இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கேள்வி: விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
கேள்வி: விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
Permalink  
 


கேள்வி: விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்: விவாகரத்தைப் பற்றி ஒருவர் எந்த கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டாலும், மல்கியா 2:16 “தள்ளிவிடுதலை (விவாகரத்து) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்பதை முதலாவது நினைவிற்கொள்ள வேண்டும்.

வேதாகமத்தின்படி, திருமணம் என்பது வாழ்க்கை முழுவதுக்குமான ஒரு ஒப்பந்தம். இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். (மத்தேயு 19:6).

ஆனாலும், திருமணம் என்பது பாவத்தில் இருக்கிற இரு மனிதர்களைப் பற்றியது என்பதால் விவாகரத்துக்கள் நடக்கும் என்பதையும் கர்த்தர் உணர்ந்திருக்கிறார்.

பழைய ஏற்பாட்டிலேயே, விவாகரத்து செய்தவர்களின், குறிப்பாக பெண்களின், உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென, அவர் சில கட்டளைகளை விதித்திருந்தார் (உபாகமம் 24:1-4).

உபாகமம்
24 அதிகாரம்

1. ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணிக்கொண்ட பின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.

2. அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.

3. அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும்,

4. அவள் தீட்டுப்பட்ட படியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தினபுருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகியகர்த்தர்உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.

இது கர்த்தர் விரும்பினதால் அல்ல, மக்களுடைய கடின இருதயத்தினால் இந்த கட்டளைகள் கொடுக்கப்பட்டன என்பதை இயேசு சுட்டிக்காட்டினார் (மத்தேயு 19:8).
மத்தேயு 5:32 மற்றும் 19:9இல் கொடுக்கப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை வைத்தே வேதாகமத்தில் விவாகரத்துச் செய்யவும், மறு திருமணம் செய்துகொள்ளவும் அனுமதி இருக்கிறதா என்பதைப் பற்றிய சர்ச்சை எழுகிறது.

மத்தேயு
5 அதிகாரம்

32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளி விடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

மத்தேயு
19 அதிகாரம்

8. அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை.

9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப் பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

வேதாகமத்தில் இருக்கும் “வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி” என்ற சொல் ஒன்று மாத்திரமே விவாகரத்துக்கும் மறுதிருமணத்துக்கும் கர்த்தருடைய அனுமதியை வழங்குகிறது.

வேதத்திற்கு அர்த்தம் சொல்லுகிறவர்கள் இந்த “வேசித்தனம்” குறித்த “விலக்கு விதி” “நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் வரை” உள்ள காலத்தை குறிப்பதாகப் புரிந்துகொள்கிறார்கள்.

யூத மரபுப்படி, “நிச்சயதார்த்தம்” செய்துகொண்டாலே ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதாகப் பொருள். இந்தக் கண்ணோட்டத்தின்படி, விவாகரத்து செய்வதற்கு ஒரே சரியான காரணம், “நிச்சயதார்த்தம்” நடந்திருக்கும் காலத்திலே செய்யப்படும் வேசித்தனம் என்றாகிறது.

ஆனாலும், “வேசித்தனம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல், எல்லாவிதமான வேசித்தனப் பாவத்தையும் குறிக்கும். விபச்சாரம், வேசித்தனம் போன்றவற்றை அது குறிக்கலாம்.

வேசித்தனம் செய்யப்பட்டால் விவாகரத்தை அனுமதிக்கலாம் என்று இயேசு சொல்கிறார்போல் தெரிகிறது. பாலியல் உறவு திருமண ஒப்பந்தத்தின் ஒரு பகுதி: “இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:5; எபேசியர் 5:31). எனவே, திருமணத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளப்படும் எந்த பாலியல் உறவும் விவாகரத்து செய்வதற்கான ஒரு காரணமாக அனுமதிக்கப்படலாம்.

இப்படியிருக்கு மெனில், இந்தப் பகுதியில் மறு திருமணத்தையும் மனதில் வைத்துக் கொண்டுதான் இயேசு பேசுகிறார்.

“வேறொருத்தியை விவாகஞ்செய்கிறவன்” (மத்தேயு 19:9) என்ற சொற்றொடர், விலக்கு விதியை எப்படி வேண்டுமானலும் புரிந்துகொண்டாலும் அது பயன்படுத்தப் படும்போது விவாகரத்து மற்றும் மறுதிருமணம் இரண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் இருவரில் பாவம் செய்யாதவரே மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்.

இங்கு எழுதப்பட வில்லையெனினும், விவாகரத்துக்குப் பின் மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதி என்பது யாருக்கும் எதிராக பாவம் செய்யப்பட்டதோ அவருக்கு கிடைக்கும் கர்த்தருடைய இரக்கமாகும், பாவம் செய்தவருக்கு அல்ல. “பாவம் செய்தவரை” மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதித்தது எங்காவது நடந்திருக்கலாம், ஆனால் இங்கு எழுதியிருப்பதில் அப்படிப் போதிக்கப்படவில்லை.

தொடரும்.....

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard