அநேகர் ஒருபக்கம் நடக்கும் நல்லவைகளை மாத்திரம் சாட்சியாக சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் சந்திக்கும் அநேக கஷடங்களை மறைத்து தேவனுக்கு நல்லபெயர் வாங்கிக்கொடுக்க முயற்சிப்பார்கள்.
நான் அப்படி செய்ய விரும்பவில்லை சாட்சி சொன்னதன் எதிரொலியையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
1. நான் வேலை பார்த்த ஒரு கம்பனியில் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட முடிவு செய்து ஒரு மாத நோட்டிஸ் கொடுத்தார்கள். என்ன செய்வதென்று வழி தெரியாமல்தவித்த எனக்கு சரியாக நோட்டிஸ் பீரியட் முடியும் தருவாயில் இன்னொரு கம்பனியில் அதைவிட கூடுதல் சம்பளத்துக்கு வேலை கிடைத்தது.
மிகுந்த சந்தோஷத்தில் அதை சாட்சியாக சபையில் சொன்னேன். ஆனால் நடந்தது என்ன தெரியுமா?
இரண்டே மாதத்தில் புது கம்பனியில் பண பிரச்சனைஆகி கம்பனியை மூடும் நிலையில் இருக்கிறார்கள். நான் வேறு வேலை தேடவேண்டிய கடடாய நிலையில் இருக்கிறேன்.
2. இந்த என்னுடைய தளத்திலலேயே எனக்கு சம்பளம் வாங்கி கொடுத்த கர்த்தர் பற்றி ஒரு சாட்சி பதிவு செய்திருக்கிறேன்.
ஆனால் இப்பொழுது எனக்கு சம்பளம் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. பார்ட் பார்டடாக 15ம் தேதிக்குமேல் சம்பளம் பெற்றும் நிலையில் இருக்கிறேன். ஒவ்வொருவரிடமும் பணம் வாங்க கஸ்டப்படும் நிலைக்கு வந்துவிடடேன்.
3. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஜெபகூடடம் வைப்பார்கள் அந்த சகோதரர் ஒருநாள் சாட்சியாக "நான் இதுவரை ஆஸ்பத்திரிபோய் ஊசி எதுவும் போட்ட்து கிடையாது, என்னை கர்த்தர் அதிசயமாக காக்கிறார்" என்பது போல் ஒரு சாட்சியை சொன்னார்.
ஆனால் அடுத்த வாரம் ஜெபக்கூடடம் வருவதற்கு முன்னமே ஒரு ஆக்சிடன்ட் ஆகி ஒரு கை விரல்கள் மேலுள்ள மொத்த சதையும் போய் பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து பின்னர் வந்தார்.
4. ஒருநாள் என் மனைவி ஜெப கூடடத்தில் சாட்சியாக "என் மகளை நன்றாக படிக்கிறாள் எப்பொழுதும் வகுப்பில் முதல் மாணவி அவள்தான்" என்பதுபோல் ஒரு சாட்சி சொன்னாள்.
அதன்பிறகு என் மகள் ஒருநாளும் முதல் மாணவியாக வந்ததே கிடையாது.
இப்படி இன்னும் பல இருக்கிறது. இதெல்லாம் உண்மையான சம்பவங்கள்.
இதை நான் எதற்கு எழுதுகிறேன் என்றால் தேவனை விசுவாசிக்கும் நமக்கு தீமை நிறைந்த இந்த உலகத்தில் நல்லது மட்டுமே நடக்கும் என்று எதிர்பாக்க கூடாது. சத்துரு பல எதிர்மறையான விளைவுகளையும் கொண்டுவர வாய்ப்பு உண்டு.
பல நேரங்களில் நன்மை செய்த நமக்கு வெகுமணமாக தீமை கிடைக்க வாய்ப்புண்டு. பெரிய காரியங்களை எதிர்பார்க்கும் நமக்கு இருப்பதும் இல்லாமல் போகும் வாய்ப்புண்டு. இவற்றின் மூலம் சோர்ந்து போகக்கூடாது.
போத்திப்பார் மனைவியிடம் பாவம் செய்வதை தவிர்த்து அங்கிருந்து விலகி ஓடிய யோசேப்பு கிடைத்த பரிசு சிறைச்சாலை.
உத்தமமும் சன்மார்க்கனுமாய் வாழ்ந்த யோபுவுக்கு கிடைத்த பரிசு பிள்ளைகளை இழத்தலும் கொடிய நோயுமே!
இதெல்லாம் அவர்கள் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு பிரதிபலன்தான். ஆனால் கர்த்தர் யாரையும் அப்படியே விட்டுவிடவில்லை.
ஒரு நாள் வந்தது. அப்போது அவர்களை யாரும் கீழே தள்ளவே முடியாத உச்சத்துக்கு உயர்த்தப்படடார்கள்.
அதேபோல் தேவபிள்ளைகளுக்கு நிரந்தர இளைப்பாறுதல் இனி வருவதாக இருக்கிறது அதன் பின்னர் நம்மை யாரும் எவ்விதத்திலும் கீழே தள்ளவே முடியாது
எபிரெயர் 4:9தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது.
அதுவரை சாட்சிசொல்வதால் வரும் வீழ்ச்சிகளையும் சகித்துக்கொண்டு தேவ நாமத்தை மகிமைப்படுத்த கடவோம்.
எபிரெயர் 12:3ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)