விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? (தொடர்ச்சி.....)
அவிசுவாசியான கணவனோ மனைவியோ விசுவாசியான தன்னுடைய துணையை விவாகரத்து செய்யும்போது மறுதிருமணத்திற்கு அனுமதியை 1 கொரிந்தியர் 7:15இல் சொல்லப்பட்டுள்ள “விலக்கு” மூலம் அளிக்கப்படுவதாகச் சிலர் புரிந்துகொள்கிறார்கள்.
ஆனால் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சூழல், ஒரு அவிசுவாசி விசுவாசியான தன்னுடைய கணவரையோ மனைவியையோ விட்டுப்பிரிந்துபோக நினைத்தால் அந்த விசுவாசி திருமணத்தில் கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் கூறூகிறதே தவிர மறுதிருமணத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. சிலர் கொடுமைக்குள்ளாதலை (கணவனோ, மனைவியோ அல்லது குழந்தையோ) விவாகரத்துச் செய்வதற்கு தகுந்த காரணமாகக் கூறுகின்றனர்.
ஆனாலும் இது வேதாகமத்தில் காரணமாகக் கூறப்படவில்லை. இது இப்படியாகவே இருந்தாலும் கர்த்தருடைய வசனத்திலும் அப்படித்தான் கூறப்பட்டிருக்கும் என்று ஒரு ஊகத்தில் சொல்லுதல் சரியானதல்ல.
வேசித்தனத்தின் பொருள் என்னவாக இருந்தாலும் அது விவாகரத்தை அனுமதிக்க மட்டுமே செய்கிறது, விவாகரத்து கட்டாயம் என்றாக்குவதில்லை என்பது விலக்கு விதியைப் பற்றிய விவாதங்களில் சில வேளைகளில் விட்டுப் போகின்றன.
விபச்சாரம் நடந்திருந்தாலும் கூட, கர்த்தருடைய கிருபையினால் ஒரு தம்பதியினர் மன்னிக்க கற்றுக்கொண்டு தங்களுடைய திருமணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். கட்டாயமாக அவருடைய மாதிரியைப் பின்பற்றி விபச்சார பாவத்தைக் கூட மன்னிக்க முடியும் (எபேசியர் 4:32).
ஆனாலும், பல வேளைகளில், அந்த கணவனோ அல்லது மனைவியோ மனந்திரும்பாமல் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள். அது போன்ற இடங்களில்தான் மத்தேயு 19:9ஐ பயன்படுத்த தேவை எழுகிறது. விவாகரத்து ஆனவுடன் மறுதிருமணம் செய்துகொள்ள பலர் அவசரப்படுகிறார்கள்.
ஆனால் கர்த்தரோ அவர்கள் தனியாய் இருக்க விரும்பலாம். சிலருடைய கவனம் சிதறாமல் இருக்க (1 கொரிந்தியர் 7:32-35) அவர்கள் தனிமையாயிருக்க கர்த்தரால் அழைக்கப் படுகிறார்கள். சில சூழல்களில் விவாகரத்துக்கு பின் மறுதிருமணம் செய்யலாம், ஆனால் கட்டாயம் மறுதிருமணத்தைத் தெரிவு செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
1 கொரி
32. நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன்கர்த்தருக்குஎப்படிப் பிரியமாயிருக்கலாமென்று,கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
33. விவாகம் பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
35. இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல்கர்த்தரைப்பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
அவிசுவாசிகள் உலகத்தில் இருக்கும் அளவு விவாகரத்தின் எண்ணிக்கை விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அதிகமாக இருப்பது வேதனையளிக்கிறது.
கர்த்தர் விவாகரத்தை வெறுக்கிறார் என்பதையும் (மல்கியா 2:16) மன்னித்தலே ஒரு விசுவாசியின் வாழ்வின் அடையாளமாக இருக்கவேண்டும் (லூக்கா 11:4; எபேசியர் 4:32) என வேதாகமம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனாலும், தன்னுடைய பிள்ளைகள் மத்தியுலும் விவாகரத்து நடைபெறும் என்பதைக் கர்த்தர் ஏற்றுக்கொள்கிறார்.
ஒரு விவாகரத்து அல்லது மறுதிருமணம் மத்தேயு 19:9இல் கூறப்பட்ட விலக்கு விதியின் படியானது இல்லையென்றாலும், கர்த்தர் தம்மை குறைவாக அன்பு செய்கிறார் என விவாகரத்து செய்துகொண்ட அல்லது மறுதிருமணமும் செய்துகொண்ட விசுவாசி நினைக்க கூடாது.
பலவேளைகளில் கிறிஸ்தவர்களின் பாவத்தினால் ஏற்பட்ட கீழ்படியாமையை பல மேன்மையான நன்மைகளை அடைய கர்த்தர் பயன்படுத்துவார்.