இங்கே “மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை” என்று இயேசு கூறுகிறார்.
அனால் வேதத்தில் நாம் எலியாவைக் குறித்து வாசிக்கும் போது எலியா பரலோகத்திற்கு ஏறிப் போனார் என்று வாசிக்கிறோமே.
II இராஜாக்கள் 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
அது மட்டுமன்றி எலியா பரலோகத்திலிருக்கிறார். அத்துடன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்துமிருக்கிறார் (இயேசுவின் மறுரூப மலையில்) பரலோகத்துக்கு ஏறியுமிருக்கிறார். இந்நிலையில் இயேசு விஷேடமாக இங்கு கூறவரும் விடயம் என்ன?
தெரிந்தவர்கள் விளக்கவும்.
__________________
.................................................. எப்போதும்நான் ஒரு வேதாகமமாணவனே ...............................................
ஆனால் மனுஷ குமாரனுக்கோ சகல அதிகாரமும் உண்டு. அவருக்கு மாத்திரமே தானாக பரலோகத்திட்கு ஏறி போக கூடிய வல்லமை உண்டு என்பதையும் தான் வல்லமையில் பெரியவர் என்பதை காட்டுவதட்கும் இயேசு அதை குறிப்பிட்டிருக்கலாம்
///////ஆனால் மனுஷ குமாரனுக்கோ சகல அதிகாரமும் உண்டு. அவருக்கு மாத்திரமே தானாக பரலோகத்திட்கு ஏறி போக கூடிய வல்லமை உண்டு என்பதையும் தான் வல்லமையில் பெரியவர் என்பதை காட்டுவதட்கும் இயேசு அதை குறிப்பிட்டிருக்கலாம் ////////
இதைத்தான் நானும் நினைத்திருந்தேன். ஆனால் இயேசு “மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை”. என்று குறிப்பிட்டுள்ளார். “தானாக பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை” என்று கூறவில்லை. அதனால்தான் இந்த கேள்வி வந்தது.
__________________
.................................................. எப்போதும்நான் ஒரு வேதாகமமாணவனே ...............................................
அதாவது இயேசுவை தவிர பரலோகத்திட்கு ஏறினவர் ஒருவருமில்லை மாறாக எடுத்து கொள்ளப்பட்டவரே இருக்கிறார்
இயேசு பரலோகத்திட்கு ஏறினவர் ஆனால் எலியா பரலோகத்திட்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்
//////////ஆனால் இயேசு “மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை”. என்று குறிப்பிட்டுள்ளார். “தானாக பரலோகத்துக்கு /////ஏறினவன்ஒருவனுமில்லை” என்று கூறவில்லை. அதனால்தான் இந்த கேள்வி வந்தது.////////////////
இயேசு மாத்திரமே பரலோகத்திட்கு ஏறினவர் எலியா அல்ல மாறாக அவர் எடுத்து கொள்ளப்பட்டார்
-- Edited by Debora on Saturday 6th of August 2016 12:11:16 PM
மேலும் இவ்வசனத்தில் “ பரலோகத்திலிருக்கிறவருமான ” என்னும் சொல் நிகழ் கால சொல்லாக இருக்கிறது என்றும் கருதலாம் என்று நினைக்கிறேன். அதாவது இயேசு இவ்வார்த்தைகளை சொல்லும் போது மனுஷகுமாரனாக இருந்தார் அதே நேரம் பரலோகத்தில் உள்ள பிதாவிலும் இருந்தார் என்று கூற வருகிறாரோ என்னவோ. இயேசுவின் சர்வ வியாபித்த தன்மையை இது காட்டுவதாக இருக்கலாம்.
__________________
.................................................. எப்போதும்நான் ஒரு வேதாகமமாணவனே ...............................................
தங்கச்சி இந்த தளத்தில் எழுதுவதற்கு நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம் அம்மா. நீங்கள் எழுதி முடிந்து விட்டால், அல்லது எழுத உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றால் பேசாமல் விட்டு விடுங்கள்.
என் ஒருவனுடைய சிற்றறிவால் வேதாகமத்தை முழுதும் விளங்கிக் கொள்ள முடியாது என்பதை நன்கு அறிந்தவன் நான். உங்களுடைய சிற்றறிவாலும் அதை முழுதும் விளக்க முடியாது.
சுந்தர் அண்ணாவைப் போன்ற விஷேட கிருபை பெற்ற நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களால் கூட முழுதும் விளக்க முடியாவிட்டாலும் ஓரளவாவது விளக்கம் தருவார்கள்.
ஒருவருக்கொருவர் விளக்கம் கொடுக்க தேவையில்லை தேவனிடமிருந்தே கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதானால் இந்த தளம் பிரயோஜனமற்றதாகி விடும். 5 வகை ஊழியங்களில் போதக ஊழியம் என்று ஒன்றே தேவைப்பட்டிருக்காது.
நான் இங்கே பதிவிட்ட வசனத்தை நான் ஒரு கோணத்திலிருந்தே பார்க்கிறேன். பலருக்கு தேவன் அவர்களுடைய சூழ்நிலை மற்றும் தன்மைகளுக்கேற்ப பல கோணங்களிலிருந்து விளங்கப்படுத்தியிருப்பார்.
மேலும் அவ்வசனத்தை முதலில் நான் பதிவிட்ட போது அந்த வசனத்திற்கு விளக்கம் ஏதும் இல்லாமலே பதிவிட்டேன். ஆனால் மீண்டும் மீண்டும் அதை வாசிக்கும் போது புதிய எண்ணங்கள் தோன்றியது. அதுதான் மீண்டும் அந்த வசனத்தை பற்றிய இன்னொரு கருத்தாக இருக்கலாம் என்று தோன்றியதை பதிவிட்டேன். யாரையும் மடக்கும் எனக்கில்லை.
நீங்கள் சொல்லியது மட்டுமே முழு விளக்கம் ஆகி விடாது.
பொறுத்திருங்கள் வேறு யாராவது தங்கள் கருத்துகளையும் முன்வைக்கட்டும்.
__________________
.................................................. எப்போதும்நான் ஒரு வேதாகமமாணவனே ...............................................
தாங்கள் கோபப்படுவதட்கான காரணம் என்ன என்று எனக்கு புரியவில்லை.
எப்படியோ நான் ஞானவான் என்று சொல்ல வில்லை மனிதனின் ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாயிருக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். எனவே எனக்கு ஆண்டவர் வெளிப்படுத்தியத்தையே நான் குறிப்பிட்டேன்.
நீங்கள் பேசுவது எனக்கு எவ்வாறு இருக்கிறது என்றால் (புதிதாக தளத்திட்கு வந்த நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது அதில் தவறு இருக்கும் என்பது போல் உள்ளது ) இது என்னை காயப்படுத்துவதாக உள்ளது ஆனால் பரவாயில்லை சகோதரரே
நான் குறிப்பிட்ட ஒவ்வொரு பதிலில் நீங்கள் தவறு கண்டு பிடிக்க முயல்கிறீர்கள் எப்படியோ இனி உங்கள் பதிவுகளுக்கு பதில் அளிக்காமல் இருக்க முயல்கிறேன்.
இல்லை சுந்தர் அண்ணா நான் இது தான் முடிவு என்று சொல்ல வரவில்லை, யார் பதில் சொன்னாலும் அது சரியாயின் ஏற்றுக் கொள்பவள் நான், ஆனால் தினேஷ் அண்ணா என் மேல் கோபமாக பேசுகிறார் ஆனால் பரவாயில்லை அண்ணா என் மேல் தவறு இருக்குமாயின் தயவு செய்து தினேஷ் அண்ணா மற்றும் சுந்தர் அண்ணா மன்னித்துக் கொள்ளுங்கள்.
iam very sorry சகோதரி . நான் உங்கள் மேல் கோபப்படவில்லை.
///////////சரி தற்போது தங்களுடைய குழப்பம் தீர்ந்து விட்டதா சகோதரா? அல்லாவிடின் தற்போது எதையாவது முன் வைக்க விரும்புகிறீர்களா?
ஆம் தங்கள் குறிப்பிட்டது போல அவர் குமாரனாகவும் இருந்தார் தேவனாகவும் இருந்தார்
அவர் நிகழ்காலத்திட்கும் தேவன், இறந்த காலத்திட்கும் தேவன், எதிர்காலத்திற்கும் தேவன் //////////////
தாங்கள் இப்படி எழுதியது என்னை ஏசுவது போல் தோன்றியது. மன்னித்து கொள்ளுங்கள்.
////////நீங்கள் பேசுவது எனக்கு எவ்வாறு இருக்கிறது என்றால் (புதிதாக தளத்திட்கு வந்த நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது அதில் தவறு இருக்கும் என்பது போல் உள்ளது ) இது என்னை காயப்படுத்துவதாக உள்ளது ஆனால் பரவாயில்லை சகோதரரே ///////////
இப்படி நான் மனதிலும் எண்ணவில்லை. என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். sorry sorry