எனது சகோதரன் ஆண்டவரை அறிந்து இரண்டு மூன்று வருடங்களே ஆகின்றது. ஆனாலும் அவன் ஆண்டவரை அறிந்ததிலிருந்து ஒரு வித பொல்லாத சிந்தை அதாவது கடவுள் இல்லை இவைகள் எல்லாம் பொய் என்று அவனை விசுவாசத்தில் தளும்ப செய்கிறது. இதட்காக அவன் உபவாசித்தும் ஜெபித்தான், அவன் விசுவாசத்தில் ஆண்டவரின் அன்பிலும் நிலைக்கு கொண்டிருந்தாலும் சில நேரங்களில் அவனுக்கு மேட்கூறப்பட்ட சிந்தை வந்து தன் சமாதானத்தை குலைக்கிறதாக கூறுகிறான். இதட்கு என்ன செய்வது ?
தேவனுடன் நேரடி தொடர்பு நிலை இல்லாத விசுவாசம் எல்லாமே ஆடடம் காண வாய்ப்புள்ளது சிச்டர்.
தேவன் இருக்கிறார் என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்து அறிய வேண்டும் பிறகு இந்த சந்தேகமே வர வாய்ப்பில்லை.
நம் கிறிஸ்த்தவம் ஜீவலுள்ள ஒரு மார்க்கம் தேவன் தான் கடடளையிடடவைகளை செய்ய சொல்வதோடு அதை செய்வதற்கு தேவையான பெலத்தை கொடுக்க ஆவியானவரையும் நமக்கு அருளியுள்ளார். எனவே ஆவியானவரை அளவில்லாமல் பெறுவது ஒன்றே இதுபோன்ற காரியங்களுக்கு தீர்வு.
பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ள பல வழிகள் இருக்கிறது. கீழ்கண்ட தொடுப்பை பாருங்கள்.
மேலும் நான் கூட கடவுள் இல்லை என்பதுபோன்ற ஒரு கொள்கையில் இருந்தவன்தான் ஒரு சூழ்நிலையில் தேவனை முகமுகமாக அறிவதுபோல் அறிந்து கொண்டேன். எனது சாட்சி இங்குள்ளது.