இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதியாகமம் ஒரு கண்ணோட்டம்


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
ஆதியாகமம் ஒரு கண்ணோட்டம்
Permalink  
 


————————
ஆதியாகமம்
புத்தகத்தின் பெயர்:-—————————
மூல மொயான எபிரேயத்தில் இதன் பெயர்"பெரெஷித்"என்பதாகும். இதன் பொருள்"ஆதி","தொடக்கம்"என்பதாகும்.
———————————
புத்தகத்தின் நோக்கம்:-———————————
தேவன் பேரண்டத்தையும் உலகத்தையும் எவ்வாறு படைத்தார் என்பதையும் எவ்வாறு தனகென்று, தன்னை தொழுதுக் கொள்வதற்கென்று ஒரு மக்கள் கூட்டத்தை தெரிந்து கொண்டு அதை வழி நடத்தினார் என்பதையும் தெரிவிப்பதற்க்காக————————————
ஆசிரியர்:-மோசே.————————————
எழுதப்பட்ட காலம்:-————————————
கி.மு. 1659-1619இற்கு முன்பு.————————————
திறவுகோள் வசனங்கள்:-————————————
* தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். (1:27)
————————————
* உனக்கும் ஸ்தீரிக்கும், உன் வித்திற்க்கும் அவள் வித்திற்க்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய் (3:15).————————————
* அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக என்னினார் (15:6).————————————
முக்கிய நபர்கள்:-————————————
* ஆதாம்,
* ஏவாள்,
* ஏனோக்கு,
* நோவா,
* ஆபிரகாம்,
* ஈசாக்கு,
* யாக்கோபு,
* யோசேப்பு.
————————————
முக்கிய இடங்கள்:-————————————
* அரராத்,
* பாபேல்,
* ஊர்,
* சீகேம்,
* எபிரோன்,
* பெயர்செபா,
* பெத்தேல்,
* எகிப்து.
————————————
புத்தகத்தின் சிறப்பு:-————————————
வேதத்தின் முதல் நூலாக அமைந்துள்ள இதில் படைப்பு, மனிதன் வீழ்ச்சி, காலக்கூறுகள், உடன்படிக்கைகள், வாக்குறுதிகள் போன்ற யாவற்றின் தொடக்கமும் அடங்கியுள்ளது. ஆதி மனிதனின் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், வரலாறு போன்றவற்றையும் இந்நூல் விளக்குகிறது.————————————
புதிய ஏற்பாட்டில் நிழலும் நிறைவேறுதலும்:-————————————
* ஆதாம் கிறிஸ்துவிற்க்கு எதிர் மாதிரியானவர். (ரோமர்5:15-19; 1கொரி15:21,45-48).
————————————
* ஸ்தீரியின் வித்தாக அறிவிக்கப்பட்டவர் (3:15), கண்ணியின் வயிற்றில் பிறந்தார் (மத் 1:18-25).————————————
* ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ள பட்டது (15:22-24) இரகசிய வருகைக்கு முன் அடையாளம் (1தெச4:13-17).
————————————
* ஆபிரகாமின் விசுவாச சந்ததி புதிய ஏற்பாட்டில் அடையாளம் கண்டுக்கொள்ளப்பட்டது (ஆதி 15:5; ரோம4:16; கலா3:16,29).————————————
* ஆபிரகாம் தனது ஒரே பேரான மகன் ஈசாக்கை பலியிட முயன்றதும் உயிருடன் பெற்றுக்கொண்டதும், பிதாவாகிய தேவன் தனது குமாரனை பலியாக ஒப்பு கொடுத்ததற்க்கும் அவர் உயிர்தெழுதலுக்கும் முன்னடயாளமாக உள்ளது. (ஆதி22:1-19; எபி11:17-19)————————————
* ரெபெக்காளை ஈசாக்கிற்க்கு மனமகளாக அழைத்து வந்த எலியேசர், சபையை கிறிஸ்துவுக்கு ஆயத்தப்படுத்தும் ஆவியானவருக்கு முன்னடயாளமானவர். (ஆதி24:1-67; வெளி19:7-9)————————————
* மெல்கிசெதேக்கு கிறிஸ்துவுக்கு முன்னடயாளமானவர். (ஆதி14:18-20; சங்110:4; எபி5:6,10-11;6:20;7:1-20)————————————
* யோசேப்பு கிறிஸ்துவுக்கு முன்னடயாளமானவர்.————————————
புத்தகத்தின் அளவு:————————————
* அதிகாரங்கள் 50.
* வசனங்கள் 1533.————————————
புத்தகத்தின் உட்பிரிவுகள்:-————————————
* 1:1-2:25 படைப்பின் வரலாறு.
* 3:1-24 மனிதனின் வீழ்ச்சி.
* 4:1-5:32 பெருவெள்ளம் வரையிலான வரலாறு.
* 6:1-11:32 நோவாவிலிருந்து ஆபிரகாம் வரை.
* 12:1-23:20 ஆபிரகாமின் வரலாறு.
* 24:1-26:35 ஈசாகின் வரலாறு.
* 27:1-35:29 யாக்கோபின் வரலாறு.
* 36:1-43 ஏசாவின் வரலாறு.
* 37:1-50:26 யோசேப்பின் வரலாறு (யாக்கோபின் வரலாற்றுடன்).
————————————

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard