இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு மணி நேரம் ஜெபிப்பது எப்படி?


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
ஒரு மணி நேரம் ஜெபிப்பது எப்படி?
Permalink  
 


———————————
ஒரு மணி நேரம் ஜெபிப்பது எப்படி?
———————————

1. தேவனோடு ஒப்புரவாகுங்கள் ( 3 நிமிடம்)

*.பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிடுங்கள்

*.தேவன் தமது பரிசுத்த இரத்தத்தினால் பாவங்ளை கழுவ ஒப்புக்கொடுங்கள்

*.பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ளுங்கள்

*.நாளை பாவ மன்னிப்பின் ஜெபம் ஏறெடுக்ககூடாது என்று தீர்மானம் செய்யுங்கள்

2. சத்துருவை துரத்துங்கள் ( 5 நிமிடம்)

*.சிந்தையையும் எண்ணங்களையும் சிதறடிக்கும் சத்துருவை துரத்துங்கள்

*.சரீரத்தை பலவீனம் படுத்தும் சத்துருவை துரத்துங்கள்

*.மற்ற ஜெபத்திற்கான பிசாசின் தடைகள், இடையூறுகள் மாற ஜெபியுங்கள்

3. தேவனை துதியுங்கள் (பிதா, குமாரம், பரிசுத்த ஆவியானவர்) ( 5 நிமிடம்)

*.தேவனின் நாமத்தை சொல்லி துதியுங்கள்

*.தேவனின் வல்லமையை சொல்லி துதியுங்கள்

*.தேவனின் கிரியைகளை சொல்லி துதியுங்கள்

*.தேவனின் குணங்களை சொல்லி துதியுங்கள்

*.தேவன் உங்கள் வாழ்க்கையில் செய்த வல்லமையை சொல்லி தேவனை துதியுங்கள்

4. தேவனை ஸ்தோதரியுங்கள் (நன்றி செலுத்துங்கள்) ( 5 நிமிடம்)

*.நமக்காக இயேசு சிலுவையில் செய்த பரிகாரங்களுக்காக

*.நம்மை இரட்சித்ததற்காக, பரிசுத்த படுத்தினதற்காக, அவருடைய பிள்ளையாய் மாற்றினதற்காக

*.நமது வேலையில், தொழிலில் மற்றும் படிப்பில் தேவன் செய்த நன்மைக்காக

*.குடும்பத்தில், பிள்ளைகள், நண்பர்கள் வாழ்கையில் தேவன் செய்த நன்மைக்காக

*.நாம் வேண்டின எல்லா காரியங்களிலும் கிரியை செய்ததற்காக மேலும், செய்துக் கொண்டு இருப்பதற்காக

5. தேவனிடத்தில் உங்களையே ஒப்புக்கொடுங்கள் ( 5 நிமிடம்)

*.இந்த நாள் முழுவதும் தேவன் உங்களை நடத்தும்படியாக தேவ கரத்தில் ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடுங்கள்.

*.சுயம் சாக ஒப்புக்கொடுங்கள்

*.தேவ சித்தம் செய்ய ஒப்புக்கொடுங்கள்

*.வார்த்தையிலும், வாழ்கையிலும் கிறிஸ்துவை வெளிப்படுத்த (சாட்சியாக வாழ) ஒப்புக்கொடுங்கள்

6. தேசத்திற்காக ஜெபியுங்கள் ( 5 நிமிடம்)

*.பாவத்தில் வாழும் ஜனங்கள் இரட்சிக்கப்பட

*.விக்கிர ஆராதனையில் வாழும் ஜனங்கள் மற்றும் மற்ற மதத்தினர் இரட்சிக்கப்பட

*.விபச்சாரம், வேசித்தனம் பாவத்தில் வாழும் ஜனங்கள் இரட்சிக்கப்பட

*.களவு, கொலை, தீய காரியங்களில் ஈடுபடும் ஜனங்கள் இரட்சிக்கப்பட

*.குடி பழக்கத்திற்கும், போதை வஸ்துகளுக்கும் அடிமையானவர்கள் இரட்சிக்கப்பட

*.தேசத்தின் ஆசீர்வாதங்களுக்கு விரோதமாக கிரியை செய்கிற விக்கிரக, விபச்சார, கொலை, களவு, குடி மற்றும் போதை போன்ற பாவங்களை செய்ய துண்டுகிற தீய ஆவிகளின் வல்லமைகள் அழிக்கப்பட ஜெபியுங்கள்.

*.தேசத்தை ஆளுகை செய்கிற தலைவர்களுக்காக ஜெபியுங்கள் (ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள், முதலமைச்சர்கள், மத்திய, மாநில மந்திரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள், இராணுவ தலைவர்கள், நியாதிபதிகள், காவல் துறை அதிகாரிகள்)

*.தேசத்திலே தேவன் எல்லாவிதமான ஆசீர்வாதங்களை கொடுக்க தேசத்தை ஆசீர்வதித்து ஜெபியுங்கள்

*.உங்களிடத்தில் ஜெபிக்க கேட்டுக்கொண்டவர்களுக்காக மற்றும் நான் ஜெபிப்பேன் என்று நீங்கள் வாக்குபண்னினவர்களுக்காக ஜெபியுங்கள்

7. திருச்சபைகளுக்காக ஜெபியுங்கள் ( 5 நிமிடம்)

*.சபைகளுக்கு விரோதமாக கிரியை செய்யும் பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட ஜெபியுங்கள்

*.கிறிஸ்தவர்கள் எல்லோரும் கிறிஸ்துவை போல வாழ ஜெபியுங்கள்

*.சபைகளுக்கு இடையே காணப்படும் போட்டி பொறாமைகள் மாற ஜெபியுங்கள்

*.சபைகளில் காணப்படும் கள்ள உபதேசங்கள் மாற்றப்பட ஜெபியுங்கள்

*.மிஷனரிகளுக்காக, போதகர்களுக்காக, சுவிஷேசர்களுக்காக மற்றும் ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்

*.உங்கள் சபைக்காக, போதகர்களுக்காக, விசுவாசிகளுக்காக ஜெபியுங்கள்

8. வேதத்தை வாசித்து தியானியுங்கள் (வேதகமம், நோட்டு மற்றும் பேனாவுடன்) ( 20 நிமிடம்)

*.கிரமமாய் ஒருபகுதியை வேதத்திலிருந்து வாசியுங்கள்

*.தியானியுங்கள் (இலகுவான முறை)

*.செய், செய்யாதே, இரு போன்ற வசனங்களை குறிபெடுங்கள்.

*.எதிர்மறை விளைவுகள் (சாபங்கள், துன்பங்கள் & …) போன்ற வசனங்ளை குறிப்பெடுங்கள்

*.நேர்மறை விளைவுகள் (ஆசீர்வாதம், நன்மை & …) போன்ற வசனங்களை குறிப்பெடுங்கள்

*.தேவன் உங்களோடு வேதவசனத்தின் மூலம் பேசும் வசனங்களுக்கு கீழ்படிய ஒப்புக்கொடுங்கள்

9. உங்களுக்காக ஜெபியுங்கள் ( 5 நிமிடம்)

*.இன்று ஆவிக்குறிய வாழ்கையில் (பரிசுத்தத்தில், விசுவாசத்தில், ஜெபத்தில், ஊழியத்தில் & …) ஒருபடி முன்னேற ஜெபியுங்கள்

*.உங்களுக்கு விரோதமாக எழும்பி வரும் சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட ஜெபியுங்கள்

*.இன்று நீங்கள் செய்ய போகும் வேலை, தொழில், படிப்பு போன்ற காரியங்களுக்காக ஜெபியுங்கள்

*.இந்த நாளின் தேவைகளை தேவன் சந்திக்கும்படியாக ஜெபியுங்கள்

*.பிரயாண பாதுகாப்பை தேவன் கட்டளையிட ஜெபியுங்கள்

*.குடும்பத்தில் உள்ளவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆவிக்குறிய வாழ்க்கைகாகவும் ஜெபியுங்கள்

*.உங்கள் சுகம், குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்

10. தேவன் ஜெபத்தை கேட்டு கிரியை செய்கிறதற்காக விசுவாசித்து வாக்குத்தத்தங்களை சொல்லி நன்றி செலுத்துங்கள்.( 2 நிமிடம்)

http://tamilbibleqanda.wapka.mobi/site_1.xhtml?hash=923cc3cad8d4a19643fe785609d031

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard