இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்க்கையின் அர்த்தமென்ன?


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
வாழ்க்கையின் அர்த்தமென்ன?
Permalink  
 


————————————
கேள்வி: வாழ்க்கையின் அர்த்தமென்ன?
————————————

பதில்:

நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது வாழ்க்கை நிறைவேறுதல், வாழ்வின் திருப்தி இவைகளை கண்டு பிடிப்பது எப்படி? நிலைத்திருக்கிற பொருளுள்ள, ஒரு வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதற்கு, எனக்குள் திறமையிருக்கிறதா? அநேகர் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுப் பிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களை எண்ணிப்பார்த்து, ஏன் என் வாழ்வில் விரிசல்? ஏன் நான் வெறுமையாக உணருகிறேன்? நான் நினைத்ததை ஒருவேளை சாதித்தாலும், ஏன் எனக்குள் இவைகள் நடைபெறுகிறது என்று சொல்லி ஆச்சரியப்படுகிறார்கள். ஓரு முறை, ஒரு பேஸ்பால் (Base Ball) விளையாடுபவரிடத்தில் முதலாவது விளையாடத் தொடங்கினபோது, விளையாட்டின் புகழ் உச்சக் கட்டத்தில் ஒருவர் உங்களிடம் என்ன சொல்ல வேண்டுமென்று, எதிர்பார்ப்பீர்கள் என்று சொல்லி கேட்பார்கள். அதற்கு அவர் நான் புகழின் உச்சியில் வரும்பொழுது, ஒன்றுமே இல்லை என்பதை சொல்வதற்கு ஒருவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று பதிலளித்தார். அநேகருடைய முயற்சிகள் பல ஆண்டுகள் கழித்து, அவர்களுடைய நோக்கங்கள் ஒன்றுமில்லை என்பதையே நிருபிக்கிறது.

மனித சமுதாயத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அநேகர், அநேக முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட முயற்சிகளில், இவைகள் அடங்கும், வியாபாரத்தில் வெற்றி, செல்வம் தேடுதல், நல்ல உறவை பராமரித்தல், பொழுதுபோக்கு நற்கிரியைகள் செய்தல் மற்றும் பால் இன காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் போன்றவைகள். இந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றி அடைவது போல காணப்பட்டாலும், அவர்களுக்குள் ஆழமானதொரு வெற்று உணர்வு இருப்பதாக சாட்சி கூறுகிறார்கள். அதாவது ஒரு நிறைவுமே இல்லாதது போன்ற ஒரு உணர்வு மட்டுமே மிஞ்சிஇருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில், பிரசங்கியின் புத்தகத்தை எழுதியவர், இந்த உணர்வை வெளிப்படுத்தும்போது, மாயை, மாயை எல்லாம் மாயை என்று சொல்கிறார்: இந்த ஆக்கியோனிடத்தில் அளவுக்கதியமாக செல்வமிருந்தது. அவரது காலத்திலே வாழ்ந்த எந்த ஒரு மனிதனைக் காட்டிலும் அவனுக்கு ஏராளமான மனைவிகள் இருந்தார்கள். மற்ற இராஜ்ஜியங்கள் பொறாமைப்படத்தக்க அளவில். அரண்மணைகளும், தோட்டங்களும் இருந்தது. புசிப்பதற்கு சிறந்த உணவும், குடிப்பதற்கு நல்ல திராட்சை ரசமும் மற்றும் எல்லா களியாட்டங்களையும் உடையவராயிருந்தார்.

ஒரிடத்தில் இப்படியாக என் மனம் விரும்பின ஒன்றையாகிலும் நான் தடை செய்ததில்லையென்று சொல்கிறார். தன் காரியங்களைக்காட்டி மொத்தமாக சொல்லும் பொழுது, “சூரியனுக்குக் கீழே நான்படும் பிரயாசங்கள், (கண்களால் பார்ப்பதும், புலன்களால் அனுபவிப்பது மட்டுமே வாழ்க்கை என்று கருதுகிறோம்). எல்லாம் மாயை, ஏன் இந்த வெறுமை? ஏனென்றால், நாம் அவ்வப் பொழுது இங்கு அனுபவிக்கிற எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நோக்கத்தோடு தேவன் நம்மை சிருஷ்டித்தார்.” சாலமோன் தேவனைக்குறித்து இப்படியாக சொல்கிறார்.

“மனிதன் இருதயத்திற்குள் நித்தியத்தை வைத்திருக்கிறார் என்று சொல்கிறார். அவ்வப்போழுது நாம் அனுபவிக்கிறவைகளோடு காரியம் முடிந்துவிடவில்லை என்பது இருதயத்திற்கே தெரியும். பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் தேவன் மனிதனை தனது சாயலாகவே சிருஷ்டித்தார் என்று காண்கிறோம். (ஆதி. 1:6) அதாவது நாம் தேவனைப் போலவே இருக்கிறோம். வேறு எந்த விதத்திலும் மற்றனதப்போலவோ, மற்றவைகளைப் போலவோ இல்லை. அது மாத்திரமல்ல, மனிதன் பாவத்தில் விழ்ந்து, சாபம் பூமிக்கு மேல் வருவதற்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிற இவைகளெல்லாம் உண்மையானவைகள் என்பதை காண்கிறோம்.

1. தேவன் மனிதனை சமுதாயத்தில் உள்ள ஒரு ஜீவனாகவே படைத்தார் (ஆதி.2:18-25).

2. தேவன் மனிதனுக்கு வேலை கொடுத்தார்.

3. தேவன் மனிதரோடு நல்ல உறவு வைத்திருந்தார் (ஆதி. 3:8).

4. தேவன் பூமியிலுள்ளவைகளின் மேல் மனிதனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார் (ஆதி. 1:26).

இவைகளுடைய முக்கியத்துவமென்ன? நம்முடைய வாழ்க்கையின் நிறைவேற்றுதலுக்கு, இவைகள் அவசியமானவைகள் என்பதை, வேன் திட்டமிட்டிருந்தார் என்றே நான் விசுவாசிக்கிறேன். ஆனால் மனிதன் விழ்ச்சியினிமித்தமாக (மனிதன் தேவனோடு வைத்திருந்த உறவில்) மனிதன் மிகவும் பாதிக்கப்பட்டான். பூமியின் மேல் சாபம் வந்தது.( ஆதி.3)

வேதாகமத்தின் கடைசிப் புத்தகமாகிய வெளிப்படுத்தல் விஷேசத்தில், கடைசி நாட்களில் நடைபெறும் எல்லா சம்பவங்களையும். வெளிப்படுத்தின பின்பு நாம் அறிந்திருக்கிறபடி, இந்த பூமியையும் இந்த வானத்தையும் அழித்து புதிய வானத்தையும், புதிய பூமியையும் உண்டாக்கி, அதை நித்தியமாக நிலைநிறுத்துவார் என்று வெளிப்படுத்துகிறதைப் பார்க்கிறோம். அப்பொழுது மனிதனோடு தேவன் கொண்டிருந்த பரிபூரணமான உறவை மீண்டுமாக மீட்டுத்தருவார். பாத்திரமற்றவர்களாக தீர்க்கப்பட்டவர்கள், அக்கினிக் கடலிலே போடப்படுவார்கள். (வெளி. 20:11-15) சாபமானது நீக்கப்படும், இனி பாவமிராது, துக்கமில்லை, வியாதியில்லை மரணமில்லை வேதனையில்லை (வெளி. 21:4) விசுவாசிகள் இவைகளெல்லாவற்றையும் சுதந்தரித்து கொள்வார்கள். தேவன் அவர்களோடு வாசமாயிருப்பார். அவர்கள் அவருடைய குமாரனாயிருப்பார்கள். (வெளி.2:7). இப்படியாக தேவன் உண்டாக்கின இந்த உறவின் வளையத்துக்குளே மனிதன் மீண்டுமாக வருகிறான். மனிதன் பாவஞ்செய்து தேவனோடுள்ள உறவை இழந்தான். தேவன் யாரெல்லாம் பாத்திரவான்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நித்தியமாக இந்த உறவை மீட்டுக் கொடுத்தார். ஆகவே எதையாவது, எல்லாவற்றையாவது கற்றுக்கொள்ள முயற்சிப்பது என்பது மரணமானது நித்தியத்தினின்று தேவனை பிரித்ததைப் பார்க்கிலும், மேலானதும், பயனற்றதுமாக இருக்கும். ஆனால் தேவன் நித்தியமான சந்தோஷத்தை பெற்றுக் கொள்ளும் படியாக அந்த வாழ்க்கையை பயனுள்ளதும், திருப்தி நிறைந்ததுமாக மாற்றியிருக்கிறார். இப்பொழுது எப்படியாக நித்திய சந்தோஷத்தையும், பூமிலே மேலான வாழ்வு என்பதையும் பார்ப்போம்.
——————————————

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அன்பான சகோதரரே ஆதாம் ஏவாள் இருக்கும் இடத்தில் தேவன் ஏன் சாத்தானை அனுமதித்தார்? என்பதற்கான காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன்.
 
முழுமையில்லாத/ தன்னை குறித்த சந்தேகம் உள்ள ஒருவன் தான் அவன் படைத்த ஓன்று சரியானதா  இல்லையா என்று சோதித்து பார்க்க விரும்புவான்.   
 
அனால்  தேவன் அப்படிபட்டவர் அல்ல. அவர் சர்வ வல்லவர் சர்வ ஞாநி. அப்படிபட்டவர் தன படைப்பை தானே சோதித்து பார்த்தால் அவர் படைப்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருளாகிவிடும் 
 
பின்னர் எதற்க்காக அவர் நன்மை தீமை கனியை படைத்து சாத்தானையும் அங்கு அனுமதித்தார்? 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard