எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு என் மனைவியை பற்றி பலரிடமும் குறை சொல்வதே வழக்கமாக இருக்கிறது. நாங்கள் அதை கண்டுகொள்வது இல்லை ஆகினும் அவர்கள் எங்களை விடுவதில்லை.
அவர்கள் ஒரு இந்து குடும்பம் அவர்களுக்கு ஆண்டவரை பற்றி சொல்லியும் பலமுறை நாங்கள் பலவிதமான உதவிகள் செய்தும் அவர்கள் சுலபமாக மறந்துவிட்டு குறை சொல்லி திரிவதிலேயே குறிக்கோளாக இருந்தார்கள்.
இப்படி நம்மை பற்றி ஒருவர் தவறான எண்ணத்தில் கோபத்தில் / குறை சொல்வதில் இருக்கும்போது அவர்களை நாம் பார்த்தால் நம் மனதும் அதைப்போல கடினமாவதை அறியமுடியும் அவர்கள் மூஞ்சை பார்த்தாலே நமக்கு பிடிக்காமல் இருக்கும் (ஆவியின் அபிஷேகம் பற்ற விசுவாசிகள் நிச்சயம் இதை அறிந்திருப்பார்கள்)
என் மனைவி அவர்களிடம் பேசுவது இல்லை ஏதும் சண்டையும் இல்லை என்றாலும் அவர்களை எப்போதாவது பார்த்தாலே மனதெல்லாம் பயங்கர போராடடமாக அவர்கள்மேல் கடும் கோபமாக இருந்ததாம்
இந்த போராடடத்தை ஆண்டவரிடம் சொல்லி வேதனைபட் டபோது ஆண்டவர் சொன்ன அருமையான ஆலோசனை.
இப்படி யாரை குறித்து உனக்கு போராடடம் வந்தாலும் உடனே அவர்களுக்காகவும் அவர்கள் குடும்பத்துக்காகவும் ஜெபம் பண்ணு. அவர்கள் திருந்தும்படிக்கு அல்ல அவர்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும்படி மனப்பூர்வமாக ஜெபம் பண்ணு என்று சொன்னாராம்.
அவ்வாறு செய்தபோது மன பாரம் எல்லாம் கரைத்து மிகுந்த சமாதானம் கிடைத்ததாம்.
இதை அவள் சொன்னபோது எங்கள் அலுவலகத்தில் எனக்கு சம்பந்தமில்லாத ஒரு டிப்பார்ட்மெண்டில் இருந்துகொண்டு என்மேல் அடிக்கடி டென்ஷன் ஆகும் ஒருவரின் ஞாபகமும், எனக்கு கீழ் வேலை பார்த்து கொண்டு அருமையாக பேசி மேனேஜரான என்னையேவேலை வாங்கி கோபப்படுத்தும் ஒருவரின் ஞாபகம் வந்தது.
அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப ஆசீர்வாதத்துக்காகவும் ஜெபித்தேன். கர்த்தர் சமாதானத்தை தந்தார்.
தேவ பிள்ளைகள் அனைவரும் அப்படியே செய்யலாமே!
மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத்து ன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
இந்த வசனம் வேதத்தில் இருப்பது எனக்கும் தெரியும் எல்லோருக்கும் தெரியும் ஆனால் பிரச்சனைகள் உருவாகும்போது "நான் நீதிமான் இவன் தவறாக என்மீது கோபப்படுகிறான் இவனை எப்படியாது மேற்கொள்ள வேண்டும்" என்று மாசத்தில்தான் சிந்தித்து சம்பந்தப்படடவர்கள் மீது கோபப்படுகிறோமே அன்றி ஆண்டவர் சொன்ன வசனத்தை எடுத்து ஏற்ற வேளையில் பயன்படுத்துவதில்லை.
எனவே அன்பானவர்களே தேவ வசனத்தை ஏற்ற நேரத்தில் பயன்படுத்த, இந்த செய்தி ஒரு நினைப்பூட்டுதலாக இருப்பதாக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)