இக்கேள்யை உங்களிடம் கேட்டால் "ஆம் இதேலென்ன சந்தேகம் பிரதர்? இயேசுவே எனக்கு ஜீவன் அவரே எனக்கு தேவன் அவரை உயிராக நேசிக்கிறேன்" என்று பதில் சொல்வது எல்லோருக்கும் சுலபம். ஆனால் நம் நடைமுறை வாழ்வில் அதற்க்கான சோதனையை சந்திக்கும்போதுதான் நம் உண்மை நிலை என்னவென்பது புரியவரும்.
என் மகன் 10ம் வகுப்பில் 452/- மதிப்பெண்கள் பெற்றான் அப்பொழுது 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்களுக்கு ரூ 5000/- பணம் கொடுக்க ஒரு நிறுவனம் முன்வந்தது. ஆனால் அவர்களின் ஒரு கண்டிசன் நாம் இருக்கும் வாடகை வீடுக்கு ரூ 5000/- க்கு மேல் வாடகை இருக்க கூடாது என்பதுதான். நாங்கள் அப்பொழுது ரூ 6000/- ருபாய் வாடகையில் இருந்தோம். அநேகர் வாடகையை குறைத்து சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டனர். ஆனால் "உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தையா? அல்லது 5000/- ருபாய் பணமா என்று வந்தபோதுதான் பிரச்சனையின் தீவிரம் தெரிந்தது.
இதுபோன்ற நிலையில் நீங்கள் உண்மையை சொல்லி பணத்தை நிராகரித்த்தால்தான் நீங்கள் உண்மையாக இயேசுவை நேசிக்கிறீர்கள் என்று அருத்தம்
யோவான் 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
மற்றபடி வெறுமனே நான் பணத்தைவிட இயேசுவை நேசிக்கிறேன் என்று வாயால் சொல்லிக்கொண்டு ஆமென் போட்டுகொண்டு தேவையானபோது பொய்சொல்லி பணத்தை பெறுவது மாய்மாலம்!
அத்தோடு நீங்கள் இயேசுவைவிட பணத்தைதான் நேசிக்கிறீர்கள் என்பதற்கும் அதுவே அடையாளமும் கூட!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)