—————————— புத்தகத்தின் பெயர்:-————————————எபிரேய மொழியில் இந்த புத்தகம் "ஷெமோத்" என்று அழைக்கப்பட்டனர். இதன் பொருள் "பெயர்கள் இவைகளே" என்பதாகும்.————————————புத்தகத்தின் நோக்கம்:-————————————இஸ்ரவேலர் எகிப்திலிருந்து மீட்க்கப்பட்டு ஒரு நாடாக மாறினதை பதிவு செய்ய,————————————கர்த்தர் தமது மக்களை எல்லாவித அடிமை தனத்திலிருந்தும் மீட்கிறார் என்பதை உணர்த்திட,————————————கர்த்தரை தொழுது கொள்வதற்க்கு ஆயத்தம் தேவை என்பதை உணர்த்திடவே இந்த புத்தகம் எழுதப்பட்டது. ————————————ஆசிரியர்:-மோசே.————————————புத்தகத்தின் காலம்:-————————————கி.மு.1659-1619 க்கு முன் ————————————திறவுகோள் வசனங்கள்:-————————————அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும்.... பாலும் தேனும் ஒடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய் சேர்க்கவும் இறங்கினேன் (3:8).————————————ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உணக்கு போதிப்பேன் (4:12).————————————நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் (15:26). ————————————முக்கிய நபர்கள்:-————————————மோசே, ஆரோன், மிரியாம், யோசுவா, பார்வோனின் மகள், பார்வோன், எத்திரோ, பெசலெயேல். ————————————முக்கிய இடங்கள்:-————————————எகிப்து, கோசோன், நைல் நதி, மீதியான் தேசம், செங்கடல், சீனாய் மலை, சீனாய் தீபகற்பம்.————————————புத்தகத்தின் சிறப்பு:-————————————பழைய ஏற்பாட்டின் நூல்கள் எல்லாவற்றிலும் இந்த நூலில் தான் மிகுதியான அற்புதங்கள் எழுதப்பட்டுள்ளன.————————————தண்ணீரில் மிதக்க விடப்பட்ட குழந்தை, முட்செடியில் கர்த்தர் தரிசனமானது, எகிப்தில் பல அற்புதங்கள், பஸ்கா ஆசரிப்பு, செங்கடலை பிளந்தது, மேகஸ்தம்பம், அக்கினி ஸ்தம்பம், கற்பாறையிலிருந்து வந்த தண்ணீர், மன்னா, அமலேக்கியருடனான போர், பத்து கட்டளைகள், கன்றுகுட்டி வணக்கம், தேவன் மோசேவிற்க்கு தரிசனமாகுதல், ஆசரிப்பு கூடாரம் நிறுவப்படுதல். ————————————மேலும், தேவ ஆவியினால் ஒரு மனிதன் நிறப்பபட்டதை இந்நூலில் முதன் முறையாக கூறப்பட்டுள்ளது.————————————புதிய ஏற்பாட்டில் நிழலும் நிறவேறுதலும்:-————————————பஸ்கா ஆட்டுகுட்டி கிறிஸ்துவுக்கு முன் அடையாளம் (யாத்12:3-28; யோவா1:29; 1கொரி5:7).————————————மேகஸ்தம்பமாகவும் அக்கினி ஸ்தம்பமாகவும் கிறிஸ்து செயல்ப்பட்டார் (13:22- 1கொரி10:1) ————————————செங்கடலின் தண்ணீர் மதில்களுக்கு இடையில் சென்றது கிறிஸ்துவுகுள் ஜனத்திலும் ஆவியிலும் ஞானஸ்நானம் எடுத்ததற்க்கு ஒப்பாயிருக்கிறது. (14:16-22; 1கொரி10:1-2) ————————————மன்னா (16:4-36; யோவா 6:31-58; 1கொரி10:3)————————————கண்மலை (17:5-6; 1கொரி10:4) ————————————ஆசரிப்புகூடாரம் (25:8), சபைக்கும் (எபே2:19-21) விசுவாசிக்கும் (1கொரி3:16) பரலோகத்திற்க்கும் (எபி9:23-24; வெளி15:5)————————————உடன்படிக்கை பெட்டி (25:10) தமது இருதயத்தில் தேவனுடைய பிரமானத்தை வைத்திருந்து நிறைவேற்றிய கிறிஸ்துவுக்கு முன் அடையாளம் (மத்5:17)————————————சமூகத்து அப்பம் ஆசாரியரால் உண்னப்பட்டது. இது கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் பங்கேறபதற்கு அடையாளம் (1கொரி10:16-17) ————————————பொற்குத்து விளக்கு (25:31), உலகத்துக்கு ஒளியாக வந்த கிறிஸ்துவுக்கு முன் அடையாளம் (யோவா1:4,9;8:12;9:5) ————————————பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்க்கும் இடையில் உள்ள திரை சீலை (26:31-33) கிறிஸ்துவின் சரீரத்திற்க்கு மாதிரியாகும் (மத்27:50-51; எபி10:19-20)————————————பலிபீடம் (27:1) இயேசு மரணமடைந்த சிலுவைக்கு நிழலானதாகும் (எபி7:27;9:14)————————————எண்ணெய் (27:20) பரிசுத்த ஆவியை குறிக்கிறது.————————————வென்கல தொட்டி (30:13) நம்மை பாவமறக்கழுவி சுத்திகரிக்கும் கிறிஸ்துவுக்கு முன் அடையாளமானது (எபே5:25-27) ———————————தூபமானது பரிசுத்தவான்களின் ஜெபத்திற்க்கும் (வெளி8:3-4), தூபபீடமானது (30:1) பரிந்து பேசும் கிறிஸ்துவுக்கும் (ரோம8:34; எபி7:25) பரிந்து பேசும் ஆவியானவருக்கும் (ரோம8:26-27) மாதிரியாக அமைகிறது. ————————————புத்தகத்தின் அளவு:-————————————*அதிகாரங்கள் 40 * வசனங்கள் 1213——————————————உட்பிரிவு:- ———————————— * 1:1-13:16 அடிமை தனத்திலிருந்து இஸ்ரவேலர் மீட்கப்படுதல் ———————————— * 13:17-19:2 சீனாய் மலைக்கு பயணம் ———————————— * 19:3-40:38 பத்து கட்டளை கொடுக்கப்படுதல், ஆசரிப்பு கூடாரம் நிறுவப்படுதல். ————————————