அத்திமரத்தை இயேசு சபித்த காலம் அத்திமரங்கள் கனி கொக்கும் காலமல்ல. அதை அறிந்தும் கூட இயேசு அதை சபித்தது சற்று கேள்விக்குரியதாக தோன்றுகிறது. கனி கொடுக்கும் சீசன் இல்லை என்று தெரிந்து கொண்டும் இயேசு கனிகளை தேடியது தவறு போல தோன்றுகிறது.
ஆனால் உண்மை என்னவெனில் அத்திமரங்கள் கனி கொடுக்கும் சீசனுக்கு சற்று முன்பதாக சிறிய சிறிய உருண்டையான கொத்து கொத்தான காய்களை கொடுக்கும். இது மொட்டுகள் போல காணப்படும். இதுவும் சாப்பிடக் கூடியதே. ஆனால் இது உண்மையான கனியல்ல. வழிப்போக்கர்கள், பசியடைந்தோர் இதை சாப்பிடுவார்கள். சீசன் வரும் போது இந்தக்காய்கள் கொட்டி விடும். உண்மையான காய்கள் தோன்றும். அத்திமரம் பழ சீசனுக்கு முன்பதாக நிறைய இலைகளுடன் இந்த காய்களை கொடுக்காவிட்டால் அந்த வருடம் அம்மரம் கனி கொடுக்காது என்று அர்த்தம்.
இயேசு சபித்த மரம் இந்த நிலையில்தான் இருந்தது.
இயேசு இந்த காரியத்தை நிகழ்த்திக் காட்டியது சுந்தர் அண்ணா சொன்னது போல கனிகொடுக்காதவர்களுக்கு ஏற்படும் நிலையை காட்டுவதற்காக இருந்தது. அது மட்டுமன்றி எருசலேமின் வீழ்ச்சியையும் இயேசு இதன் மூலம் முன்னறிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
__________________
.................................................. எப்போதும்நான் ஒரு வேதாகமமாணவனே ...............................................