II சாமுவேல் 21:1தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்;கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.
இந்த வசனத்தில் மூலம் நாம் அறியவேண்டிய சில ஆவிக்குரிய உண்மைகள்:
1. மூன்று வருஷம் ஓயாத பஞ்சம்
பொதுவாக ஏதாவது ஒரு இயற்க்கை பேரிடர் வரும்போது அது இயற்கையாகவே வருவது என்று பலர் சொல்கிறார்களா. ஆனால் மேலேயுள்ள சம்பவத்தின் மூலம் இயற்க்கை என்று தனியாக ஒன்றும் இல்லை இறைவன்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
இன்றும் மழையில் நனைத்தலை ஜலதோஷம் வரும் ஐஸ் தின்னல் காய்ச்சல் வரும் மாசு காற்றை சுவாசித்தால் கேடு வரும், கலப்பட பொருளை சாப்பிடடாள் கான்சர் வரும் என்றெல்லாம் உலகம் சொல்கிறது. இதெல்லாம் உண்மையாக இருக்கலாம் ஆனால் இவைகள் யாவையும் ஒரு நடைமுறை காரணமேயன்றி உண்மையான காரணம் அல்ல. மழையில் நனைத்தவனுக்கு எல்லாம் காச்சல் வருவதும் இல்லை, கலப்படமான பொருளை தின்னவருக்கு எல்லாம் கான்சர் வருவதும் இல்லை. காரணம் நமக்கு வரும் எந்த துன்பமும் இயற்க்கையானது அல்ல. எந்த ஒரு துன்பத்துக்கு கர்த்தரிடத்தில் நிச்சயமாக நீதியான காரணம் இருக்கும்.
ஏசாயா 28:29 இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்
2. தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்
இன்று அநேகர் சிறு காச்சல் தலைவலி என்றாலும் உடனே டாக்ட்டரை பார்க்க ஓடுகிறார்கள். தங்களுக்கு எதோ பெரிய நோய் வந்துவிட்ட்து என்று எண்ணி கலங்குகிறார்கள் ஆனால் தாவீது செய்வது என்ன?
எந்த துன்பம் வந்தாலும் முதலில் கர்த்தரிடத்தில் அமர்ந்து விசாரிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. என் வாழ்வில் நான் அனுபவித்த ஒரு சிறு தலைவலியில் இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்த்தர் காரணத்தை சொல்லியிருக்கிறார்.
எரேமியா 33:3என்னைநோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
என்று சொல்லியிருக்கும் கர்த்தர், நிச்சயம் உங்களுக்கும் பதில் அளிப்பார். பதில் இல்லை என்றால் நாம் தேவனுடன் இருக்கும் தொடர்பு நிலையை சரி உடனடியாக செய்வது அவசியம்
3. கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று
நாம் செய்த தவறு மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்கள் நம் வீட்டில் இருப்பவர்கள் செய்யும் தவறுகள் கூட நம்மை பாதிக்கும். அவர்கள் நம்முடன் தொடர்பில் இருப்பதால் அவர்களுக்காக நிர்ணயிக்கப்படட துன்பம் நமக்கும் வேதனையை தரும்.
எனவே யாரும் எக்கேடும் கேட்டு போகட்டும் என்று விட்டுவிட முடியாது. மனைவி பிள்ளைகளையும் கர்த்தருடைய வழியில் சரியாக நடத்தவேண்டியது நமது கடமை ஆகிறது.
இஸ்ரவேலர் கானாக்கு போகும் வழியில் அவர்களுக்குள் இருந்த ஆகான் என்ற ஒருவன் செய்த தவறால் இஸ்ரவேலர் ஆயி மனுஷர்களுக்கு முன்னாள் முறியடிக்கப்படட சம்பவம் நமக்கு தெரியும்.
யோசுவா 7:25 அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினது என்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி
இறுதியாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அது இயற்க்கையாயினாலும் சரி செயற்கை ஆனாலும் சரி அதற்க்கு கர்த்தரிடத்தில் மாத்திரமே நிரந்தர தீர்வு உண்டு. மாற்று தீர்வுகள் எல்லாம் நிரந்தரமற்றது என்பதை நாம் அறிந்து விசுவாசித்து அவரிடத்தில் சேரக்கடவோம் அவர் இரக்கத்தில் ஐஸ்வர்யர்.
II சாமுவேல் 24:14. அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சங்கீதம் 34:19நீதிமானுக்குவரும்துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
நீதிமானுக்கும் ஆண்டவரோடு நல்ல ஐக்கியத்தில் இருப்பவர்களுக்கும் தேவ சித்தப்படி நடக்க முயல்பவர்களுக்கும் துன்பங்கள் வரத்தான் செய்யும். காரணம் ஒரு பாவமும் செய்யாத நீதிமான் யாரும் இல்லை. நாம் பரிசுத்தம் அடைத்தல் என்பது நம் வாழ்நாள் முழுவதும் நடக்கும் ஒரு காரியம்.
ஆகினும் நீதிமானுக்கு வரும் துன்பங்களில் இருந்து விடுவிக்க கர்த்தர் ஆதரவாயிருக்கிறார்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்று அநேகர் சிறு காச்சல் தலைவலி என்றாலும் உடனே டாக்ட்டரை பார்க்க ஓடுகிறார்கள். தங்களுக்கு எதோ பெரிய நோய் வந்துவிட்ட்து என்று எண்ணி கலங்குகிறார்கள் ஆனால் தாவீது செய்வது என்ன?
எந்த துன்பம் வந்தாலும் முதலில் கர்த்தரிடத்தில் அமர்ந்து விசாரிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. என் வாழ்வில் நான் அனுபவித்த ஒரு சிறு தலைவலியில் இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்த்தர் காரணத்தை சொல்லியிருக்கிறார்.//
"சிறு சிறு தலைவலிக்கும் கர்த்தர் காரணத்தை சொன்னார்"............. இவ்வுலகம் பாவத்தில் நிறைந்திருப்பதால் என்னதான் தேவனோடு ஐக்கியமாக இருந்தாலும் யாருமே சிறு சிறு தவறுகள் பாவங்கள் செய்யாமல் இருக்க முடிவதில்லை
கர்த்தரை அறியாதவனும் தவறு செய்கிறான் அறிந்தவனும் பல நேரங்களில் தவறு செய்யத்தான் செய்வான்.
அறிந்தவனுக்கோ பாவத்தை கண்டித்து உணர்த்தி மன்னித்து நடத்த ஆவியானவர் உண்டு ஆனால் மற்றவர்களுக்கு இல்லை அவ்வளவுதான். துன்பம் வரும்போது அதற்க்கான காரணத்தை ஆண்டவரிடம் கேட்டு தெரிந்துகொண்டால் அடுத்த நேரம் அந்த தவறை செய்யாமல் இருக்க நமக்கு வாய்ப்புண்டு.
மற்றவர்களுக்கு அது இல்லை.
உங்கள் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை சிஸ்ட்டர் கொஞ்சம் விளக்கமாக கேளுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நமக்கு வரும் சோதனை அதை அடுத்து வரும் பாவம் அடுத்து வரும் துன்பமாகிய மரணம் அனைத்திற்கும் சுய இச்சையே காரணம் என்று.
இது ஏன் நீதிமானுக்கு அநேகமாக வருகிறது என்றால்,
சத்துரு நீதிமானை எப்படியாவது விழுங்கலாமா சுற்ற நோக்கமாக சுற்றி திரிவதால் பல்வேறு விதமான துன்பங்களை கொண்டுவந்து விழ வைக்க முயற்சிக்கிறான்.
என்னுடைய வாழ்வில் நான் யார் கேடடாலும் கையில் பணம் இருந்தால் கொடுத்துவிடுவேன் காரணம் கர்த்தர் "உன்னிடத்தில் கேட்பவனுக்கு கொடு" என்று சொல்லியிருக்கிறார் இப்படி கொடுத்துவிட்டு பின்னர் அதனால் நான் படட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல ஆகினும் நான் அந்த குணத்தை விடாமல் தொடருகிறேன்
ஆனால் இன்று பலர் ஏன் என் மனைவியை எடுத்துகொள்ளுங்கள், சபைக்கு வரும் ஒரு சகோதரி அவசரமாக பணம் தேவை இல்லை என்றால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலைதான் செய்யவேண்டும் அப்படியாவது புரட்டி கொடுங்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்க்க அந்த சகோதரி பேச்சில் இரங்கி சுமார் 18 பணம் கொடுத்துள்ளாள் இன்று அது பணத்தை திருப்பி கேடடால் நான் போலீசில் போய் கம்பளைண்ட் பண்ணுவேன் என்று மிரட்டுகிறது. போன் பண்ணி திட்டுகிறது. இப்படி நடந்தால் பின்னர் யார்தான் அவசரத்துக்கு கடன் கொடுப்பார்கள்?
இப்படி நல்லவர்களுக்கு துன்பத்தை கொண்டு வருவதன்மூலம் மீண்டும் அவர்கள் இரக்கப்படாமல் இருக்கவைப்பதே அதன் நோக்கம்.
இதுபோன்ற துன்பங்கள் அதாவது நீதியினிமித்தம் துன்பங்கள் அநேகம் வரும். பொய் சொல்லாமல் உண்மையை சொல்வதன் மூலம் பல நேரம் துன்பங்கள் வரும் ஆனால் இந்த் துன்பங்கள் எல்லாவற்றிலும் இருந்து கர்த்தர் விடுவிப்பார் என்று வேதம் சொல்கிறது.
அதாவது மனுஷன் தேவ சுபாவத்தை இழந்து மாம்ச சுபாவத்துக்குள் என்று போய்விட்டான். திரும்ப தேவ சுபாவத்துக்குள் வர முயற்சிக்கும்போது சத்துருவால் அநேக துன்பங்கள் வரும் அதுவே நீதியினிமித்தம் வரும் துன்பம்.
இதை பாவத்தால் வரும் துன்பம் என்று சொல்வதைவிட நீதியை நடப்பிக்க முயற்சிப்பதால் வரும் துன்பம் என்று சொல்லலாம். நீதியின்படி நடக்காமல் இருப்பதும் ஒரு தவறுதானே.
எனவே அவனவன் தவறுகளால்தான் இந்த துன்பங்கள் உருவாகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் இந்நாட்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவ சிந்தனையோடு இருக்க வேண்டும் அறிய வேண்டும் என்பதட்காக நீங்கள் எழுதிய பழைய பதிவுகளையும் படித்து வருகிறேன்.. அநேக பிரயோஜனமாக இருக்கிறது.,.