இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெளி 1:10-11 - விளக்கம்


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
வெளி 1:10-11 - விளக்கம்
Permalink  
 


வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை.
-(Pr.Charles MSK)

வெளி
1 அதிகாரம்

வசனம் 10

10.கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

விளக்கம்:-

கர்த்தருடைய நாள் என்பது வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

யூதர்களின் ஓய்வு நாளான சனிக்கிழமையில் சபை கூடி வராமல் கர்த்தருடைய நாளான ஞாயிற்றுக் கிழமையில் கிறிஸ்துவ சபை ஒன்றுக்கூடி ஆராதித்து வந்தனர் (அப் 20:6-7).

அப்போஸ்தலர்
20 அதிகாரம்

6. புளிப்பில்லா அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.

7. வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.

உலகெங்கும் இருந்த சபையினர் கூடி வருகின்ற அந்நாளில் தனியாக இருந்த யோவான் தேவனுடன் ஜெபத்தில் ஊக்கமாக தரித்திருந்தார் என கருதலாம்.

வெளிபடுத்தின விசேஷம் அருளப்பட்டது கர்த்தருடைய நாளான வாரத்தின் முதற்நாளான ஞாயிற்றுக் கிழமையில் தான்.

கர்த்தருடைய நாளில் நாம் ஒங்காக சபைக்கு போகிறோமா....?

ஆவிக்
குள்ளாகிறோமா...?

ஆவியில் ஜெபிக்கிறோமா....?

ஆவியானவரின் உதவியால் ஆத்தும ஆதாயம் செய்கிறோமா...?

சிந்திப்போம் செயல்படுவோம்.

வசனம் 11

11. அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

விளக்கம்:-

இவ்வசனத்தில் பேசியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை வச.11-18 வரையிலான பகுதியை வாசிக்கும் பொழுது அறிந்துக் கொள்ளலாம்.

இவரும் வெளி 1:8 மற்றும் வெளி 21:6 ல் பிதா கூறியிருப்பதை போன்று நான் அல்பாவும் ஒமேகாவும் முந்தினவரும் பின்னிதவருமாய் இருக்கிறேன் என்று கூறினார்.

கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர் என்பதை இந்த வசனங்களை ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துக்கொள்ள முடியும்.

ஒப்பிட்டு பார்க்க இதோ அந்த வசனங்கள்:

இயேசு கூறியது:

அதிகாரம் 1

11. அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

பிதா கூறியது:

அதிகாரம் 1

8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ளகர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

வெளி
21 அதிகாரம

6. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

வார்த்தை எழுத்துகளாலானது. எனவே தேவனுடைய வார்த்தை அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறது (யோவா 1:1-2; வெளி 19:13).

யோவான்
1 அதிகாரம்

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

வெளி
19 அதிகாரம்

13. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம்தேவனுடைய வார்த்தை என்பதே.

அவர் வார்த்தை மட்டுமின்றி வார்தையின் உறுப்புகளாயும் இருக்கிறார்.

வெளி 22:13 இலும் கிறிஸ்து தம்மை இவ்வாறு கூறுகிறார் என்பதை 22:16 இலிருந்து காணலாம்.

வெளி
22 அதிகாரம்

13. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

மேலே உள்ள 13ஆம் வசனத்தை கூறியது யார் என்று கீழே உள்ள 16ஆம் வசனம் விவரிக்கிறது.

வெளி
22 அதிகாரம்

16. சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard