எந்த வேலையும் இல்லாமல் இருப்பவர்கள் ஒரு வேலை அப்படி ஜெபம் செய்யக்கூடும். மற்றபடி எப்போதும் ஜெபம் பண்ண முடியாது என்று வேறு சிலர் சொன்னார்கள்.
இப்படி பலவித அபிப்பிராயங்கள் அங்கு எழும்பின.
கூட்டத்தை நடத்தினவர், இதைப்பற்றி நாம் ஒரு வாரம் யோசித்து, அடுத்த கூட்டத்தில் இந்த வசனத்தின் அர்த்தத்தை பற்றி முடிவு செய்வோம் என்றார்.
இதைக்கேட்டு கொண்டிருந்த ஒரு வேலைக்காரப்பெண் அவரிடம், "அய்யா! இந்த வசனத்தின் கருத்தை என் அனுபவத்தில் இருந்து சற்று விளக்கி காட்ட முடியும். உத்தரவு கொடுத்தால் இப்போதே சொல்லுகிறேன்" என்று கேட்டு கொண்டாள். இந்தி கேட்டு கூட்டத்தில் உள்ளவர்கள் ஆத்திரப்பட்டாலும் அவளை பேச சம்மதித்தார்கள்.
அப்போது அந்த பெண் இப்படி கூறினாள்:-
"அதிகாலையில் நான் விழிக்கும்போது "ஆண்டவரே என் இதய கண்களை திறந்தருளும்"(சங்கீதம் 119 : 18) என்று ஜெபிக்கிறேன்.
முகம், கை கால்களை கழுவும்போது "கர்த்தாவே என்னை முற்றிலும் கழுவியருழும்" என்று ஜெபிக்கிறேன்.
கண்ணாடியில் என் முகத்தை பார்க்கும்போது, "இந்த கண்ணாடி என் முகத்தின் அழுக்கை காட்டுவது போல், என் அகத்தின் அழுக்கை ஞானக்கண்ணாடி ஆகிய உமது பரிசுத்த வேதம் காட்டுவதாக" என்று ஜெபிக்கிறேன்.
பரிசுத்த வேதம் வாசிக்கும்போது, "மறைவான மன்னாவால் என்னை போஷியும்" என்று ஜெபம் செய்கிறேன்.
வேலை செய்ய தொடங்கும்போது "உமது பலத்தால் என்னை இடைக்கட்டும். என் பலவீனத்தில் உமது பலன் பூரணமாக விளங்குவதாக" என்று ஜெபிக்கிறேன்.
அடுப்பு மூட்டும் போது "உமது பரிசுத்த ஆவியால் என் குளிர்ந்த இருதயத்தை அனல் மூட்டும்" என்று ஜெபம் செய்கிறேன்.
சாப்பிடும்போது, "கர்த்தாவே! இந்த ஆகாரத்திற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஒன்றுமில்லாதவர்களுக்காக பரிதவித்து அவர்களுக்கு தேவையானதை அருளிச்செய்யும்" என்று வேண்டுகிறேன்.
இரவில் படுத்து கொள்ளும்போது "இயேசுவே நான் தூங்குகையில் என்னை காப்பாற்றும். விழித்து கொள்ளும்போது உம்மோடு விழித்திருக்க கிருபை செய்யும்" என்று ஜெபிக்கிறேன்.
இப்படி அந்த வேலைக்கார பெண் கூறியதை கேட்ட அனைவரும் அவளுடைய ஜெப ஜீவியத்தை குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
அதோடு "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" என்ற வசனத்தின் அர்த்தத்தையும் தெளிவாக அறிந்து கொண்டார்கள்.
தாங்களும் அந்த வேலைக்கார சகோதரியை போல, தினமும் ஜெபிக்க தீர்மானித்து கொண்டார்கள்.
ஆம்! நீங்களும் இப்படி "ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதை உள்ளவர்களாக இருங்கள்"(1 பேதுரு 4 : 7 )- என்று நம்மை பார்த்து தேவன் தந்த பரிசுத்த வேதம் சொல்கிறது.
--------------FACE BOOK
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)