நிறைவேற்ற கிருபையில் இருந்து தேவனுடைய விருப்பம் மனிதனில் உண்டாகிறது அதே நேரம் அதை நிறைவேற்ற தக்கவிதத்தில் கிருபையில் இருந்து தேவ பெலனும் உண்டாகிறது அதை சத்தியம் உறுதி செய்கிறது .இப்போது ஆவி கட்டளை பிறப்பிக்கிறது அதுக்கு நாம் கீழ்படிவது கீழ்படியாததுமான ஆவிக்குரிய போராட்டம் நம்முடைய மாம்ச எண்ணங்களுக்கும் ஆவிக்கும் உண்டாகிறது .

 

ரோமர் 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

பரிசுத்த ஆவியானவர் அவ்வப்போது நமக்கு சத்தியத்தையும் ஆலோசனையும் கொடுத்து நாம் பரிசுத்தமாக ஜீவிக்க வழிவகை செய்து வழிநடத்துகிறார்.

 

ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்

 

 

இன்னும் சுருகமாக:-

 

நியாயப்பிரமாணம் என்பது தேவனுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை அறிவிக்கிறது. இதை நிறைவேற்ற ஒரு மனிதன் தன் மனதின் பிரமாணத்தால் முயலும் போது அங்கே பெலன் இல்லாது தோற்றுப்போகிறான் அதன் அர்த்தம் மாம்சத்தின்படி நடக்கிறான்.

நியாயப்பிரமாணத்தின் விதிகளை நிறைவேற்ற நாம் ஆவியில் பிறக்கும்போது கிறிஸ்து நமக்குள் ஜீவனாக வருகிறார் இங்கு தேவனுடைய உணர்வை அதன்மூலம் அறிகிறோம் தேவன் எதை விரும்புகிறார் எதை விரும்புவதில்லை என்பதை நம்முடைய ஆவியின் உணர்வில் அதை கிறிஸ்துவின் ஜீவன் மூலமாக பெற்றுக்கொள்கிறோம் அதுவே ஆவியின் பிரமாணம் .ஆக நியாயப்பிரமாணம் எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என்று எழுத்துப்பிரகாரமாக அறிவிக்கிறது அதை நிறைவேற்ற கிறிஸ்துவே நம்மில் ஜீவனாக இருக்கும்போது அவருடைய ஜீவனின் பெலனாகிய கிருபையால் அவற்றை நிறைவேற்றுகிறவர்களாக காணப்படுகிறோம்.

இங்கு நமக்கு கொடுத்த நிபந்தனை கிருபைக்கு கீழ்படிகிற ஒன்றே! கிருபைக்கு கீழ்படிகிறதாவது தேவனுக்கு பிரியமானதை ஆவியின் பிராமணத்தால் அறிந்து தேவனுடைய பெலனை உணர்ந்து அதுக்கு கீழ்படியும்போது ஜெயம் கிடைக்கிறது மாறாக மாம்சத்தில் விருப்பத்துடன் கீழ்படியாமல் இருக்கும்போது தோற்றுப்போகிறோம்.

 

 

 ஒருவனுக்கு தேவன் கிருபை அளிக்கும்போது அவனுக்குள் தேவன் மேல் அன்பும்,விசுவாசமும் உண்டாகிறது.கிருபை என்பது ஒரு புதயல் போன்றது அதற்குள் விசுவாசம் ,இரக்கம்,அன்பு,தயவு,ஞானம் ,வல்லமை ,பெலன் என்று அனைத்தும் இருக்கிறது.

ஆகையால் தேவனுடய கிருபையில்லாமல் ஒருவனாலும் விசுவாசிக்கவும் முடியாது,பரிசுத்தமாக ஜீவிக்கவும் முடியாது.

செயல்பாடு (கிரியை) என்பது இரண்டு வகைப்படும் .

1.நியாயப்பிரமானத்தின்படி நாமே நம்மில் உள்ள மனதின் பிரமாணத்தின்படி செய்வது.சுயமாக நன்மை செய்ய போராடுவது அது கடைசியில் தோல்வியில் முடியும். இதனை வெறும் கிரியை என்றும்

2.நியாயப்பிரமாணத்தில் உள்ளதை நிறைவேற்ற கிறிஸ்துவே நம்மில் ஜீவனாக இருப்பதால் ஜீவனின் குணாதிசயத்தினை ஆவியின் உள் உணர்வினால் பெற்று அவற்றை விசுவாசித்து அதை நிறைவேற்ற தேவனுடைய பெலனை பெற்றும் செய்யவா செய்யக்கூடாதா என்ற மாம்சத்துக்கும் ஆவிக்கும் உள்ள போராட்டத்தில் ஆவியின் பிரமாணத்தின்படி நடக்க நாம் ஒப்புக்கொள்ளும்போது ஜெயம் உண்டாகிறது.இதைத்தான் பொதுவாக கிருபைக்கு கீழ்படிவது என்பதாகும். 
இதனை கிருபையின் நற்கிரியை என்றும் அழைக்கப்படுகிறது.


I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: நியாயப்பிரமாணமும் கிருபையும் ஆவியின் பிரமாணமும்
Permalink  
 


johnsondurai wrote:

 

செயல்பாடு (கிரியை) என்பது இரண்டு வகைப்படும் .

1.நியாயப்பிரமானத்தின்படி நாமே நம்மில் உள்ள மனதின் பிரமாணத்தின்படி செய்வது.சுயமாக நன்மை செய்ய போராடுவது அது கடைசியில் தோல்வியில் முடியும். இதனை வெறும் கிரியை என்றும்

2.நியாயப்பிரமாணத்தில் உள்ளதை நிறைவேற்ற கிறிஸ்துவே நம்மில் ஜீவனாக இருப்பதால் ஜீவனின் குணாதிசயத்தினை ஆவியின் உள் உணர்வினால் பெற்று அவற்றை விசுவாசித்து அதை நிறைவேற்ற தேவனுடைய பெலனை பெற்றும் செய்யவா செய்யக்கூடாதா என்ற மாம்சத்துக்கும் ஆவிக்கும் உள்ள போராட்டத்தில் ஆவியின் பிரமாணத்தின்படி நடக்க நாம் ஒப்புக்கொள்ளும்போது ஜெயம் உண்டாகிறது.இதைத்தான் பொதுவாக கிருபைக்கு கீழ்படிவது என்பதாகும். 
இதனை கிருபையின் நற்கிரியை என்றும் அழைக்கப்படுகிறது.

 


சுருக்கமாக தெளிவான விளக்கங்கள். நியாய்ப்பிரமாண த்துக்கு மரித்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு துணிந்து பாவம் செய்ய தேவன் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை.

 
தேவ பெலத்துடன் பாவத்தை எதிர்த்து போராட வேண்டும்.
 
பிரெயர் 12:4 பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. 

  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard