நமது வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் மனுஷர்கள் மற்றும் காரியங்களை சரியாக தேவனுக்கு ஏற்றபடி கையாள தெரிந்தாலே அங்கு நம்மீதான தேவனுடைய சித்தம் நிறைவேறிவிடும்.
அநேகர் தங்கள் கண்ணுக்கு எட்டும் தூரகுதில் இருக்கும் காரியங்களை ஆராயாமல் விட்டுவிட்டு கடலுக்கு அப்பால் எங்கோ நடக்கும் நிகழ்வுகளையும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்துகொண்டு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான காரியங்களில் கோட்ட்டைவிட்டு விடுகின்றனர்.
அதாவது வேதத்தில் சாதாரணமாக சொல்லபட்டுள்ள விஷயத்தை புரியமுடியாமல் ஆவிக்குரிய வியாக்கீனம் என்று ஆகாயத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள்!
அன்று இஸ்ரவேல் ஜனங்களும் அவ்வாறே கோட்டை விட்டனர்!
தங்கள் கண்முன்னால் நடமாடிய ஜீவனுள்ள தெய்வமாகிய இயேசுவை அறிந்துகொள்ள முடியாமல் இன்னொரு மேசியா வருவார் வருவார் என்று எதிர்நோக்கிக் ஏமாந்து கொண்டு இருந்தனர். இறுதியில் உலகை உண்டாக்கிய உன்னத தெய்வத்தையே சிலுவையில் அறைந்து ரட்சிப்பை காணாமல் போனார்கள்.
நாமும் அதுபோல் அருகே நடப்பதை விட்டுவிட்டு ஆழத்தில் போய் எதையோ தேடிக்கொண்டு இருக்காமல், நமது எல்லைக்கு எட்டிய தூரங்களில் நமது கண்களுக்கு நேர் நடக்கும் காரியங்களில் உத்தமத்தை கைகொண்டு, தேவனுக்கு ஏற்றவிதமாக வாழவேண்டும் என்பதே தேவன் நம்மீது வைத்திருக்கும் திட்டம்.
உபாகமம் 30:11. நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.
12. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல
13. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;
14 நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன்வாயிலும்உன் இருதயத்திலும் இருக்கிறது.
என்று வேதம் சொல்கிறது! எனவே நமது ஆவிக்குரிய பயணத்தை நமது அன்றாட நிகழ்வுகளில் நமக்கு அருகில் இருப்போரில்இருந்தும் தொடங்குவதே சிறந்தது.
I யோவான் 4:20தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)