நான் அறிந்த வகையில் சொல்கிறேன் சகோதரரே. Lucifer என்பது ஒரு லத்தீன் சொல். இது ரோமர்கள் பயன்படுத்திய சொல். அதாவது ரோம வானியல் அறிஞர்கள் விடிவெள்ளி நட்சத்திரத்தை குறிப்பதற்கு இச்சொல்லை பயன்படுத்தி வந்தனர்.
வேதாகமத்தில் ஏசாயா-14:12 இல் வரும் விடிவெள்ளி என்னும் சொல்லுக்கு ரோமர்கள் Lucifer என்னும் இச்சொல்லை பயன்படுத்தி வந்ததால் ஆங்கில வேதாகமமான king james version (kjv bible) ஐ மொழிபெயர்த்தவர்கள் விடிவெள்ளி என்ற சொல்லுக்கு Lucifer என்ற சொல்லை பயன்படுத்தி விட்டனர்.
ஏசாயா 14:12அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
Isaiah 14:12How art thou fallen from heaven, O Lucifer, son of the morning! how art thou cut down to the ground, which didst weaken the nations!
மேலும் புதிய ஏற்பாட்டில் இயேசுவும் விடிவெள்ளி என்று சொல்லப்பட்டாலும் இயேசுவை பற்றி கூறிய இடங்களில் இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தவில்லை. எனவே kjv ஆங்கில வேதாகமம் அதிக காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் Lucifer என்றால் சாத்தான் என்று மக்கள் பழக்கப்பட்டு விட்டனர்.
Lucifer என்னும் சொல் kjv வேதாகமத்தில் ஏசாயா-14:12 வசனத்தில் உள்ளது.
__________________
.................................................. எப்போதும்நான் ஒரு வேதாகமமாணவனே ...............................................