இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள் என்பவர் உண்மைதானா?


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
கடவுள் என்பவர் உண்மைதானா?
Permalink  
 


கேள்வி: கடவுள் என்பவர் உண்மைதானா?

பதில்:

“கடவுள்” என்பவர் உண்மைதான்; என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற மூன்று விதங்களினால் அறிந்து கொள்கிறோம். படைப்பு, தேவன் அருளின "வார்த்தை" மற்றும் தேவனின் ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து.

தேவன் என்பவர் உண்மைதான் என்பதற்கு அடிப்படையான ஆதாரத்தை அவர் உண்டாக்கினவைகளிலிருந்து பெற்றுக்கொள்கிறோம். “வானங்கள் தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது” (சங். 19:1). எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும், ஆதலால் அவர்கள் சாக்கு போக்கு சொல்ல இடமில்லை” (ரோ. 1:20).

நான் ஒரு கைக்கடிகாரத்தை வயல்வெளியிலே கண்டுபிடிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுவோம். நான் அது ஒன்றுமில்லாமையிலிருந்து தற்செயலாகத் தோன்றினது என்றோ அல்லது அது ஏற்கனவே இருந்தது என்றோ நான் சொல்ல மாட்டேன். அந்த கைக்கடிகாரத்தின் வடிவமைப்பைக் கொண்டு ஒரு வடிவமைப்பாளர் கண்டிப்பாக இருக்கிறான் என்பதையே நான் நம்புவேன் இவைகளைக் காட்டிலும் தேவனின் படைப்பிலே, அழகான வடிவமைப்பையும், தெளிவான தோற்றத்தையும் நான் காண்கிறேன். கடிகாரங்களிலே நேரத்தைப் பார்ப்பது, கடிகாரத்தினாலல்ல, தேவனின் படைப்பிலுள்ள பூமியின் சுழற்சியினாலேயே நேரத்தைக் கணக்கிடுகிறோம். உலகத்தின் அமைப்பு அழகான படைப்பை வெளிப்படுத்துகிறது. அதைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறாரென்பதை நமது விவாதத்துக்கு கொண்டுவருகிறது.

ரகசிய குறியீட்டோடு வருகிற ஒரு செய்தி எனக்கு அளிக்கப்படுமேயானால், அதை திறந்து எனக்கு வெளிப்படுத்துகிற ஒருவரின் உதவியை நாடுவேன். ஆக இப்படைப்பை உண்டாக்கின ஒருவர் அந்த இரகசியத்தை மறைவாக அறிவு பூர்வமாக அனுப்பியிருக்கிறார் என்றே நான் சொல்வேன். நமது சரிரத்தின் அனுக்களிலே காணப்படுகிற டி.என்.ஏ. (DNA) குறியீடு எத்தகைய சிக்கல் நிறைந்ததாய்; இருக்கிறது? ஒருவர் அந்த குறியீட்டை (DNA) சரியாக வெளிப்படுத்த வேண்டுமெயானால் அதை நன்கறிந்த ஒருவர் தேவை. அப்படிதானே?

தேவன் அழகாக, இசைவாக அமைக்கப்பட்ட உலகத்தை உண்டாக்கினவர் மட்டுமல்லாமல், ஒவ்வொருவர் உள்ளத்திலும், நித்தியத்தைக் குறித்த உணர்வையும் வைத்திருக்கிறார் (பிர. 3:11) நம் கண்களால் காண்பதைக்காட்டிலும், சிறந்ததொரு வாழ்க்கை இருக்கிறது என்பதே. மனிதனின் உள்ளான எண்ணமாக இருக்கிறது - உலகத்தில் வழக்கமாய் நடைபெறுவதைக் காட்டிலும் மேலான ஒரு நிலை இருக்கிறது. நித்தியத்தைக் குறித்த வெளிப்பாடு குறைந்தபட்சம் இரண்டு வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது. 1. சட்டம் இயற்றுதல் 2. ஆராதனை.
ஓவ்வொரு காலக்கட்டத்திலும் உள்ள நல்லதொரு நாகரிகமும், சமுதாய ஒழுங்கு சட்டத்தை மதித்தே வந்திருக்கிறது. மிகவும் ஆச்சரியமாக, கலாச்சாரத்திற்கு, கலாச்சாரம் வேறுபட்டிருந்தாலும், ஒழுக்கம் என்பது எல்லாராலும் போற்றப்படுவதாக இருக்கிறது. உதாரணமாக அன்பு என்பது எல்லாராலும் மதிக்கப்படுகிறது. அதே சமயம் பொய் சொல்வது, எல்லோராலும் கண்டிக்கப்படுகிறது. பொதுவான ஒழுக்கம் அதாவது நல்லது எது? தீயது எது? என்பதை நிர்ணயிக்கும் உலகளாவிய ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்த நியதி எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் இருந்து ஒழுக்கத்தை நமக்குத்தந்து நடத்துகிறார் என்பதையே சுட்டிக் காண்பிக்கிறது.
அதைப் போலவே உலகத்திலுள்ள மக்களனைவரும் அவர் எந்த கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தேவனைத் தொழுது கொள்ள வேண்டும் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஒருவேளை அவர்கள் தொழுது கொள்கிற தெய்வமோ அல்லது பொருளோ வேறுபட்டிருக்கலாம். ஆனால் மேலான ஒரு சக்தி இருக்கிறது என்பதை எல்லாருடைய உள்ளுணர்வும் ஏற்றுக் கொள்கிறது. தேவன் தமது சாயலாகவே மனிதனை உண்டாக்கினார் என்பதுவே தேவனைத் தொழுது கொள்வதற்கு ஏற்ற மனோபாவத்தை மனிதனுக்குத் தருகிறது (ஆதி. 1:27).

மேலும் தேவன் தமது வார்த்தையைக் கொண்டு (பரிசுத்த வேதாகமத்தில்) தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். பரிசுத்த வேதாகமம் முழுவதுமே தேவன் இருக்கிறாரென்பதற்கு ஆதாரமாகவே இருக்கிறது (ஆதி. 1:1, யாத். 3:14) பெஞ்சமின் பிராங்கிளின் என்பவர் தனது சுயசரிதையை எழுதும்போது, தான் வாழ்ந்தேன் என்பதை நிருபிக்கும்படியாக நேரத்தை செலவிடவில்லை. அதைப்போலவே, தேவனும் பரிசுத்த வேதாகமத்தை நான் ஜீவிக்கிறேன் என்பதற்கு அதிகப்படியான நேரத்தை செலவிடவில்லை. வாழ்க்கையை மாற்றியமைக்கிற பரிசுத்த வேதாகமத்தின் தன்மை, ஒருமைப்பாடு, அதில் சொல்லப்பட்டிருக்கிற அற்புதங்கள் தேவனை வெளிப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்களாயிருக்கிறது.

தமது ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். (யோ. 14:6-11) ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார் யோ. 1:1, 14. “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம், சரிரப்பிரகாரமாக அவருக்குள் (இயேசு கிறிஸ்துவுக்குள்) வாசமாயிருக்கிறது” கொலோ. 2:9.

இயேசுகிறிஸ்துவின் அற்புதமான வாழ்க்கையில் பழைய ஏற்பாட்டின் அத்தனை பிரமாணங்களையும் பூரணமாக கடைப்படித்தார். மட்டுமன்றி மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அவருக்குள் நிறைவேறிவிட்டது (மத். 5:17). இயேசு கிறிஸ்து எண்ணிறந்த அற்புதங்களையும், ஏராளமான மனதுருக்கத்தையும், தான் கொண்டு வந்த செய்தியை உறுதிப் படுத்துவதற்கும், தெய்வத்துவத்திற்கு சாட்சியாகவும் செய்தார். (யோ 21:24,25) அவர் சிலுவையிலறையப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு உயிரோடெழும்பினார். இந்த உண்மை நூற்றுக்கணக்கான சாட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டது (I கொரி. 15:6). ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் இயேசு கிறிஸ்து யார் என்பதற்கு சாட்சியாயிருக்கிறது. பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் சொன்னது போல, ஏதாவதொரு மூளையில் நடந்த சம்பவமில்லை. (அப். 26:26) அநேக நாஸ்திகர்கள் தேவனில்லை என்பதற்கு அநேக ஆதாரங்களை கொடுப்பார்கள்.

ஆனாலும் அவைகள் அந்த ஆதாரங்களை உறுதிப்படுத்துவதில்லை. சங். 14:13. எல்லாமே விசுவாசத்தினாலேயே உண்டாகிறது எபி 11:6.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard