தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் விட அதிகமாய் என்னை நேசிக்காதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
"தேவன் அன்பாகவேயிருக்கிறார். புருஷர்களே உங்கள் மனைவிகளிடத்தில் அன்பு கூருங்கள், மனைவிகளே உங்கள் புருஷருக்கு கீழ்ப்படியுங்கள்" என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
யோவான் 15:12ல் நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது என்று இயேசு கூறியிருக்க மேலே கூறப்பட்ட வசனத்தை சிலர் தவறாக விளங்கிக்கொள்கிறார்கள்.
ஆங்கிலத்தில்:
[1] மத்தேயு 19:29- forsake (விட்டுவிடுதல்)
[2] மாற்கு 10:19- forsake (விட்டுவிடுதல்)
[3] மத்தேயு 10:37- Loving more than ( அதிகமாக நேசித்தல்)
[4] லூக்கா 14:26- hate (வெறுத்துவிடுதல்)
[colore=blue]இந்த வசனங்கள் அனைத்தும் வெறுப்பு (hatred) என்கிற அர்த்தத்தில் அல்ல, விட்டுவிடுதல், தேவனை இவை எல்லவற்றைக்காட்டிலும் அதிகமாக நேசித்தல் அல்லது இவைகளை ஒதுக்கி வைத்து விடுதல் என்றே அர்த்தமாகும்.
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கட்டளை.
I) மாற்கு 1:30ல் அங்கே சீமோனுடைய (பேதுருவின்) மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; பேதுருவுக்கு தன் வீட்டின் மேல் ஒரு சிந்தை இருந்ததாக நாம் இதன் மூலம் தெரிகிறது.
இயேசுவோ இந்த பேதுருவைக்கொண்டு தன் சபையை கட்டி எழுப்ப சித்தம் கொண்டிருந்தார். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு பேதுரு பின்மாற்றம் அடைந்துமீண்டும்மீன் பிடிக்க சென்றார்.
அங்கே தான் இயேசு தோன்றி யோனாவின் குமாரனாகிய சீமோனே "இவர்களிலும் அதிகமாய் நீ" என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என் ஆட்டுக்குட்டிகளை(சபையை/ஆத்துமாக்களை) மேய்ப்பாயாகஎன்றார். ( யோவான் 21)
இங்கு "மனைவியையும்.... சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் "காட்டிலும்நீ என்னை நேசிக்கிறாயா? என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
II) தேவன் ஆபிரகாமை "உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்." ஏன்?
அவன் தன் மகனை தேவனைக்காட்டிலும் அதிகமாக நேசித்தான். அவனைபலியிட கொண்டு சென்ற பின் தேவன் அவனை தடுத்து நிறுத்தி: "நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்."
இங்கேநேசகுமாரன்என்று தேவன் கூறவில்லை! மத்தேயு 19:27 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; என்றான்.
தேவனுக்காக முழு நேரம் ஊழியம் செய்ய விரும்புவோர், எல்லாவற்றையும் விட்டு தேவனை பின்பற்றினால் அதுமேலான சேவையாகும். குடும்பத்துடன் சேவை செய்தால் தவறல்ல. ———————————— CharlesMSK@8012978922 ————————————
CHARLES MSK///[colore=blue]இந்த வசனங்கள் அனைத்தும் வெறுப்பு (hatred) என்கிற அர்த்தத்தில் அல்ல, விட்டுவிடுதல், தேவனை இவை
எல்லவற்றைக்காட்டிலும் அதிகமாக நேசித்தல் அல்லது இவைகளை ஒதுக்கி வைத்து விடுதல் என்றே அர்த்தமாகும்///
நல்ல அருமையான விளக்கங்கள் சகோ. நன்றிகள் பல.
இந்த உலகத்தில் பலர் தங்கள் சொத்துக்கள் மேலும் /தன பிள்ளைகள் மேலும் தன தொழிலின் மீதும் அதிக நேசமும், அதுதான் தன்னை எதிர்காலத்தில் காக்க போகிறது என்ற நம்பிக்கையும் வைத்துள்ளார்கள்
தேவனை தவிர வேறு எந்த ஒன்றையும் அதிகம் நேசிக்க கூடாது என்றும் தேவனுக்காக எதையும் விட்டுவிட தயாராக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவர் சொல்லும் வார்த்தையின் சரியான பொருள் என்றே நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)