❇என் அலுவலக மேனேஜரின் பயமுறுத்தலும்,😸😺 கனவில் தேவனுடைய ஆறுதலான வார்த்தையும்!!!❇
🏨🏢நேற்று என் அலுவலக மேனேஜர் என்னைப்பார்த்து, இன்று பேப்பர் படித்தாயா?! பணம் கொடுத்து மதம் மாற்றியதாக சொல்லி சில கிறிஸ்தவர்களை காவல்துறை கைதுசெய்திருக்கிறார்கள் என்று சிரித்துகொண்டே சொன்னார்.😀😜
மேலும் நீயும் இப்படி நம் அலுவலகத்தில் மதம் மாற்றம் செய்துகொண்டுவருவதால் உன்னையும் போலிஸ் அரஸ்ட் செய்ய வாய்ப்புயிருக்கிறது என்றார். நானும் சிரித்துக்கொண்டே பரவாயில்லை சார், பிடித்துக்கொண்டு போகட்டும் என்று சொன்னேன். 👌👍✌
அப்பொழுது மேனேஜர் பக்கத்தில் இருந்த ஒரு நண்பன் என்னை பார்த்து ( 👉இன்னொரு நண்பனை சுட்டிக்காட்டி) இவன் மட்டும் கிறிஸ்தவ மதத்திற்க்கு மாறிவிட்டால் நீ நிச்சயம் போலிஸால் அரஸ்ட் பண்ணப்படுவாய் என்றான். 👀 அந்த இன்னொரு நண்பனிடம் நான் மராத்தி பைபிள் படிக்கக்கொடுத்திருந்தேன், ஆண்டவரைப்பற்றியும் அந்த நண்பனுக்கு அறிவித்திருந்தேன்.👑📢🌟
கம்பனி டைரக்டரை தவிர, ஆபிஸ் பாயிலிருந்து மேனேஜர் வரை பெரும்பாலும் அனைவருக்கும் இயேசுகிறிஸ்துவை பற்றி அறிவித்ததுண்டு, நிறைய பேர் இன்னும் என்மேல் கடுப்பாயிருக்கின்றனர்.💨😡 ஒருதடவை இயேசுவை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நிறையபேர்கள் என்னை சூழ்ந்துக்கொண்டு இயேசுவை பற்றி கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர். நானும் அவர்களுக்கு தனித்தனியாகவும், அவர்கள் தனியாக இருக்கும்பொழுதும் இயேசுகிறிஸ்துவைக்குறித்து அறிவித்ததுண்டு. ஒரு நண்பனுக்கு இயேசுவைகுறித்து அறிவித்து, பைபிள் கொடுத்து அவனும் நானும் லோக்கல் இரயிலில்🚇🚝பயணம் செய்யும்பொழுதெல்லாம் அவனும் என்னோடு சேர்ந்து பைபிள் 📖வாசிப்பதுண்டு, எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். ஆனாலும் சிலர் பொய்யை பரப்பி என்னோடு போராடுவதுண்டு. 💨
இன்று நடந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு வீட்டிற்க்கு வந்து, வழக்கமான இரவு ஜெபத்திலும் வைத்துவிட்டு தூங்கிவிட்டேன்.😤 அதிகாலையிருக்குமென்று நினைக்கிறேன் அந்த கனவு இப்போதும் ஞாபகமிருக்கிறது.😇
முரட்டுகுணமுள்ள ஒரு ஆள் 💂🏿நிற்கிறார் அவர் வெளிநாட்டுக்காரர் போல தெரிகிறது, அவருடைய மகன் ஏதோ ஒரு தீய செயலை செய்ய வேண்டுமென்று துடித்துக்கொண்டு நிற்கின்றான். அவருடைய மகன் அருகில் நான் நிற்கிறேன்.😊
அவருடைய மகனுக்கு நான் 🙏ஜெபிக்கவேண்டுமென்று உந்தபடுகிறேன் ஆனால் எனக்கு பின்னால் தூரமாக நிற்க்கும் மக்கள் கூட்டம் என்னை நோக்கி என்ன நடக்கப்போகின்றதோ ஏது நடக்கப்போகின்றதோ என்று எங்களை கவனித்துக்கொண்டிருக்கிறது. 😳👀
அவருடைய மகனுக்கு நான் ஜெபம் 🙏செய்தால் பெரிய பிரச்சனையே நடக்குமென்று நானும், எனக்கு பின்னால் நின்ற நினைத்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது. நானும் பயந்துக்கொண்டு 😳😟😧இன்றைக்கு வசமாக மாட்டிக்கொண்டோம் என்று நினைத்தகொண்டே , படக்கென்று அவருடைய மகனுடைய தலையில் கையை வைத்து 🙏ஜெபிக்கத்தொடங்குகிறேன் - Oh... Lord Jesus, Son of God.... please forgive all of his sins ( இப்போது இந்த வார்த்தை நினைவிலிருக்கிறது ) என்று தொடங்கி ஜெபத்தை முடித்தவுடன், அந்த அந்த முரட்டு தகப்பனார் தூரத்திலிருந்து இவனுக்கு 💰200 ரூபாய் செக் எழுதி கொடு என்று அவருடைய வேலைக்காரனிடம் சொல்கிறார். வேலைக்காரன் ஓடோடி என் பக்கத்தில் வந்து செக் எழுத ஆரம்பிக்கிறார். 📝
இப்பொழுது என்னுடைய பயமெல்லாம் போய் நான் சந்தோஷமாகி, அவரை நோக்கி ஓடிபோய் - ஐயா எனக்கெல்லாம் 200 ரூபாய் வேண்டாம் 2 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்று அமைதியாக சொல்கின்றேன். இரண்டு ரூபாய் என்பதற்க்காக இரண்டு விரல்களையும் காட்டிக்கொண்டு திரும்பதிரும்ப அதையே சொல்லிக்கொண்டுயிருக்கின்றேன், முழித்துவிட்டேன்!
ஒரே ஒரு விஷயம் மட்டும் இந்த கனவிலிருந்து என்னால் புரியமுடிந்தது - பலநேரங்களில் நான் ஆட்களை பார்த்து, சூழ்நிலைகளை பார்த்து பயந்துகொண்டு😗😴 இயேசுகிறிஸ்துவை அறிவிக்காமல் இருந்ததுண்டு, உயிருக்கு பயந்ததுண்டு இனி அப்படியிருக்ககூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன். எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் தேவன் சுமுகமாக முடித்து தருவார் என்பதை தேவன் இந்த கனவில் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்💫✨ என்பதை புரிந்துக்கொண்டேன்.💡😇
ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்;🔪🔫 அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.யோவான் 15:20 📢👈
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு📢🔪🔫 நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.✅😐மத்தேயு 10:28