மனிதனின் முடிவு (தொடர் கட்டுரை சார்லஸ் M.சதீஷ்குமார்)
பாகம்-4
II. கர்த்தருடைய பிள்ளைகள் (நீதிமான்கள்) முடிவு:-
நீதிமான்களின் முடிவை மூன்று நிலைகளாக பிரிக்கலாம்.
A. பழைய ஏற்பாடு காலத்தில் மரித்த நீதிமான்களின் முடிவு.
B. சபை காலத்தில் மரித்த நீதிமான்களின் முடிவு.
C. உபத்திரவ காலத்தில் மரிக்கும் நீதிமான்களின் முடிவு.
A. பழைய ஏற்பாடு காலத்தில் மரித்த நீதிமான்களின் முடிவு:-
இதில் முதல் மனிதனாகிய ஆதாம் முதல் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த வரைக்கும் வாழ்ந்து மரித்த நீதிமான்கள் அடங்குவர்.
ஏற்கனவே நாம் பார்த்த முதல் மூன்று பாகங்களில் கூறிய படி இவர்கள் மரித்த பிறகு இவர்களின் உடல் அடக்கம் அல்லது எரிக்கப்பட்ட பிறகு இவர்களின் உள்ளான மனிதன் பரதீசுக்கு கொண்டு செல்லப்பட்டனர் (லூக் 16:19-31; 24:43)
பரதீசில் இருந்த இந்த உள்ளான மனிதர்கள் கிறிஸ்து உயிர்த்தெழுந்தவுடன் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்துடன் உயிர்தெழும்பி கிறிஸ்துவால் பிதாவிடம் கொண்டு செல்லப்பட்டனர். (மத் 27:52-53; எபே 4:8)
அங்கு இருக்கும் இவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அவரோடு இனைந்து வருவார்கள் என்று சகரியா 4:5 கூறுகிறது.
சகரி 14 அதி
5. அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகியகர்த்தர்வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
அதன் பிறகு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது தொடங்கும் கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியில் பங்கேற்பார்கள். (தானி 7:21,27; வெளி 8:5-11; 20:4)
தானி 7 அதி
21. நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும்,
10. மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.
4. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
ஆயிர வருடம் முடிந்ததும் அவர்கள் புதிய பூமியில் பிதா, கிறிஸ்து ஆகியவர்களின் கீழ் ஆட்சி செய்வார்கள். (தானி 7:27).
B. சபை காலத்தில் மரிக்கும் நீதிமான்களின் முடிவு:-
இதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். அவை:
1. இரகசிய வருகைக்கு முன் மரித்த நீதிமான்களின் முடிவு.
2. இரகசிய வருகையில் உயிருடன் இருக்கும் நீதிமான்களின் முடிவு.
1. இரசிய வருகைக்கு முன் மரித்த நீதிமான்களின் முடிவு:-
இதில் கிறிஸ்து உயிர்த்தெழுதலிருந்து இரகசிய வருகை வரைக்கும் மரித்த நீதிமான்கள் அடங்குவர்.
இந்த காலகட்டத்தில் மரித்த நீதிமான்களின் உள்ளான மனிதன் நேரடியாக பரலோகத்திற்க்கு சென்று கிறிஸ்துவுடன் சேர்க்கப்பட்டனர். (பிலி 1:23-24; 2கொரி 5:8).
பிலி 1 அதி
23. ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
24. அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
II கொரி 5 அதி
8. நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும்கர்த்தரிடத்தில்குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
அவர்கள் இரகசிய வருகையின் போது உள்ளான மனிதர் கிறிஸ்துவுடன் வந்து அவரவர் சரீரத்துடன் ஆவிக்குரிய சரீரமாக உயிர்த்தெழும்பி கிறிஸ்துவுடன் பரலோம் செல்வார்கள். (1தெச 4:13-17).
அதன் பிறகு அவர்கள் பழைய ஏற்பாட்டு நீதிமான்களுடன் இனைந்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவருடன் வருவார்கள். (சகரியா 14:5).
அதன் பிறகு ஆயிரம் வருட அரசாட்சியில் பங்கு பெறுவார்கள். அதன் முடிவில் புதிய பூமியில் பிதா, கிறிஸ்து ஆகியவர்களின் கீழ் ஆட்சி செய்வார்கள்.