எங்கள் ஊர் கிராமத்தில் ஏழைமை நிலையில் நாங்கள் வாழ்ந்த போது:
12ம் வகுப்பு படிக்கும்போது: SPIC தொழிற்ச்சாலையில் ஒப்பந்த கூலி வேலை செய்தேன் அப்போது அங்கு PERMANENT வேலை பார்த்த ஒருவர் என்னை அடிக்கடி திட்டுவார். அதனால் மன கஷ்டப்படட நான் எப்படியாவது நன்றாக படித்து இதே இடத்தில் இவருக்கு மேலதிகாரியாக வேலைக்கு வந்து இவரை அழைத்து எச்சரிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
பின்னர் கல்லூரி படிக்கும்போது: எங்கள் தெருவில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்துடன் எங்கள் வீட்டில் தங்கராறு ஏற்படடது அதனிமித்தம் நாங்கள் ஊரையே காலி செய்து வேறு ஊருக்கு போகும் நிலை ஏற்பட்டது. அதனால் மிகவும் மனம் நொந்துபோன நான், எப்படியாவது நிறைய பணம் சம்பாதித்து பெரிய காரில் வந்து இந்த தெரு முன்னால் இறங்கி இவர்கள் எல்லோரையும் வியக்க வைக்க வேண்டும் என்று எண்ணினேன்.
படித்து முடித்து வேலைக்குபோய் ஆண்டவரை அறிந்த பின்பு: என் இளமைக்கால நண்பன் ஒருவன் BE படித்து அமெரிக்காவில் மிகப்பெரிய வேலையில் இருக்கிறான் அவனிடம் ஆண்டவரை பற்றி பலமுறை சொல்லியும் எனக்கு செவிகொடுக்கவில்லை.
அதனால் வியாகுலபடட நான் எப்படியாவது பெரிய ஊழியக்காரனாக ஆகி அமெரிக்கா போய் "நீ பெரிய படிப்பு படித்து அமெரிக்கா வந்தாய். ஆனால் வெறும் பிகாம் மாத்திரம் படித்த என்னையம் தேவன் உனக்கு சமமாக இங்கு கொண்டு வந்திருக்கிறார் பார்த்தாயா. தேவன் மிகப்பெரியவர் இயேசுவை ஏற்றுக்கொள். என்று சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால்,
"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று" என்று சொன்ன கர்த்தரோ எதையும் எனக்கு தரவுமில்லை. இப்படி நான் நினைத்த அநேக காரியங்களில் எதுவுமே என் வாழ்வில் நடக்கவுமில்லை.
ஆனால் இவற்றுக்கு எல்லாம் மேலாக தேவனையும் அவர் இருதய எண்ணங்களையும் அறியும் உயர்ந்த சிலாக்கியத்தை தேவன் எனக்கு தந்தார்.
இப்பொழுதோ! நான் எவர்கள் முன்னால் என்னை பெரியவனாக காடடவேண்டும் என்று எண்ணினேனோ அவர்கள் வாழ்க்கை நிலை தேவனை அறியும் அறிவுக்கு முன்னால் மிகவும் அற்பமானது என்று அறிகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிதபிக்கிறேன். ஐயோ! அவர்களும் என்னைப்போல தேவனை அறியமாடடார்களா என்று ஏங்குகிறேன். உலக மேன்மைக்கும்/மகிமைக்கு தேவனின் நடப்படிகளுக்கும் இடையில் நேர்மாறான வேறுபாடு இருப்பதை அறிகிறேன்.
ஆம்! தேவனை அறியும் அறிவைவிட மேலானது இப்பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லவே இல்லை. அவரையம் அவர் மூலம் ஜீவ பாதையையும் அறிந்துகொண்ட நாம் மிகப்பெரிய பாக்கியவான்கள் அன்றோ!