யூதாஸ் - உலகை உண்டாக்கியவர் பின்னால் அலைந்தும் உலக மாயையால் இழுக்கபட்டு பண ஆசையால் வீழ்ந்தான்
லூசிபரோ - உலகமே தன்னை ஆராதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தன்னைதானே உயர்த்தி பெருமையால் வீழ்ந்தான்
30 வெள்ளி காசுக்காக ஆண்டவரை கட்டிகொடுத்த யூதாசானவன் இயேசு மரண ஆக்கினைக்கு தீர்க்கபட்டார் என்பதை அறிந்த பின்னராவது உணர்வு வந்து "குற்றமற்ற இரத்தத்தை காட்டி கொடுத்தேன்" என்று மனம் கசந்து வருந்தினான்.
அனால் தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்துவேன் என்று சிந்தித்த அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியோ இன்றுவரை கொஞ்சமும் உணர்வடையாமல் தேவனுக்கு எதிர்த்து நின்று மேலும் மேலும் கடினமான நிலைக்கே சென்றுகொண்டு இருக்கிறான்.
இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?
உலகத்தின் பின்னாலும் பணத்தின் பின்னாலும் ஓடும் ஜனங்கள் ஒருநாள் உணர்வடைந்து ஆண்டவரிடம் திரும்பி வந்துவிடலாம்
ஆனால்
உள்ளுக்குள்ளே தன்னை பெரியவன் / எல்லாம் அறிந்தவன் என்று எண்ணிக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு தன்னை தானே உயர்த்திக்கொண்டு திரிபவர்கள் கடைசிவரை மனம்திரும்ப வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. காரணம் அவர்கள் தேவனுக்கு அருவருப்பான நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே லூசிபருக்கு ஊழியம் செய்கிறார்கள்.
பணத்தின் பின்னால் ஓடி பின்னர் மனம்திரும்பி
மத்தேயு 27:4குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்
என்று புலம்பிய யூதாசுக்கே மன்னிப்பு கிடைக்காமல் நான்று கொண்டு செத்தான் என்று வேதம் சொல்லும் பட்சத்தில்
மனம்திரும்ப வேண்டிய அவசியத்தை அறியாமல் தங்கள் இருதயத்தை கடினமக்கிகொண்டு தன்னை தானே உயர்த்திக்கொண்டு திரியும் லூசிபர்களுக்கு மன்னிப்பு எவ்வளவு தூரமாகி போகும் என்பதை எண்ணி உணர்வடைவோம்.
எந்நிலையிலும்/ நம் இருதயத்தில்கூட நம்மை உயர்த்த வேண்டாம். ரோட்டில் அமர்ந்து பிச்சை கேட்டுகொண்டிருக்கும் ஒரு குஷ்டரோகியைவிட எவ்விதத்திலும் நாம் மேலானவர்கள் இல்லை. அவருக்கு வந்த குஷ்டம் நமக்கு வராது எனபதற்கு எந்த நிச்சயமும் இல்லை.
தன்னை தானே உயர்த்தி தேவனுக்கு மகிமையை செலுத்தாத ஏரோது புழுப்புழுத்து செத்ததை நினைவில் வைப்போம்.
உணர்ந்து மனம்திரும்புவோம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)