பாவமே இல்லாத நம் ஆண்டவராகிய இயேசு அதிகம் காயபட்டார் துன்பபட்டார் வேதனைபட்டார் அதற்க்கு காரணம் என்னவென்பதை வேதம் இவ்வாறு சொல்கிறது
ஏசாயா 53:5நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;
எனவே "மீறுதல்" இல்லாமல் யாருக்கும் காயமும் இல்லை நொருக்குதலும் இல்லை துன்பமும் இல்லை என்பதை நாம் அறியவேண்டும்.
அதே நேரத்தில் மீறுதல் இருந்தால் அங்கு காயமோ துன்பமோ இல்லாமல் தப்பிக்கவும் வழியில்லை என்பதையும் அறிய வேண்டும்.
பிறரின் மீறுதலுக்காக காயபட்டவர் நம் ஆண்டவர் இயேசு ஒருவரே அப்படியெனில், நம் போன்ற மனுஷர்கள் யாருடைய மீறுதலுக்காக காயமும் துன்பமும் அடைகிறோம் என்று சற்று யோசியுங்கள்.
எசேக்கியேல் 39:24அவர்களுடைய அசுத்தத்துக்குத் தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.
என்று ஆண்டவர் சொல்கிறார்.
எனவே நாம் கிறிஸ்த்தவன் என்பதற்காக யாரும் நம்மை துன்புறுத்தி விட முடியாது. உலகத்தில் கிறிஸ்த்தவர்கள் அல்லாதவர்களும் அநேகர் துன்புருத்தப்படுகின்ற்றனர். நாம் கிறிஸ்த்தவன் என்பதற்காக் எவனும் நம்மேல் வண்கண்ணனாக இருந்துவிட முடியாது! நம் அன்பிபாலும் நேர்மையான நடக்கையினாலும் நிச்சயம் அவர்களை கவர்ந்துவிட முடியும்! என் வாழ்க்கையில் நான் அதை அனுபவித்திருக்கிறேன்.
சரியான உண்மை என்னவெனில்!
நாம் கிறிஸ்த்துவுக்குள் இருக்கும்போது நமது சிறு சிறு மீறுதல்கள் கூட பெரிதாக்கபட்டு தண்டனைக்கு நேராக நடத்துகிறது.
என்றுமே வகுப்பறையில் முதல் பெஞ்சில் உள்ள மாணவன் ஆசிரியர்களின் நேரடி பார்வையில் இருப்பதுபோல நாம் கிறிஸ்த்துவுக்குள் வரும்போது தேவனின் நேரடிப்பார்வைக்கு வருகிறோம். இந்நிலையில் நம் சிறு சிறு மீருதல்களுக்கும் எதிர்ப்புகள் / தண்டனையை கொண்டுவந்து நம்மை இன்னும் பிரகாசிக்க பண்ணும்போருட்டு தேவன் செயல்படுகிறார் என்பதே உண்மை!
எனவே நம் மீறுதல்களை ஆராய்ந்து அறிந்து அவற்றை விலக்குவதே சமாதானமான வாழ்க்கைக்கு ஒரே வழி!
-- Edited by SUNDAR on Monday 16th of November 2015 03:10:01 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)