1. அதிக வற்புறுத்தலால் ஜெபம் கேட்கப்படும் என்று நினைப்பது தவறு.
நாம் ஜெபிக்கும் விஷயத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமலே ஜெபித்தல் கூடாது.
( உ.தா ( i ). தீயபழக்கத்தை விட்டு விட ஆசையில்லாமலே அதற்காக ஜெபித்தல்)
2. பிரார்த்தனைகள் திட்டவட்டமாய் இருத்தல் வேண்டும் .
(உ.தா ( i ). நாங்கள் பாவிகள் எங்களை மன்னியும் என்று கேட்பது எளிது, ஆனால் நமது பாவங்களை ஒவ்வொன்றாய் அறிக்கை செய்தல் வேண்டும்.
( ii ). எல்லா ஈவுகளுக்கும் நன்றி என்று சொல்லாமல், அவற்றை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு நன்றி செலுத்துதல் நல்லது ).
3. பிரார்த்திக்கும் போது நாம் ஒருவர் மாத்திரமே இந்த உலகத்தில் இருப்பது போல நினைத்துக் கொண்டு சுயநலமுள்ள ஜெபத்தை ஏறெடுக்கக் கூடாது. நம் ஜெபத்தால் மற்றவர்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமா என்பதை கவனிக்க வேண்டும்.
( உ.தா ( i ) ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக மழையை நிறுத்தச் சொல்லி ஜெபித்தல்
( ii ). நாம் தாமதமாக கிளம்பிவிட்டு, அதற்காக ரயில் தாமதமாக புறப்பட வேண்டும் என்று ஜெபித்தல் )
4. என் விசுவாசம் அதிகமாயிருப்பதால் ஜெபத்திற்கு நான் எதிர்பார்த்த பதிலே கிடைக்கும் என்று நினைத்தல் தவறு சில காரியங்களுக்காக நாம் ஜெபிக்காமலும் இருக்க வேண்டும்.
வேதத்தில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட விஷயங்களுக்கு ஜெபித்தல் ஆகாது.
(உ.தா ( i ). அவிசுவாசிகளுடன் திருமண உறவு வேண்டாம் என்று திருமறை சொல்லும் போது, வேண்டும் என்று சொல்லி ஜெபித்தல் கூடாது).
5. நியாயமல்லாத செயலுக்காக ஜெபித்தல் தவறு.
(உ.தா ( i ). ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிவிட்டு யாரிடமும் மாட்டி விடக்கூடாது என்று ஜெபித்தல் தவறு) ......
6. முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள் என்பது, ஜெபத்திற்கே முதலில் பொருந்தும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு ஏற்றவைகளை மாத்திரம் ஜெபித்தல் நல்லது.
(உ.தா , 1. இந்தியா பாகிஸ்தான், கிரிக்கெட் போட்டிக்காக ஜெபித்தல் ஒன்றுக்கும் உதவாது)
7. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம் புரிந்து ஜெபித்தல் நல்லது.
(உ.தா , i. பகைவரை சினேகிக்க வேண்டி ஜெபித்தலை விட்டு சபித்தல் ஆகாது.
ii. பழைய ஏற்பாட்டின் பொருத்தனை ஜெபம் புதியஏற்பாட்டில் ஒரு போதும் செல்லாது என்பதை மனதில் கொள்க.
iii. பழைய உடன்படிக்கையில் நமக்காக ஆசாரியன் ஜெபித்த போது, புதிய உடன்படிக்கையில் நாமே ஆசாரியர்கள் என்பதை மறக்கக் கூடாது.
iv. இஸ்ரவேல் ஜனங்கள் தேவாலயத்தில் வந்து ஜெபித்த போது விசேஷித்த பலனைப் பெற்றார்கள். ஆனால் இப்போதோ நாமே தேவனுடைய ஆலயமாய் இருக்கிறோம். இடம் ஒரு பொருட்டல்ல.)
8 ஜெபத்தின் மூலம் பக்கத்தில் உள்ளவருக்கு உபதேசிப்பதைக் காட்டிலும் ஊமையாயிருப்பதே நல்லது.
9 . மேடையில் ஒருசிலரை கௌரவிப்பதற்காக, கொடுக்கப்படும் ஜெபம் கழிவறையில் இருக்கும் மலத்தைக் காட்டிலும் அருவருப்பானது.
10. அதிக சப்தமாய் ஜெபித்தால் தான் ஜெபம் கெட்கப்படும் என்று எண்ணுவது, தேவனை செவிடு என்று எண்ணுவதற்குச் சமமானது.
11. அதிகாரத்தை பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி ஜெபத்தில் சாதாரணக் காரியங்களுக்குக் கூட தேவனுக்குக் கட்டளை கொடுப்பது அவரை வேலைக்காரராக்குவதற்குச் சமம்.
22. மனிதனுக்கு முன்பாக மேன்மையாக வாழ வேண்டும் என்பதற்கு ஜெபமல்ல, தாழ்மையாக வாழ வேண்டும் என்பதற்கே ஜெபம்.
23. நடந்த சம்பவங்களை தேவனுக்கு ஜெபத்தில் மீண்டும், மீண்டும் தெரியப்படுத்துகிறவன், தேவனை நடக்கத் தெரியாத குழந்தையைப் போல நடத்துகிறான்.
24. தேவனுக்கே தேவனுடைய வார்த்தையை சுட்டிக்காண்பிப்பது பழைய ஏற்பாட்டின் ஜெபம். அவர் தமது வார்த்தையை நமக்கு சுட்டிக்காண்பிக்க வேண்டுமென்பது புதிய ஏற்பாட்டின் ஜெபம்.
25. வரத்தினால் கூட செய்ய முடியாத ஊழியத்தை ஜெபத்தினால் செய்ய முடியும்
26. ஜெபத்தினால் தீட்டப்படாத கோடாரி எந்த இதயமாகிய மரத்தையும் வெட்ட முடியாது.
27. நம்முடைய இதயக் கதவின் திறவுகோலே ஜெபம்.
28. நம் இதய சிந்தனைகளையெல்லாம் தேவனுக்கு எடுத்துக் கொடுக்கும் கரமே ஜெபம்.
29. மற்றவர்களிலிருக்கும் பிசாசை துரத்துவதற்கு மாத்திரம் ஜெபமல்ல, நம் வாழ்கையில் எந்த ஒரு இடத்திலும் பிசாசுக்குப் பிரியமானதை செய்யாமல் இருக்கவே ஜெபம்.