இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜலத்தினால் பிறத்தல், ஆவியினால் பிறத்தல் என்பவை என்ன?

இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
ஜலத்தினால் பிறத்தல், ஆவியினால் பிறத்தல் என்பவை என்ன?
Permalink  
 
இயேசுவும் நிக்கோதேமுவும் பேசிக் கொண்டிருக்கும்போது இயேசு கீழ்வரும் வார்த்தையைக் கூறுகின்றார்.

யோவான்-3:5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

  • இவ்வார்த்தையில் ஜலத்தினால் பிறத்தல் என்பது என்ன?
  • ஆவியினால் பிறத்தல் என்பது என்ன?

என்பதை யாராவது விளக்க முடிந்தால் விளக்கம் தாருங்கள்

-- Edited by dinesh on Friday 29th of July 2016 08:27:23 PM

-- Edited by dinesh on Wednesday 3rd of August 2016 02:39:25 AM

__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: ஜலத்தினால் பிறத்தல், ஆவியினால் பிறத்தல் என்பவை என்ன?
Permalink  
 
யோவான்-3:5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
 
அன்பான சகோதரரே இங்கு ஆண்டவர் இந்த இரண்டையும் தனித்தனியே சொல்லி பிறக்காவிடால் என்று சொல்வதால்  இரண்டும் வேறு வேறு சம்பவம் என்பதை நாம் அறிய முடியும் .
 
1. ஜலத்தினால் பிறத்தல் 
 
முழுக்கு ஞானஸ்தானத்தை குறிக்கிறது. நம் உடம்பு முழுமையாக தண்ணீருக்குள் அடக்கம் பண்ணப்பட்டு பின்னர் வெளியில் வரும்போது புது மனிதனாக கிறிஸ்த்துவுக்குள் பிறப்பதை குறிக்கிறது  
 
2. ஆவியில் பிறத்தல் 
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுவதை குறிக்கிறது. இங்கு மனுஷனுக்குள் தேவனின் ஆவி புதிதாக பிறக்கிறது.
 
ஆண்டவராகிய இயேசுவுக்கு இந்த இரண்டு சம்பவமும் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் நடந்தது.
 
மத்தேயு 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
 
ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கவேண்டும் என்று நியதி இல்லை.
 
வேத வசனம்படி சிலர் முதலில் ஆவியில் பிறந்து பின்னர் ஜலத்தில் பிறந்த சம்பவமும் உண்டு.
 
அப்போஸ்தலர் 10:44. இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.47 அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும்தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, 48. கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
ஜலத்தினால் பிறத்தல், ஆவியினால் பிறத்தல் என்பவை என்ன?
Permalink  
 
அண்ணா ஆவியினால் பிறப்பது அபிஷேகம் என்பது ஏற்க கூடியதாக உள்ளது.

ஆனால் ஜலத்தினால் பிறப்பது என்பது ஞானஸ்நானம் எனில் ஞானஸ்னானம் பெறாதவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை காண முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளலாமா?

பரலோகம் போக வேண்டுமெனில் கட்டாயம் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று வேதம் போதிக்கிறதா?

சிலுவையில் மனந்திரும்பிய கள்வன் கூட ஞானஸ்நானம் பெறவில்லையே?

இந்நிலையில் மரண வேளையில் மனந்திரும்பி இரட்சிப்படைகிறவர்களின் நிலை?

-- Edited by dinesh on Wednesday 3rd of August 2016 02:38:52 AM

__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: ஜலத்தினால் பிறத்தல், ஆவியினால் பிறத்தல் என்பவை என்ன?
Permalink  
 
உண்மைதான் சகோதரரே,
 
ஜலத்தினால் பிறத்தல் என்பது குறித்த தங்கள் கருத்து அல்லது வெளிப்பாடு என்ன என்பது குறித்து பதிவிடடால் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
ஜலத்தினால் பிறத்தல், ஆவியினால் பிறத்தல் என்பவை என்ன?
Permalink  
 
அண்ணா நான் ஏற்கனவே தெரிந்து வைத்துக் கொண்டு உங்களை சோதிப்பதற்காக கேட்கவில்லை.
ஜலத்தினால் பிறத்தல் என்பது வார்த்தையினால் பிறப்பதாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

அது சரி போலவே தோன்றுகிறது.
ஏனெனில் வார்த்தையினால் பிறப்பதைக் குறித்து வேதம் கூறுகிறது.

I பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

யாக்கோபு 1:18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

-- Edited by dinesh on Wednesday 3rd of August 2016 02:38:24 AM

__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: ஜலத்தினால் பிறத்தல், ஆவியினால் பிறத்தல் என்பவை என்ன?
Permalink  
 
dinesh wrote:

நல்லது பிரதர். உங்கள் கருத்து என்னவென்பது தெரிந்தால்தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும் எனவேதான் அவ்வாறு கேட்ட்டேன் 

உங்களுக்கு அது சரி என்பது போல் தோன்றினால் எடுத்துகொள்ள தடையில்லை ஆனால் தேவ நீதியாகிய முழுக்கு ஞானஸ்தானத்தை நிராகரிக்க வேண்டாம் 
 
தேவ ஆவி / தேவ வார்த்தை / பரிசுத்த ஆவி எல்லாமே தேவ கிருபையினால் வரும் ஒரே பொருளைதான் குறிக்கிறது எனவே ஆவியில் பிறத்தல் என்பதில் தேவன் சம்பந்தப்படட எல்லாமே அதில் அடங்கிவிடும்.
 
"ஜலம்" என்ற பதத்துக்கு "வார்த்தை" என்ற பொருள் வருமாறு வேதாகமத்தில் எங்காவது இருந்ததால் சொல்லுங்கள்  
 
ஜலத்தில் பிறத்தல் என்றால் என்னவென்பதை நம் ஆண்டவரே செய்து காட்டினார் " இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,"என்று வசனம் சொல்கிறது.
 
ஜலத்தில் பிறத்தல்  - மாம்சத்தில் உலகத்துக்கு தெரியும்படி செய்வது 
 
ஆவியில் பிறத்தல் - உள்ளான மனுஷனுக்கும் தேவனுக்கும் மாத்திரம் தெரியும்படி செய்வது.
 
ரோமர் 10:9 கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
 
இயேசுவை வாயினால்   உலகத்துக்கு தெரியும்படி அறிக்கையிடுதல் 
  
உள்ளான இருதயத்தில் மனதார ஏற்றுக்கொள்ளுதல்  போல இதுவும் இரண்டு நிலை.
 
கள்ளனை பார்த்து இயேசு சொன்னது "இன்றைக்கு என்னோடு பரதீசில் இருப்பாய்" என்பதே. பரதீசு வேறு இடம்.  அவன் பரலோகத்துக்கு போகும் தகுதியை பெற்றானா என்பது குறித்து அங்கு விளக்கம் இல்லை.
 
அதேபோல் சாகும் தருவாயில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களும் பாதாளம் போகாமல் பரதீசு போவார்கள் அவர்களை பரலோகத்தில் ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் "நானே வழி" என்று சொன்ன இயேசுவின் முடிவுக்கு உட்பட்ட்து. நாம சொல்வதற்கு ஒன்றுமில்லை.
 
"ஜலம்" என்ற வார்த்தைக்கு "வசனம்" என்று ஒப்பிட்டு சொல்லாத ஒரு பொருளை நான் எடுக்க விரும்பவில்லை. காரணம் இப்படி நாம் எடுத்துக்கொண்டே போனால் முக்கியமான ஒன்றை வேறு ஒரு பொருள்கொண்டு இடர நேரிடும். வசனம் சொன்னதை சொன்னபடி எடுத்துக்கொள்ளலாம்.     
 
இது எனது கருத்து சகோதரரே.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 
எனது கருத்து எனக்கு உங்கள் கருத்து உங்களுக்கு என்பது சரியானதல்ல அண்ணா. எனக்கு யார் சொன்னாலும் சரியான கருத்தை அறிய விரும்புகிறேன். ஒரு கருத்துக்கு எதிரான கருத்தை அறியாதவரையில் அக்கருத்து சரியானது போல தேன்றும். அதுதான் நான் இன்னும் படிக்க விரும்புகிறேன். மேற்குறிப்பிட்ட விடயத்தை பொறுத்தவரை எனக்கென்று கருத்துகள் எதுவும் கிடையாது. ஏனெனில் எனக்கு இதைக்குறித்த விளக்கம் இல்லை.

ஜலம் என்பது வார்த்தைக்கு ஒப்பிட்டு வேதத்தில் கூறப்பட்டதாக நான் அறியவில்லை. எனவே நீங்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது.

ஆனால் நீங்கள் கூறிய இந்த கருத்துக்கு விளக்கம் தேவை
//////////தேவ ஆவி / தேவ வார்த்தை / பரிசுத்த ஆவி எல்லாமே தேவ கிருபையினால் வரும் ஒரே பொருளைதான் குறிக்கிறது எனவே ஆவியில் பிறத்தல் என்பதில் தேவன் சம்பந்தப்படட எல்லாமே அதில் அடங்கிவிடும்.//////////

__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
dinesh wrote:

ஆனால் நீங்கள் கூறிய இந்த கருத்துக்கு விளக்கம் தேவை
//////////தேவ ஆவி / தேவ வார்த்தை / பரிசுத்த ஆவி எல்லாமே தேவ கிருபையினால் வரும் ஒரே பொருளைதான் குறிக்கிறது எனவே ஆவியில் பிறத்தல் என்பதில் தேவன் சம்பந்தப்படட எல்லாமே அதில் அடங்கிவிடும்.//////////

 யோவான் 6:63 நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
dinesh wrote:

எனது கருத்து எனக்கு உங்கள் கருத்து உங்களுக்கு என்பது சரியானதல்ல அண்ணா. எனக்கு யார் சொன்னாலும் சரியான கருத்தை அறிய விரும்புகிறேன்.  
 
 பிரதர் வசனத்தை எழுதிக்கொடுத்த தேவன் ஒருவர் ம ட்டும்தான் அதற்கான சரியான விளக்கத்தை தரமுடியும். 

அவரிடம் இருந்து விளக்கத்தை பெற்றவர் மட்டுமே அதற்குமேல் அதையும் எதிர்பார்க்காமல் வாயடைத்துப்போக முடியும்.மற்றபடி யார் சொன்னாலும் அது அவரவர் கருத்து மட்டும்தான். அதில் நல்லது எதுவென்று தேட வேண்டுமானால் செய்யலாம். ஆனால் அது தேவனின் கருத்துதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.  
 
நாம் இன்று உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கும் கருத்தின் மொத்த  பொருளையும் தேவன் ஒரே நொடியில் மாற்றி காண்பிக்க வல்லவர். உங்களுக்கு ஒரு கருத்தை சொல்லும் வேத வசனம் எனக்கும் என் பணிக்கும் என்ற வேறுஒரு கருத்தை சொல்லலாம். 
 
எனவே ஒரு வசனத்தின் உண்மையான பொருளை அறியவேண்டும் என்ற உண்மையான வாஞ்சை  இருந்தால் தேவனிடம் இடைவிடாமல் கேட்பதை தவிர வேறு வழி இருப்பதுபோல் தெரியவில்லை. அநேக பதில்களை நான் அவரிடம் இருந்தே பெற்றிருக்கிறேன். பிறகு யார் கருத்தையும் நான் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

மற்ற யார் சொன்னாலும் திருப்தியாகாத நாம், அவர் சொன்னால் மட்டுமே எந்த எதிர்கேள்வியும் இல்லாமல் அடங்கிப்போவோம்.
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard