எனக்கு தெரிந்து விசுவாசியாக இருந்த ஒரு பாஸ்டர் சுமார் 5 மாதங்களுக்கு முன்பாக ஒரு சபையை வீட்டில் ஆரம்பித்தார் இரண்டே மாதத்தில் வீடு கொள்ளாமல் ஜனங்கள் வரவே மேல் மாடியை பெரிதாக்கி ஒரு பெரிய சபையாக நிறுவினார். அடுத்த மூன்று மாதத்தில் அந்த இடமும் புல்லாகி விட்டது ஜனங்கள் குடும்பம் குடும்பமாக வந்து அந்த சபையில் குவிநதுகொண்டே இருக்கிறார்கள்.
காரணம்
அவர் கைவைத்து ஜெபித்தால் அநேகர் கீழே விழுந்து விடுகிறார்கள் சும்மா சொல்ல கூடாது அவர் ஆராதனை செய்யும் போது உள்ளிருக்கும் ஆவிகள் "இங்கு ஏன் வந்தாய்" என்று சொல்லிவிட்டு ஓடுகிறது. எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு சொல்கிறார். அனேக அதிசய காரியங்கள் நடப்பதால ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லி சபைக்கு ஆத்துமாக்கள் வந்து குவிகிறது. ஒருமுறை வந்தவர்கள் பின்னர் அந்த சபையை விட்டு போவதில்லை
இன்னொருபுறம் பார்த்தால்:
மாதம் சுமார் 5 லட்சம் சம்பளம் வாங்கி சுக போகமாக வாழ்ந்தவர் பின்னர் கேன்சர் நோயால் பாதிக்கபட்டு சாவின் விளிம்புவரை சென்று இயேசுவால் பிரத்திட்ச்சமாக குணமாக்க பட்டு அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவருக்காக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சபையை ஆரம்பித்தவர் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகியும் சபையில் இரண்டே குடும்பங்கள்தான் வருகிறது
காரணம்
அவர் பேசுவது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் நீதியாக நடக்க வேண்டும் உத்தமனாய் வாழ வேண்டும் தேவனின் வார்த்தைகளை கைகொண்டு நடக்க வேண்டும் பொய் சொல்ல கூடாது என்பதுபோன்ற போதனைகள்தான்.
இன்றைய ஜனங்கள் ஏதாவது ஒரு அதிசய அற்ப்புதத்தை எதிர்பார்த்தே சபைக்கு வருகிறார்களேயன்றி உண்மை நேர்மையாக நடந்து தேவனுக்கு பிரியமாக வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. எனவே அதுபோன்ற வரம் உடையவர்கள் சீக்கிரம் பெரியாளாகி விடுகிறார்கள். உண்மை நேர்மை என்று சொல்பவர்கள் என்றுமே
பின்தங்கி விடுகிறார்கள் அவர்களை ஆத்துமாக்களை ஆதாயம் செய்வது ஏறக்குறைய முடியாத ஒரு காரியமாகவே இருக்கிறது.
தேவன் எதை எதிர்பாக்கிறார்?
அற்ப்புத அதிசயத்தை பார்த்து வரும் ஒரு பெரிய கூட்டத்தையா?
அல்லது
உண்மை நேர்மையை வாஞ்சித்து வரும் ஓரிரு ஆத்துமாக்களா
தேவனுக்கு எது முக்கியம்?
எகிப்த்தில் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை தேவன் வெளியில் கொண்டு வரும்போது எகிப்த்தியரை வாதையினால் அடித்து செங்கடலை பிளந்து /யோர்தானை நிறுத்தியது போன்று தேவன் செய்த அற்ப்புதங்களைவிட பெரிய அற்ப்புதங்களை யாரும் செய்துவிட முடியாது. அனால் அவைகளை கண்ணார கண்ட இஸ்ரவேல் ஜனங்களில் வெறும் இரண்டே பேர் மட்டும்தான் கானானுக்குள் பிரவேசித்தார்கள் என்பது தெரியும்.
நமக்கு திருஷ்டாந்திரமாக இருக்கும் இந்த சம்பவம் வெறும் அற்ப்புதம் அதிசயங்களால் ஒருவர் மனதை தேவனுக்குள் நிலை நிற்க வைப்பது சாத்தியமல்ல என்பதையே நமக்கு விளக்குகிறது
-- Edited by SUNDAR on Friday 28th of August 2015 03:39:42 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)