———————————— கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் ழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ————————————
பதில்: (தொடர்ச்சி.....)
4. ஒழுக்கநெறி (Moral) விவாதம் : இது நல்நடத்தையைப் பற்றியது. வரலாற்றில், எல்லாக் கலாச்சார மக்களுக்கும் ஒரு நியதி அல்லது ஒழுங்குமுறைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் தவறு அல்லது சரி என்று உணர்கிற உணர்வு உண்டு. கொலை, பொய், திருட்டு, தவறான நடத்தை இவைகளெல்லாம் எல்லா நாடுகளைச் சார்ந்தவர்களும் இது தவறு, இது சரி என்று மறுப்பு தெரிவிக்கிறார்கள்.
நன்மை எது, தீமை எது என்ற உணர்வு எல்லா மனிதருக்கும் இருக்கிறது. இந்த உணர்வு கடவுளிடத்திலிருந்துதான் வருகிறது. இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் மக்கள் தேவனைக் குறித்த அறிவைமறுத்து பொய்யை நம்புவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு தெளிவாக சொல்கிறது. (ரோ. 1:25) மக்கள் கடவுளை நம்பாமல் இருப்பதற்கு, எந்த ஒரு கராணத்தையம் கூற முடியாது. (ரோ.1:20) அறிவியல் பூர்வமாக கடவுளை நிரூபிக்க முடியாது என்று அவரை நம்பாமல் இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் தங்களைக் குறித்து அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும், பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணரவேண்டும். (ரோ.3:23,6:23) கடவுள் இல்லையென்றால் நாம் நம் விருப்பப்படி நம் மனம்போல வாழலாம். பரிணாமக் கொள்கையைப் பிடித்துக்கொண்டு கடவுளை உதாசினப்படுத்தி வாழ்கிற ஒரு கூட்டம் உண்டு.
கடவுள் உயிரோடிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கும் கடுமையான முயற்சியே, கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு நான் கொடுக்கும் இறுதியான விவாதம். கடவுள் இருக்கிறார் என்பது எனக்கு எப்படித்தெரியம்? நான் கடவுளுடன் தினமும் பேசுவதால், அவர் இருக்கிறார் என்பதை அறிகிறேன். அவர் பேசுவதை நான் சத்தமாகக் கேட்பதில்லை ஆனால் அவர் பிரசங்கத்தை, வழிநடத்துதலை, அன்பை, கிருபையை உணர்கிறேன். என் வாழ்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுக்கிற பொழுது கடவுள் இருக்கிறார் என்பதைத்தவிர, வேறு விளக்கம் கொடுக்க முடியவில்லை. கடவுள் என்மை ஆச்சரியமான விதமாக இரட்சித்து என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். ஆகவே அவரைத்துதித்து அன்பு செலுத்துவதைத்தவிர நான் ஒன்றும் இல்லை என்று உணர்கிறேன்.
இறுதியாக கடவுள் இருக்கிறார் என்பதை விசுவாசத்தின் மூலமாக அறிந்துகொள்கிறோம். (எபி.11:6). தேவன்பேரில் வைக்கும் விசுவாசம் என்பது குருட்டுத்தனமானதல்ல. விசுவாசம் என்பது ஒரு பாதுகாப்பான, வெளிச்சமான அறையில் அடி எடுத்து வைப்பதாகும். இதில் ஏற்கெனவே 90 சதவிகித மக்கள் இருக்கிறார்கள்.