ஏசாயா 55:8என்நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
நமக்கென்று சில சொந்த விருப்பங்கள் நினைவுகள் இருக்கும் ப ட்ச்சத்தில் அங்கு தேவன் தன விருப்பத்தை முற்றிலும் செயல்படுத்த முடியாது சிஸிடர்.
வெற்று பாத்திரத்தைதான் நிரப்ப முடியும் ஏற்க்கெனவே நிரம்பி இருக்கும் பாத்திரத்தில் எதை ஊற்றினாலும் அது கீழே வழிந்துவிடும்.
நீங்கள் அந்த ஆளை விரும்பாதீர்கள் என்று நான் சொன்னால் உங்களால் உடனே விட்டுவிட முடியாது எனவே இதில் கருத்து கேட்ப்பதைவிட கேட்க்காமல் உங்கள் மன விருப்பம்படி ஜெபிப்பது நல்லது.
எரேமியா 43ல் வார்த்தைகளை கேட்டுவிட்டு பின்னர் அதை நிராகரித்த யூத ஜனங்கள் போல் இருக்க வேண்டாம். அதைவிட கேட்க்காமல் இருந்திருப்பது நல்லது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படி என்றால் நாம் எமக்கு தேவையானதை விருப்பமானதை தேவனிடம் கேட்க கூடாதா அண்ணா?
நான் தேவனிடம் கேட்க்ககூடாது என்று சொல்லவில்லை சிஸ்ட்ர் தேவனிடம் எதையும் சொல்லலாம் எதையும் கேட்க்கலாம் அவர் நமது பரம தகப்பன். என்னிடம் ஆலோசனை கேட்டு பின்னர் அதை நிராகரிப்பதைவிட உங்கள் விருப்பத்தை தேவனிடம் சொல்லி ஜெபிப்பது நலம் என்று சொன்னேன்
தேவ சித்தம் மாறாது ஆனால் நாம் விரும்பி கேட்க்கும் பட்ச்சத்தில் தேவ சித்தத்துக்கு வெளியில் செயல்பட தேவனால் அனுமதிக்க முடியும். உங்களை பயன்படுத்த வேண்டிய இடத்தில் வேறொருவரை பயன்படுத்த முடியும். ஏனெனில் அவர் மனுஷர்களோடு போராடுவது இல்லை.
இவ்வாறு மனதார விட்டுக்கொடுத்து ஜெபித்தால் தேவ சித்தம் நிறைவேறும் ஆனால் சாதகமாகதான் நடக்கும் என்று சொல்ல வாய்ப்பில்லை. விட்டுக்கொடுத்து ஜெபித்தபின்னர் வேறுமாதிரி நடந்தால் முறுமுறுக்க கூடாது. எது நடந்தாலும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.
இயேசுவின் விருப்பத்தையே ஜனங்களின் மீட்ப்புக்காக தேவன் நிராகரித்தார் அல்லவா? அப்படி கூட நடக்க வாய்ப்புண்டு.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)