இந்த வார்த்தையை படிக்கும்போது என் இருதயம் ஆனந்தத்தால் பொங்குகிறது.
ஆம்! தாவீது எத்தனையோ யுத்தங்களுக்கு போனான் சவுல் அவனை ஒரு தெள்ளு பூச்சியை போல வேடடையாடினான், தன சொந்த மகனுக்கு பயந்து நாடடைவிட்டு ஓடினான் ஆனால் எல்லா இடங்களிலும் கர்த்தர் அவனை காப்பாற்றினார்.
அதேபோல் நாம் போகும் இடத்தில் எல்லாம் கர்த்தர் நம்மை காப்பாற்றியதால்தான் இன்று நாம் உயிரோடு இருந்து அவரின் மகத்தான செய்கைகளை எழுதிக்கொண்டு இருக்கிறோம். எனவே நாமும் கூட "நான் போகும் இடத்தில் எல்லாம் கர்த்தர் என்னை காப்பாற்றினார் என்று நன்றியோடு சொல்லலாமே"
நம் வாழ்நாளில் நாம் எங்கெல்லாமோ போகிறோம் பகல் இரவு மழை வெயில் என்று பாராமல் பல இடங்களில் அலைகிறோம் கார் / பஸ் /ரயில் / பைக் என்று இதில் எல்லாமோ பயணம் செயகிறோம் உள்ளூர் வெளியூர் வெளிநாடு என்று அலைகிறோம். இப்படி நாம் போகும் இடங்களில் எல்லாம் கர்த்தர் நம்மை காத்திருக்கிறாரே!
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் நான் மும்பை படடனத்தில் இருந்தபோது ஒருநாள் கர்த்தர் என்னிடம் நீ உடனே புறப்பட்டு கிளம்பு என்று சொன்னார். அவர் சொன்னது சாதாரண நேரம் அல்ல பாபர் மசூதி இடிக்கப்பட்டு மும்பை படடணமே கலவர பூமியாகி ஊரெங்கும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம். எனக்கு சற்று பயமாக இருந்தாலும் கர்த்தரின் வார்த்தைக்கு உடன்பட்டு எழுந்து நடந்தேன். இரவு பகல் என்று மூன்று நாடகள் மும்பை முழுவதும் சுற்றி கர்த்தர் சொன்ன பல காரியங்களை செய்து முடித்தேன். அந்த பயங்கரமான நேரத்தில் ஒருமுறை போலீஸ் கூடடம் என்னை பிடித்து விசாரித்தது ஆகினும் எந்த சேதமும் இல்லாமல் நான் போன இடங்களில் எல்லாம் கர்த்தர் என்னை காப்பாற்றி மூன்றாவது நாள் பத்திரமாக திரும்ப வீட்டில் கொண்டுவந்து சேர்ந்தார்.
இன்றும் வீட்டில் இருந்து கிளம்பும் நம்மை நாம் போகும் இடங்களில் எல்லாம் பத்திரமாக காப்பாற்றி வழி நடத்தும் தேவனுக்கு எக்காலத்திலும் மகிமை உண்டாவதாக.
சகரியா 2:8உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்