மனிதனின் முடிவு (தொடர் கட்டுரை சார்லஸ் M.சதீஷ்குமார்)
பாகம்-5
2. இரகசிய வருகையில் உயிரோடு இருப்போரின் முடிவு:-
நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது சபை காலம் ஆகும். இந்த சபை காலம் அல்லது கிருபையின் காலத்தின் கடைசி விளிம்பில் நிற்க்கிறோம்.
அந்திகிறிஸ்துவின் ஆட்சி இந்த பூமிக்கு வர அனைத்து ஆயத்தங்கள் நடந்து முடியும் தருவாயில் உள்ளது அவனது ஆட்சி இந்த பூமிக்கு வருவதற்க்கு முன்பு இயேசு தமது சபை எடுத்துக் கொள்ள மத்திய ஆகாயத்தில் வருவார்.
ஆயத்தமாய் இருக்கும் கிறிஸ்துவர்கள் இதில் பங்கு பெறுவார்கள். ஆயத்தமுள்ளவர்களை தவிர மற்ற யாருக்கும் இது தெரியாது இதை தான் இரகசிய வருகை என்கின்றோம்.
இந்த இரகசிய வருகையின் போது ஆயத்தமாக காத்திருப்போர் (அதாவது நாம்) மாம்ச சரீரம் மறுரூபமாக்கப்பட்டு உயிருடன் பரலோகத்திற்க்கு எடுத்து செல்லப்படுவார்கள். இவர்கள் யாரும் மரணத்த சந்திப்பதே இல்லை (1கொரி 15:51-54; 1தெச 4:13-17).
I கொரி 15 அதி
51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப் படுவோம்.
53. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளவேண்டும்.
54. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
I தெசலோ 4 அதி
13. அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
14. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
15.கர்த்தருடையவார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது:கர்த்தருடையவருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்த வர்களுக்கு முந்திக் கொள்வதில்லை.
16. ஏனெனில், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
17. பின்பு உயிரோடிருக்கும் நாமும்கர்த்தருக்குஎதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும்கர்த்தருடனேகூடஇருப்போம்.
இவர்கள் பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் மற்றும் சபை காலத்தில் மரித்த நீதிமான்களுடன் இனைந்து இயேசுவின் இரண்டாம் வருகையில் அவருடன் வருவார்கள். (சகரி 14:5).
அதை தொடர்ந்து ஆயிர வருட அரசாட்சியிலும் (தானி 7:21,27; வெளி 8:5-11; 20:4), அதன் பிறகு பதிய பூமியில் பிதா, கிறிஸ்து ஆகியோரின் கீழ் ஆட்சி செய்வார்கள் (தானி 7:27).
C. உபத்திரவ காலத்தில் மரிக்கும் நீதிமான்களின் முடிவு:-
இதை இரண்டாக பிரிக்கலாம் அவை:
1. உபத்திரவ காலத்தின் நடுவில் 1,44,000 இஸ்ரவேலர்.
2. இரத்த சாட்சியாக மரிப்போர்.
1. 1,44,000 இஸ்ரவேலர்:-
இரகசிய வருகை முடிந்தவுடன் அந்திகிறிஸ்து ஏழு ஆண்டு இந்த பூமியை ஆட்சி செய்வான் இதை தான் உபத்திரவ காலம் என்கிறோம்.
இந்த உபத்திரவ காலத்தின் மத்தியில் இஸ்ரவேலின் 12 கோத்திரத்தில் இருந்து ஒரு கோத்திரத்திற்க்கு 12 ஆயிரம் வீதம் 1,44,000 இஸ்ரவேலர்கள் சரீரம் மறுரூபமாக்கப்ட்டு உயிருடன் எடுத்துக்கொள்ள படுவார்கள். (வெளி 12:5; 14:1-5)
உயிருடன் எடுத்து கொள்ளபடும் இவர்கள் பழைய ஏற்பாட்டு நீதிமான், சபைகால நீதிமான்கள் மற்றும் இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்பட்ட நீதிமான்களுடன் இனைந்து இயேசுவின் இரண்டாம் வருகையில் அவருடன் வருவார்கள் (சகரி 14:5).
அதன் பின் ஆயிரவருட அரசாடசியில் பங்கு பெற்று அதன் முடிவில் புதிய பூமியில் பிதா, கிறிஸ்துவின் கீழ் ஆட்சி செய்யபடுவார்கள்.
2. உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சியாய் மரித்தவர்கள் முடிவு:-
உபத்திரவ காலத்தில் மரிக்கும் இவர்களின் உள்ளான மனிதர் பரலோகத்திற்க்கு செல்வார்கள் (வெளி 6:9-11).
ஆனால் இவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையில் அவருடன் வருவதில்லை. மாறாக, இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் சரீர உயிர்தெழுதல் அடைந்து மறுரூபமாவார்கள் (வெளி 20:4).
அதன் பின் தொடங்கும் ஆயிர வருட ஆட்சியில் பங்கேற்பார்கள். அதை தொடர்ந்து புதிய பூமியில் பிதா, கிறிஸ்து ஆகியோரின் கீழ் ஆட்சி செய்யபடுவார்கள் (தானி 7:21,27; வெளி 8:5-11; 20:4)