இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்க்கையின் அர்த்தமென்ன? [தொடர்ச்சி.....]


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
வாழ்க்கையின் அர்த்தமென்ன? [தொடர்ச்சி.....]
Permalink  
 


————————————வாழ்க்கையின் அர்த்தமென்ன? [தொடர்ச்சி.....]
————————————

இயேசுகிறிஸ்து மூலமாக மீட்டு கொடுக்கப்பட்ட அர்த்தமுள்ள வாழ்க்கை:

மேலே குறிப்பிட்டது போல, உண்மையான அர்த்தமுள்ள வாழ்வு இப்பொழுதும் நித்தியத்திலும். தேவனோடுள்ள உறவை மீட்டு கொள்வதன் மூலமாகவே பெற்று கொள்ள முடியும். இந்த உறவை ஆதாமும், ஏவாளும் பாவஞ் செய்ததினிமித்தமாகவே, அந்த உறவை இழந்து போனார்கள். இன்றைய நிலையில் தேவனோடு உள்ள அந்த உறவை அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து மூலமாக பெற்றுக்கொள்வது சாத்தியமாகிறது. (அப்.11:12,யோ. 14:6, யோ.1:12) ஒரு மனிதன் மனந்திரும்பும் பொழுது, அதாவது ஒருவனோ ஒருத்தியோ. புhவத்தில் வாழ்கிறதை விரும்பாமல் கிறிஸ்துவினால் பெரிய மனுஷனாக அல்லது மனுஷியாக மாற விரும்பும் பொழுது நித்திய ஜீவனை அவன் ஆதாயம் செய்து கொள்கிறான் அல்லது கொள்கிறாள். இயேசுவே இரட்சகரென்று அவரை சார்ந்து கொள்ள துவங்குகிறார்கள்.

இயேசுவே இரட்சகர் என்று அறிந்து கொள்வதினால் மாத்திரம் வாழ்க்கையின் முழு அர்த்ததை அறிந்து கொள்வதில்லை. அவரைக் கற்றுக்கொள்வதன் மூலமாக, பரிசுத்த வேத வசனங்களைத் தியானிப்பதின் மூலமாக அவரது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவரோடு நடப்பதின் மூலமாக வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுகொள்கிறோம். ஒருவேளை நீங்கள் அவிசுவாசியாயிருந்து, இப்பொழுது இயேசுவை ஏற்றுக் கொண்டவராக இருக்கலாம். இவைகள் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பலனை அல்லது நிறைவை தராதது போலிருக்கலாம்.

மேலேயுள்ளவைகளை தயவுசெய்து வாசியுங்கள். இயேசு சொல்கிறார் வருத்தப்பட்டு பாவஞ்சுமக்கிறவர்களே, நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் முகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயிருக்கிறது (மத். 11:28-30, யோ. 10:10) நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்மைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். தன் ஜீவனை இழந்து போகிறவன், அதை கண்டடைவான். மத்.16:24,25.

கர்த்தரிடத்தின் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்.

இந்த வேத வசனங்களெல்லாம் நாம் தெரிந்து கொள்வதைப் பொறுத்தே, வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. நாம் தொடர்ந்து நம் வாழ்க்கைக்கு நாமே வழிகாட்டலாம் (அதன் பெலன் வெறுமையான வாழ்வு) அல்லது தேவனைப் பின்பற்று வதற்கு நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது தேவ சித்தத்திற்கு நம்மை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழலாம். (அதன் பலனாக பரிபூரணமாக வாழ்க்கையையும், இருதய வாஞ்சை நிறைவையும் பெற்றுக் கொள்கிறோம். ஏனென்றால், நம்மை உண்டாக்கின நமது தேவன் நம்மை நேசிப்பது மாத்திரமல்ல, நமக்கு மிகவும் சிறந்ததையே கொடுக்க விரும்புகிறார். (இலகுவான வாழ்க்கை என்பதைக் காட்டிலும், நிறைவான வாழ்க்கை தருகிறார்)

இறுதியாக ஒரு போதக நண்பரிடமிருந்து கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் ஒரு விளையாட்டு ரசிகரென்று வைத்துக் கொள்வோம், ஒரு சிறந்த விளையாட்டை பார்க்கத் தீர்மானித்திருக்கிறீர்கள். அதற்காக ஒரு சில ஆயிரங்களை செலவழித்து, உயர்ந்த இடத்தைப் பெற்றுப் பார்க்க இருக்கலாம். ஏராளமான பணம் செலவழித்து, மைதானத்திற்கு மிக அருகில் உட்கார்ந்து பார்க்கலாம் இது ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஒப்பாயிருக்கிறது. ஞாயிற்று கிழமை கிறிஸ்தவர்களுக்கு தேவனை அருகிலே பார்பதென்பது கூடாத காரியம். ஏனென்றால் அதற்கான விலையை அவர்கள் செலுத்தவில்லை. அதே சமயத்தில் தேவன் கிரியை செய்வதை அருகாமையிலிருந்து பார்க்க விரும்புகிறவர்கள் சீடனாயிருக்கிறார்கள். சொந்த விருப்பத்தை நிறுத்தி தேவனுடைய நோக்கத்தை தொடர்வதற்கு தங்களை ஒப்புக் கொடுக்கிறார்கள். இதற்கு அவர்கள் விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறார்கள். (தங்களையும், தங்களுடைய சித்தத்தையும் பரிபூரணமாக அர்ப்பணித்திருக்கிறார்கள்) அவர்கள் பரிபூரணமாக தங்கள் வாழ்க்கையை அணுவவிக்கிறார்கள்.

அவர்கள் யாரையம் சந்திப்பதற்கு தயங்குவதில்லை. நீங்கள் விலைக்கிரயமாக செலுத்தியிருக்கிறீர்களா? இயேசுவைப் பின்பற்றுவதற்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக, நோக்கமுள்ளதாக மாறும். இதில் தாழ்ச்சி ஏற்படாது.
——————————————

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard