இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உங்களுக்கு விசுவாசத்தை வளர்க்கும் சில அனுபவ சாட்சிகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
உங்களுக்கு விசுவாசத்தை வளர்க்கும் சில அனுபவ சாட்சிகள்!
Permalink  
 


சம்பளம் கிடைக்க அனுகூலம் செய்த தேவன்: 
 
எங்கள் அலுவலகம் கடுமையான பண நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. போன மாதம் 23ம் தேதிதான் சம்பளம் கொடுத்தார்கள். இந்த மாதம்   நேற்று 13ம் தேதி ஆகியும்ச ம்பளம் கிடைக்காததால் எல்லோரும் சேர்ந்து திடடம்போ ட்டு MDயை பார்த்து புகார் அளிப்பதற்காக கிளம்பி போனார்கள்.
 
அலுவலக மேலாளர் என்னிடம் வந்து சொல்லி என்னையும் கூப்பிடடார் ஆனால் எனக்கு இதுபோன்று முதலாளியிடம் போய் சம்பளம் கொடு என்று கேட்பது எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. 
 
எனவே நான் போகாமல் எல்லோரும் வெளியில் போனபிறகு ஆண்டவரிடம் இந்த பிரச்சனையை சொன்னேன். "ஆண்டவரே எனக்கு சம்பளம் கொடுப்பது இந்த MD இல்லை நான் அவரிடம் போய் சொல்வதற்கு. வேலையை கொடுத்தவர் நீங்கள் எனவே என் சம்பளம் கிடைக்க ஏற்பாடு பண்ண வேண்டியது உங்கள் பொறுப்பு. எல்லோரும் சம்பளம் கிடைக்கல கஷடபடுகிறோம் எங்களுக்கு உதவுங்கள் என்று ஒரு உருக்கமான  ஜெபத்தை ஏறெடுத்தென்.
 
அதற்குள் மேலே MDயை பார்க்க போனவர்களை அவர் பார்க்க விருப்பம் இல்லாமல் கீழே  CONFERENCE ஹாலுக்கு போங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடடார் 
 
திரும்பி வந்த சேல்ஸ் மேனேஜர்  என்னிடம் நீங்க வரவில்லையா என்று கேடடார். நான் சொன்னேன் நீங்கள் மேலே எம்டி யை பார்க்க போனீர்கள் நான் எல்லோருக்கும் மேலே இருப்பவரிடம என் விண்ணப்பத்தை வைத்துவிடடேன் என்று சொல்லிவிட்டு எங்கள் வங்கி கணக்கில் லாக்இன் செய்து பார்த்தபோது எங்களுக்கு வரவேண்டிய பணம் சுமார் 8 லச்சம் பணம் கிரிடிட் ஆகி இருந்தது. உடனடியாக எல்லோருக்கும் சம்பளம் போடப்பட்ட்து. 
 
அவர்கள் நம்பி சென்ற மு தலாளில் பார்க்க விருப்பம் இல்லாமல் திருப்பி அனுப்பினார் காரணம் அவர் மேலான டென்ஷனில் இருந்தாராம்.
 
ஆனால் நான் தேடிய தேவனோ 10 நிமிடத்துக்குள் கிரியை செய்தார்.  
 
 
நாம் செய்த வேலைக்கு சம்பந்தப்படடவரிடம் சம்பளம் கேட்பதும் INCREMENT கேட்பதும் நம் உரிமையை கேட்டு பெற்று கொள்வதும் உலக பார்வைக்கு தவறில்லை தான். ஆனால் நம்முடையை எஜமானர் இந்த உலகத்து காரன் இல்லை என்பதை நாம் முதலில் திடமாக புரிந்துகொள்ள வேண்டும்.
 
 
உலகத்தில் இருப்பவன் உங்களை பார்க்க விருப்பம் இல்லாமல் விரட்டிவிடலாம் ஆனால் தேவன் எந்நேரத்திலும் நம் விண்ணப்பத்தை கேட்க்க ஆவலுடன் இருக்கிறார்.
 
சங்கீதம் 102:16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்
 
எனவே அன்பானவர்களே ஒரு மனுஷனின் உதவியை நாடி பத்து முறை அலைவதற்கு பதில் தேவனிடம் மனமுடைந்து சொல்லும் ஒரு சில வார்த்தைகள் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
 

இதுபோல் ஓரிரு சம்பவம் இல்லை அநேக சம்பவங்கள் என்னிடம் இருக்கிறது முடிந்தவரை எழுதுகிறேன்.  
 



-- Edited by SUNDAR on Thursday 14th of July 2016 12:44:49 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Glory to Jesus..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
எனக்காக வழக்காடி கிரியை செய்த தேவன்!
Permalink  
 


சமீபத்தில் வேறு கம்பனிக்கு வேலை மாறிய என்னை பழைய கம்பனி ஓனர் அந்த கம்பனியின் TDS/INCOME TAX/ SERVICE TAX போன்ற வரி சம்பந்தப்படட காரியங்களை மட்டும் பார்த்து தாருங்கள் உங்களுக்கு மாதம் ஒரு தொகை தந்துவிடுகிறோம் என்று சொல்லியிருந்தார்.

ஒரு மாதம் முடிந்த நிலையில் அந்த பணத்தை தாருங்கள் என்று கேட்ட்டபோது நாங்கள் அப்படி எதுவும் சொ ல்லவில்லை நீங்கள் முன்பு இங்கு பார்த்த வேலைையில் இருக்கும் பெண்டிங் வேலைகளை முடித்து தர வேண்டியது உங்கள் பொறுப்பு என்று சொல்லிவிடடார்கள்.

அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை செய்த எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. நான் "என்ன மேடம் இப்படி சொல்கிறீர்கள், நான் வேலை பார்த்த நாடகளில் என் கடமையை சரியாக செய்தேன். இப்பொழுது நீங்கள் செய்ய சொல்வது வேறு வேலை அதற்கு ஏதாவது பணம் கொடுப்பது தானே நியாயம்" என்று சொன்னதற்கு எந்த சரியான பதிலும் இல்லை வாக்குவாதம் பண்ண ஆரம்பித்துவிடடார்கள்.

எனக்கு மிகுந்த கோபமாக இருந்தது எனக்கு பழைய பாக்கி வேறு தரவேண்டியது இருந்தது தொழிலாளர் நல வாரியத்தில் புகார் செய்தால் எனக்கு அதிகமாக பணம் வா ங்கி தந்துவிடுவார்கள் என்பதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்பதும், அதை செய்யும் வழி முறைகளும் எனக்கு தெரியும். எனவே அங்கு ஒரு புகார் மனு போட்டுவிடலாமா அவர்களை எங்காவது பிடித்து கொடுக்கவேண்டும் என்று மனம் துடியாய் துடித்தது. காரணம் எனக்கு பணம் மிக அவசர தேவையாக இருந்தது

ஆனால் ஒரு நிமிடம் மனதை அப்படியே அடக்கி "அந்த காரியத்தை அப்படியே கர்த்தரின் கரத்தில் ஒப்புக்கொடுத்தேன். "ஆண்டவரே நான் வேலை செய்தேன் அதற்கு பணத்தை எதிர்பார்க்கிறேன் உமக்கு சித்தமானால் வாங்கி தாரும் விருப்பம் இல்லை என்பீராகில் பரவாயில்லை நான் விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, போனால் போகட்டும் வேண்டவே வேண்டாம் தேவைகளை எப்படியாவது சமாளிக்க ஆண்டவர் உதவி செய்வார் என்று மனதை சாந்தப்படுத்திக்கொண்டேன்."

ஆனால் சிறிது நேரம் கழித்து வேறு காரியத்துக்காக அங்கு போன் செய்த போது உங்கள் பணத்ல்தை (நான் எதிர்பார்த்ததற்கு அதிகமான பணத்தை) வங்கியில் போட்டுவிட்டொம் என்று செய்தி கிடைத்தது.

இந்த வசனம் எனக்கு ஞாபகம் வருகிறது    "உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி" ,(ஏசா 49:25)

நாம் மாம்சபிரகாரமாக கோர்ட் கேஸ் என்றுபோய் அநேக இடர்பாடுகளை சந்தித்து பிறகு ஒருவேளை வெற்றி பெறலாம். ஆனால் அங்கே ஆண்டவரின் செயல்பாடு எதுவும் இருக்காது. மாறாக அலைச்சல் வேதனை லஞ்சம் என்று பல்வேறு பிரச்சனைக்குள் கடந்து வர வேண்டியிருக்கும்.

ஆனால் காரியத்தை கர்த்தரிடம் ஒப்புவித்து அவர்மேல் மாத்திரம் நம்பிக்கையோடு இருந்தால் அவர் நமக்காக 
வழக்காடி நமக்கு கிடைக்கவேண்டியவைகளை எந்த சிரமமும் இல்லாமல் கிடைக்க கிரியை செய்வார்.

சங்கீதம் 37:5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard