நீயா? நானா? என்ற போட்டி என்பது மனுஷர்களுக்குள் சகஜம்! தான் பெரியவன் என்பதை நிரூபிக்க மனுஷர்களுக்குள் நடக்கும் போட்டிகள் பொறாமைகள் ஏராளம்
உன் கோழியா அல்லது என்கோழியா என்பதை பார்க்க கோழி சண்டைகளும்
உன் மாடு பெரியதா அல்லது நான் பெரியவனா என்பதை பார்க்க ஜல்லிகட்டுகளும்
உன் நாடா அல்லது என் நாடா என்பதை பார்க்க இராணுவங்களும்
உன் பிள்ளையா அல்லது என் பிள்ளையா என்பதை பார்க்க பட்ட பட்ட படிப்புகளும
இன்னும் அனேக போட்டிகளும் உலகத்தில் உண்டு!
ஆனால் தேவனோ இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்!
ஆகினும் சாத்தான் என்னும் கொடிய சத்துரு வந்து சன்மார்க்கனான தன தாசனை சங்கடங்களால் சோதிக்க/ வாதிக்க விளையும்போது சர்வவல்ல தேவன் மறுப்பேதும் சொல்லாமல் சம்மதிக்க காரணம் என்ன?
அதற்க்கான அவசியம்தான் என்ன?
இங்கும் நீயா நானா போட்டியா? அல்லது யார் பெரியவர் என்ற போட்டியா?
அல்லது வேறு ஏதாவது விசேஷ காரணம் உண்டா? அறிந்தவர் விளக்கம் தாருங்களேன்.
சாத்தான் மனுஷ கொலை பாதகன் என்பதும் பொய்யன் என்பதும் தேவனுக்கு நன்றாகவே தெரியும்.
பிறகு ஏன் சாத்தான் கேட்டவுடன் யோபுவை அவன் கையில் சோதனைக்கு ஒப்புகொடுக்கிறார்? அவன் கேட்டபடிஎல்லாம் செய்ய அனுமதிக்கிறார்?
உலக நடைமுறையில் அப்படி ஒரு கொடியவன் கையில் நம் பிள்ளையை நாம் ஒப்பு கொடுப்போமா? ஆனால தேவனோ தான் சத்துரு என்று சொல்பவனிடம் எந்த மறுபேச்சும் இல்லாமல் ஒப்பு கொடுக்கிறார். அவனும் யோபுவை கொடிய வாதைகளால் புரட்டி எடுக்கிறான்.
சோதனையின் முடிவை பார்த்தால்.
யோபுவையும் அவனின் நண்பர்களையும்தான் தேவன் கேள்விகேட்கிராறேயன்றி அத்தனையையும் செய்ய தூண்டிய சாத்தான் பக்கவழியாக புகுந்து எங்கோ போய்விட்டான். அதற்க்கு பின்னர் அவனை காணவே இல்லை.
இது என்ன முறைமை?
தேவன் செய்வதால் நியாயமான காரணம் நிச்சயம் இருக்கும் என்பது நான் அறிந்ததே. அந்த நியாயமான காரியம் என்னவென்பதை அறிந்து கொள்ள முயற்ச்சிக்கலாமே.
-- Edited by SUNDAR on Friday 11th of September 2015 06:58:30 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சொந்த சகோதரர்களால் வெறுக்கப்பட்டும், பாடுகளையும், துன்பங்களையும், தீமைகளையும் அனுபவித்த யோசேப்பு பின்னாளில் அதெல்லாம் ஏன் என்று உணர்ந்து கொள்கிறார், தன் சகோதரர்களிடத்தில் சஞ்சலப்படவேண்டாம் என்கிறார். தேவனுக்கும் நன்றி சொல்லியிருப்பார்.
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். ஆதியாகமம் 45:5
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.ஆதியாகமம் 50:20
அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.புலம்பல் 3:33
தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். யோபு 36:5
அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் <<<<<தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.>>>>> ரோமர் 8:28
இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.... ரோமர் 8:18
சகோ. இளங்கோ நீங்கள் நிதானித்து அறிந்தது சரியான உண்மைதான் "எதோ ஒரு நன்மையான காரணம் இருக்கும்" என்பதுதான் நம் அனைவரின் விசுவாசம்.
இந்த சம்பவம் நடந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. வெளியரங்கம் ஆகாத ரகசியம் எதுவும் இல்லை என்றுவேறு இயேசு சொல்லியிருக்கிறார். எனவே இந்நாட்களில் அதற்க்கான உண்மைகள் அறியபட்டிருக்க வேண்டும்.
யோசேப்பின் பாடுகள் அவன் சகோதரர்கள் ஜீவனுக்கு பயன்பட்டது போல யோபுவின் பாடுகளால் யாருக்கு என்ன என்ன பயன் உண்டானது? என்பதை அறியவேண்டியது அவசியம்.
ஏதாவது நன்மை இருக்கும் என்று விட்டுவிட்டு செல்வதைவிட அங்கே ஒளிந்திருக்கும் உண்மை என்னவென்பதை நாம் அறிந்தால் தேவனை பற்றிய இன்னும் அனேக உண்மைகளையும் தேவனை அறியும் அறிவில் வளரவும் முடியும் என்றே இந்த பதிவை தந்துள்ளேன்.
யோசேப்பின் சம்பவம் என்பது எந்த ஒரு தீய மனுஷன் செய்யும் ஒரு தீமையான காரியத்தைக்கூட தேவன் நன்மையாக மாற்றிவிட முடியும் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.
ஆனால் இங்கு யோபுவை உத்தமன் என்று சொன்ன சர்வ வல்ல தேவனே நேரடியாக அவனை சாத்தானின் கையில் சோதனைக்கு ஒப்புகொடுக்கிறார்.
தேவனே உத்தமன் சன்மார்க்கன் என்று சாட்சி கூறும் ஒருவனை "தேவன் ஒரு பூச்சை நசுக்குவதுபோல் நசுக்கிவிடுவார்" என்று பலரால் சொல்லப்படும் சாத்தனின் கையில் ஒப்புகொடுத்து யோபு நல்லவன்தான் என்று அவனுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ?
"என் தாசன் யோபு உத்தமன் பாத்தியா" என்று சொல்லி பெருமைபட்டுகொள்ளவா? என்பதே எனது கேள்வி. என்பதே எனது கேள்வி.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
////////சாத்தான் மனுஷ கொலை பாதகன் என்பதும் பொய்யன் என்பதும் தேவனுக்கு நன்றாகவே தெரியும். பிறகு ஏன் சாத்தான் கேட்டவுடன் யோபுவை அவன் கையில் சோதனைக்கு ஒப்புகொடுக்கிறார்? அவன் கேட்டபடிஎல்லாம் செய்ய அனுமதிக்கிறார்? ////////
அவன் கேட்டபடியெல்லாம் செய்ய ஒப்புக் கொடுத்தார் என்பதை விட தேவன் ஒரு வரையறையுடனேயே சோதிக்கும் அனுமதி கொடுத்தார் என்பதே சரி.
///////உலக நடைமுறையில் அப்படி ஒரு கொடியவன் கையில் நம் பிள்ளையை நாம் ஒப்பு கொடுப்போமா? ஆனால் தேவனோ தான் சத்துரு என்று சொல்பவனிடம் எந்த மறுபேச்சும் இல்லாமல் ஒப்பு கொடுக்கிறார். அவனும் யோபுவை கொடிய வாதைகளால் புரட்டி எடுக்கிறான்.///////
நாம் ஒப்புக் கொடுக்க மாட்டோம் என்பது சரிதான். ஏனென்றால் நம்மை மீறி எதுவும் நடக்கக் கூடும். ஆனால் தேவனை மீறி எதுவும் நடக்காது. அதனால் அவர் பயமின்றி ஒப்புக் கொடுப்பார்.
--------------------------------- சாத்தான் யோபுவை சோதிப்பதற்கு தேவனிடம் அனுமதி கேட்டவுடன் தேவன் ஒத்துக் கொண்டதற்கு பின்னணியில் 3 காரணங்கள் இருந்ததாக நான் நினைக்கிறேன்.
1. அனுபவ சாட்சி
யோபுவின் வாழ்வில் நடந்த காரியங்கள் நம்முடைய வாழ்விற்கு மிகவும் சிறந்த அனுபவ சாட்சியாக அமைகிறது. தேவன் இந்த உலகில் வாழும் பல கோடி மக்களுக்கு தெளிவான அனுபவ சாட்சியாக தம்முடைய பரிசுத்தவானின் வாழ்வை பயன்படுத்தினார். என்று எடுத்துக் கொள்ளலாம். சாத்தானின் சோதனையை இதற்கு ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த நினைத்தார் என்று கருதுகிறேன்.
சிலருக்கு சில பாடங்களை கற்றுக் கொடுக்க தேவன் தம்முடைய மனிதர்கள் சிலரை பாடுகளின் பாதைகளுக்கூடாய் நடத்துவதுண்டு. முடிவில் அவர்களுக்கு அதற்கான பலனை கொடுப்பார்.
வேதத்தில் இதை காணலாம். தம்முடைய மக்களுக்கு சில காரியங்களை கற்பிக்க ஓசியா தீர்க்கதரிசியின் வாழ்வை பயன்படுத்தியதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். ஓசியா விரும்பியோ விரும்பாமலோ ஒரு சோரஸ்திரீயை கல்யாணம் பண்ண வேண்டியிருந்தது. இங்கே ஓசியாவின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. (ஓசியா 1ம் 3ம் அதிகாரங்கள்)
எரேியாவையும் இவ்வாறு பயன்படுத்தினார். எரேமியாவுக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லாமலிருந்திருக்குமா? ஆனால் பண்ணக் கூடாது என்று தேவன் தடுத்து விட்டார்(எரேமியா-16:2).
இது போலவே யோபுவுக்கு பிசாசு கொண்டு வந்த சோதனையையும் தேவன் மக்களுக்கு படிப்பினயாக பயன்படுத்த திட்டமிட்டு பிசாசுக்கு அனுமதிகொடுத்திருக்கலாம். யோபு நல்ல பாடமாக அமைவார் என்ற நம்பிக்கை யோபுவின் மேல் அவருக்கு இருந்தது.
யோபுவின் வாழ்க்கை சரிதையை வாசித்து பாடுகளின் பாதையில் தேற்றப்பட்டோர் பலகோடி. யோபு சரித்திர நூலை கொண்டு தேவன் பலகோடி மனிதர்களை மனந்திருப்பியிருக்கிறார்.
2. இரட்டிப்பான ஆசீர்வாதம்
தேவன் யாருக்கும் ஆசீர்வாதங்களை கிரயம் செலுத்துதலின்றி கொடுப்பதில்லை. எந்தவொரு அசீர்வாதமும் இலவசமாக சும்மா கிடைக்காது. எல்லாவற்றுக்கும் நிபந்தனைகளுண்டு.
பிசாசு யோபுவை சோதிக்க அனுமதி கேட்ட போது யோபுவுக்கு தாம் கொடுக்க விரும்பும் இரட்டிப்பான ஆசீர்வாதத்துக்கு யோபு செலுத்தும் கிரயமாக இது இருக்கட்டுமே என்று தேவன் அந்த சோதனையை கருதியிருப்பார்.
யோபு இரட்டிப்பான ஆசிர்வாதங்களை பெற்றுக் கொள்வதற்கான கிரயமாக அவருக்கு வந்த பாடுகள் காணப்பட்டது. பாடுகளை சகித்து அசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்.
பிசாசு யோபுவை அழிக்கும் நோக்குடன் அனுமதி கேட்டான். தேவனோ யோபுவை ஆசீர்வதிக்கும் நோக்குடன் அனுமதி கொடுத்தார். ஏனென்றால் தேவன் நல்லவர்.
3. பாடம் கற்றுக் கொடுக்க
யோபுவுக்கு வந்த சோதனையானது யோபுவுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. மனிதன் யாரென்று யோபு பாடுகளின் போதுதான் கற்றுக் கொண்டார். மனைவியின் விசுவாச நிலை எப்படிப்பட்டது என்று நன்கு புரிந்து கொண்டார். நண்பர்களின் அன்பு எப்படிப்பட்டது என்பதை அறிய முடிந்தது. தன்னைக்குறித்து மீண்டும் பரிசோதித்து அறிய முடிந்தது. ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைப்பது வீண் என்று புரிந்திருப்பார். தேவனை சார்ந்து கொள்ள கற்று கொண்டார்.
நாமும் நன்றாயிருக்கும் போது கற்றுக் கொள்ளும் பாடங்களை விட பாடுகளின் போதுதான் நிறைய கற்றுத் தேறுகிறோம்.
யோபுவுக்கு பிசாசு கொண்டு வந்த சோதனை யோபுவுக்கு பல விடயங்களை கற்றுக் கொடுக்கும் என்று தேவன் தெரிந்திருந்ததினால் அந்த சோதனையை தேவன் அனுமதித்தார்
எனக்கு தெரிந்தது இவ்வளவுதான். இன்னும் பல நன்மைகள்இந்த சோதனைக்கு பின்னால் இருக்கலாம்.
நல்லது சகோதரி. வேதத்தில் உள்ள எந்தவொரு ஆசிர்வாதம் கூட நிபந்தனையின்றி கொடுக்கப்படவில்லை. எல்லா ஆசீ்ர்வாதங்களுக்கும் ஏதோவொரு காரியம் நம்மிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. நம்மிடம் எதுவும் எதிர்பார்க்காமல் தேவன் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதம் ஏதாவது ஒன்றையாகிலும் முடிந்தால் வேதத்திலிருந்து காட்டுங்கள்.
வேத்தில்நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றிற்கும் முன்பு அதற்கான நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேதத்தில் எந்தவதொரு ஆசிர்வாவாதமான வாக்குத்தத்தத்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கு நிபந்தனை இருந்தேயாகும்.
உதாரணத்துக்கு 91ம் சங்கீதத்தின் ஆசீர்தவாதங்களை ஒருவன் பெற வேண்டுமானால் அவன் கர்த்தரின் அடைக்கலத்துக்குள் இருப்பவனாயிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையுண்டு. வெளியில் நிற்பவனுக்குஅதிலுள்ள எந்தவொரு ஆசீர்வாதமும் கிடைக்காது.
நமக்கு இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பு என்னும் ஆசீர்வாதத்தை பெறுவதற்கே நாம் விசுவாசிக்க வேண்டும் என்னும் நிபந்தனையுண்டு.
மத்தேயு 5 இலுள்ள பாக்கியவசனங்களை தியானித்து பார்த்தால் இயேசு சொல்லும் ஒவ்வொரு ஆசீர்வாதத்துக்கும் நிபந்தனையை காணலாம்.
உபாகமம்28 இலுள்ள ஆசீர்வாதங்களை பெறுவதற்கான நிபந்தனைகள் அவ்வதிகாரத்தின் 1,2 வசனங்களில் உண்டு.
பரலோகம் போவதுதானே மிகப் பெரிய ஆசீர்வாதம் அந்த ஆசீர்வாதத்தை தேவன் எதையும் எதிர்பார்க்காமல் கொடுப்பார் என்றால் நாம் ஏன் இவ்வளவு பாடுகளை அனுபவிக்க வேண்டும். எப்படி வாழ்ந்தாலும் கொடுத்து விடலாம் அல்லவா?
பாவ மன்னிப்பு என்னும் ஆசீர்வாதம் கிரயம் இன்றி கிடைக்கும் என்றால் இயேசு ஏன் இரத்தம் சிந்த வேண்டும். தேவன் சும்மா நம்மை மன்னித்திருக்கலாமே?
எலியாவின் வரத்தை எலிசா இரட்டிப்பாய் பெறுவதற்கு மிக கஷ்டமான ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதுதான் எலிசாவின் கிரயமாக இருந்தது.
அவனவனுடைய கிரியைகளுக்கு தக்க பலனை கொடுப்பவர்.
எனவே தேவன் எதையும் எதிர்பார்க்காமல் ஆசீர்வதிப்பவர் என்பது ஏற்புடையதல்ல. மற்றும் அவருடைய எதிர்பார்ப்புகள் எதுவுமே அவருடைய இலாபத்துக்கல்ல. நம்முடைய நன்மைக்கே.
ஆனால் நிபந்தனைகள் இருக்கலாம் அதை ஏற்று கொள்ளலாம் ஏனெனின் ஆண்டவரின் கட்டளைகளுக்கு கீழ் படியும் போது தான் அவர் கூறிய ஆசீர்வாதங்கள் நமக்கு கிடைக்கின்றன.. ஆனால் நாம் பாவம் செய்து அவரை விட்டு விலகி போன நேரங்களில் நம்மை தேடி வந்த அந்த அன்பு நமது கிரியையில் நிமித்தம் அல்ல மாறாக நம்மேல் அவர் வைத்த அன்பு தான் அவரை இறங்கி வர செய்தது..
நிபந்தனைகள் வேறு கிரயம் வேறு
அதாவது யோபிட்கு ஆண்டவர் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பதட்காக தான் யோபு அவ்வளவு துன்பப்பட்டார் என்பதும் அதட்காகத்தான் ஆண்டவர் அதை அனுமதித்தார் என்ற அனுமானமும் எனக்கு சரியாக படவில்லை
ஒரு சாதாரண மனுஷன் கூட இவ்வாறான காரியத்தை செய்ய யோசிக்க கூடும் இப்படி இருக்க அன்பு என்ற சொல்லுக்கே அர்த்தமாகிய நமது தேவன் ஒரு ஆசீர்வாதத்தை கொடுப்பதட்க்காக தன் மகனை இவ்வாறு துன்பப்படுத்தமாட்டார்...
தாங்கள் கூறிய மற்ற விடயங்கள் காரணமாக இருக்க கூடும் ஆனால் இது அல்ல என்பதே எனது கருத்து அண்ணா.
சகோதரி கிரயம்செலுத்துதல் இன்றி மனிதன்ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள முடியது என்பது வேதத்தில் வாசித்தறிந்தளவில் என்னுடைய கருத்து. உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. ஏதாவது அதார வசனம் இருந்தால் தெளிவாக தெரியப்படுத்துங்கள். நான் எதையும் வாதாடி நிருபிக்குமளவுக்கு புத்திசாலியல்ல.
ஆபிரகாமை தேவன் ஆசீர்வதிப்பதாக கூறினார். அதற்கு அவர் கொடுத்த கிரயம் தன்னுடைய சொந்தபந்தங்களை விட்டு தேவன் காட்டிய இடத்துக்கு போக வேண்டியிருந்தது. யாக்கோபை தேவன் அசீர்வதிப்பதாக கூறினார். யாக்கோபு லாபானின் மந்தைகளிடம் கஷ்டப்பட்டு உழைத்தே அந்த ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. யோசேப்பை தேவன் உயர்த்துவதாக வெளிப்படுத்தினார். அதற்கு யோசேப்பு கிரயம் செலுத்தாமல் சும்மா வீட்டிலிருந்து கொண்டு அந்த ஆசீர்வாதத்தை பெறவில்லை.
உங்களையும் என்னையும் தேவன் ஆசி்வதிப்பதாக கூறினாலும் நாம் கஸ்டப்பட்டு படித்து உழைத்துதான் தேவனுடைய அந்த ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.
மிகப் பெரிய ஆசீர்வாதமான பரலோக பாக்கியத்தை பெறுவதற்கு எவ்வளவு பெரிய கிரயம் கொடுக்க வேண்டியுள்ளது.
மேலும் சகோதரி தாங்கள் கூறியது....///நாம் பாவம் செய்து அவரை விட்டு விலகி போன நேரங்களில் நம்மை தேடி வந்த அந்த அன்பு நமது கிரியையில் நிமித்தம் அல்ல மாறாக நம்மேல் அவர் வைத்த அன்பு தான் அவரை இறங்கி வர செய்தது..///
இக்கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவர்கொடுத்த இரட்சிப்பை பாதுகாக்கவும் அதில் வளரவும் நாம்கிரயம் செலுத்த வேண்டியதில்லையா?
/////நிபந்தனைகள் வேறு கிரயம் வேறு///// நிபந்தனைகளை நிறைவேற்றுவது கிரயம் தான் சகோதரி.
////அதாவது யோபிட்கு ஆண்டவர் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பதட்காக தான் யோபு அவ்வளவு துன்பப்பட்டார் என்பதும் அதட்காகத்தான் ஆண்டவர் அதை அனுமதித்தார் என்ற அனுமானமும் எனக்கு சரியாக படவில்லை //// சகோதரி நான் அதுதான் காரணம் என்று கூறவில்லை. அதற்காக தான் அனுமதித்தார் என்றில்லை. அவர் பிசாசின் சோதனையை யோபுவுக்கான ஆசீர்தாதத்துக்காக பயன்படுத்தியிருக்கலாம் என்றுதான்சொன்னேன்.
////தாங்கள் கூறிய மற்ற விடயங்கள் காரணமாக இருக்க கூடும் ஆனால் இது அல்ல என்பதே எனது கருத்து அண்ணா. //// சரி சகோதரி தங்கள் கருத்தை மதிக்கிறேன்.
தேவன் யாருக்கும் ஆசீர்வாதங்களை கிரயம் செலுத்துதலின்றி கொடுப்பதில்லை. எந்தவொரு அசீர்வாதமும் இலவசமாக சும்மா கிடைக்காது. எல்லாவற்றுக்கும் நிபந்தனைகளுண்டு.
பிசாசு யோபுவை சோதிக்க அனுமதி கேட்ட போது யோபுவுக்கு தாம் கொடுக்க விரும்பும் இரட்டிப்பான ஆசீர்வாதத்துக்கு யோபு செலுத்தும் கிரயமாக இது இருக்கட்டுமே என்று தேவன் அந்த சோதனையை கருதியிருப்பார்.
யோபு இரட்டிப்பான ஆசிர்வாதங்களை பெற்றுக் கொள்வதற்கான கிரயமாக அவருக்கு வந்த பாடுகள் காணப்பட்டது. பாடுகளை சகித்து அசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்.
பிசாசு யோபுவை அழிக்கும் நோக்குடன் அனுமதி கேட்டான். தேவனோ யோபுவை ஆசீர்வதிக்கும் நோக்குடன் அனுமதி கொடுத்தார். ஏனென்றால் தேவன் நல்லவர்.
////அதாவது யோபிட்கு ஆண்டவர் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பதட்காக தான் யோபு அவ்வளவு துன்பப்பட்டார் என்பதும் அதட்காகத்தான் ஆண்டவர் அதை அனுமதித்தார் என்ற அனுமானமும் எனக்கு சரியாக படவில்லை //// சகோதரி நான் அதுதான் காரணம் என்று கூறவில்லை. அதற்காக தான் அனுமதித்தார் என்றில்லை. அவர் பிசாசின் சோதனையை யோபுவுக்கான ஆசீர்தாதத்துக்காக பயன்படுத்தியிருக்கலாம் என்றுதான்சொன்னேன்.
யோபுவுக்கு தாம் கொடுக்க விரும்பும் இரட்டிப்பான ஆசீர்வாதத்துக்கு யோபு செலுத்தும் கிரயமாக இது இருக்கட்டுமே என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் அதை தான் நான் கூறினேன்...
__________________
Page 1 of 1 sorted by
இறைவன் -> விவாதங்கள் -> தேவனுக்கும் சாத்தானுக்கும் நீயா நானா? போட்டியா?