என்ற யோபுவின் வார்த்தை வியக்க வைக்கும் விசுவாச வார்த்தையே!
2. தன்னை தூஷிப்பவனை எதிர்த்து தூஷிப்பதும் தனக்கு கேடு செய்தவனுக்கு எதிராக செயல்படுவதுமான செயல்பாடுகள் நிறைந்த இந்த உலகத்தில்
"அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத்தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.II சாமுவேல் 16:10
"கர்த்தர் சொன்னார் அவன் என்னை தூஷிக்கிறான்" என்று சொல்லி துயரத்தோடு விலகி சென்ற தாவீதின் விசுவாசம் வியப்பிற்குரியதே!
3. தேவன் என்பவர் கண்டிப்பாக நன்மையையே செய்ய வேண்டும் நோயை குணமாக்க வேண்டும் பேயை விரட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஜனங்கள் மத்தியில்
"நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்;18விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.தானியேல் 3:17.
"எங்களை தப்புவித்தாலும் தப்புவிக்காவிட்டாலும்" தேவனின் வார்த்தைக்கு விரோதமாக செயல்பட மாட்டோம் என்று பிடிவாதமாக நின்ற சாத்ராக்/மேஷாக்/ஆபன்னேகா என்பவர்களின் விசுவாசம் வியக்க வைக்கிறதே!
4. "ரூபாய் 1000 காணிக்கை கொடுத்தேன் கர்த்தர் பத்தாயிரமாக திருப்பி தந்தார்" "ஒரு வீடு வைத்திருந்தேன் கர்த்தர் நான்கு வீடு வாங்க கிருபை செய்தார்" என்று தேவனின் கிருபையை விருதாவாக வியாக்கீனம் செய்யும் ஜனங்கள் மத்தியில்
18 நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்ஆபகூக் 3:17
"என் வீட்டில் எதுவுமே இல்லாமல் போனாலும் நான் தேவனுக்குள் கழிகூர்ந்து மகிழ்ந்துகொண்டு இருப்பேன்" என்று சொன்ன ஆபகூக்கின் அபூர்வ விசுவாச வார்த்தையை நினைத்தாலே உள்ளம் மகிழ்ச்சியில் உந்தப்படுகிறதே!
5. பத்து ஆத்துமாக்கள் உள்ள சபை பாஸ்டருக்கு கூட "நான் ஒரு பாஸ்டர் என் மனைவி பாஸ்டரம்மா" என்ற பெருமை பிடித்துள்ளது மற்றும் "நான் தீர்க்கதரிசி" "நான் அப்போஸ்தலர்" "நான் ரெவரண்ட்" என்று போட்டிபோட்டுக்கொண்டு பட்டங்களை சூட்டிக்கொள்ளும் தேவ ஊழியர்கள் மத்தியில்
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்குஐயோ.I கொரிந்தியர் 9:16
என்று சொல்லியுள்ள பணக்காரன் மற்றும் படிப்பாளியாகிய பவுலின் பயத்துடன் கூடிய விசுவாச வார்த்தை நமக்கு பதட்டத்தை உண்டாக்குகிறதே!
இவை ஐந்தும் என்னை அதிகமாக வியக்க வைத்த விசுவாச வர்த்தைகள சகோதரர்களே!
இத்தோடு மட்டுமல்ல உங்கள் பார்வைக்கு மேலான விசுவாசம் என்று எண்ணும் வேத வார்த்தைகள் இருந்தால் இங்கு பதிவிடுங்கள் எனக்கு பிரயோஜனமாக இருக்கும் சகோதரர்களே!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)