மனிதனின் முடிவு (தொடர் கட்டுரை சார்லஸ் M.சதீஷ்குமார்)
பாகம்-2
உ). லூக்கா 16:23-24 இந்த பகுதியில் குறிப்பிடப்படும் பாதாளம் என்பது தற்க்காலிக "நரகம்" ஆகும்.
ஆதாமின் காலத்திலிருந்து இயேசுவின் இரண்டாம் வருகை வரை பாவத்தில் மரணமடைவோர் பாதாளத்திற்க்கு செல்வார்கள்.
பாதாளமும் பரதீசும் பூமிக்கு அடியில் உள்ளன. (ஏசா 14:9; மத் 12:40; எபே 4:8-10)
ஏசாயா 14:9
கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப் பண்ணுகிறது.
மத்தேயு 12:40
யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
எபேசியர் 4:8-10
8. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
9. ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
10. இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
* பாதாளத்திலிருந்து பரதீசை பார்க்கவும் அங்கிருப்பவர்களிடம் பேசவும் முடியும்.
* பாதாளத்தில் மிகுந்த வேதனை மட்டுமே உண்டு.
* ஒரு சொட்டு தண்ணீராவது கிடைக்காதா என்று ஏங்கும் நிலை அங்கு உண்டு.
* பாதாளத்தில் இருப்பவர்களையும் பரதீசில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
* பாதாளத்திற்க்கும் பரதீசிற்க்கும் இடையில் சென்றுவர முடியாதபடி ஒரு பெரும் பிளவு இருந்தது.
பரதீசில் இருந்தவர்கள் இப்பொழுது எங்கு உள்ளனர்?
இதற்கான பதில் மத்தேயு 27:52-53 இல் உள்ளது.
மத்தேயு 27 அதிகாரம்
52. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
53. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
கல்லறைகள் திறந்தன. ஆனால் பரிசுத்தவான்கள் உயிர்தெழுந்தது கிறிஸ்து உயிர்தெழுந்த பின்னர் தான்.
ஏனெனில் கிறிஸ்துவே மரித்தோரிலிருந்து எழுந்தவர்களில் முதலாவது நபர் ஆவார் (1 கொரி 15:20,23; கொலோ 1:18; வெளி 1:5).
கிறிஸ்து மரித்ததும் பரதீசிற்க்கு சென்றார் (லூக்கா 23:43). அங்கு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இருந்தனர் (லூக்கா 16:19-31).
இயேசுவின் மரணம்வரை மரணத்திற்க்கு அதிபதியாக பிசாசு செயல்ப்பட்டான் (எபி 2:14).
எபிரெயர் 2 அதிகாரம்
14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
இயேசு மரித்ததும் மரணத்திற்க்கும் பாதாளத்திற்க்கும் அதிகாரம் இயேசுவினிடம் வந்தது (வெளி 1:18).
வெளி 1 அதிகாரம்
18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
பரதீசிலிருந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இயேசுவால் அங்கிருந்து விடுவிக்கப்பட்டதால் அவர்கள் உயிர்த்தெழுந்தனர்.
பரதீசிலிருந்து உயிர்தெழுந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பரலோகத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டனர்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்து அநேகருக்கு காணப்பட்டது 0போன்று இவர்களுகும் காணப்பட்டது.
பிதாவினிடத்திற்க்கு சென்றபோது இவர்கள் அவரோடு கொண்டு செல்லப்பட்டனர் (எபே 4:10)
கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் மரணமடையும் விசுவாசிகள் நேரடியாக கிறிஸ்துவிடம் செல்வர் (பிலி 1:20-24).
எனவே பரதீசு தொடர்ந்து காலியாகவே இருக்கிறது. பாவத்தில் மரணமடைவோர் பாதாளத்தில் இருக்கின்றனர்.
இறுதியான வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்பின் போது பாதாளத்திலிருக்கிற யாவரும் உயிரோடு எழுப்பபட்டு அவரவர் செய்கைக்கு தக்க பலன் அடைவர்.
இவர்களுடைய பெயரும் ஜீவ புத்தகத்தில் இருக்காது என்பதால் இவர்கள் அக்கினி கடல் எனப்படும் நரகத்தில் தள்ளப்பட்டு தொடர்ந்து வேதனைகளை அனுபவிப்பார்கள் (மாற்கு 9:43-48).
அதன் பின் பாதாளமும் அழிக்கப்படும் (வெளி 20:10-15)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை படித்து பாருங்கள்.