இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?
Permalink  
 


SABBATH%2BDAY%2B%25E0%25AE%2592%25E0%25A

இக்கட்டுரையில் ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கால கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதற்கான ஐந்து அடிப்படைக் காரணங்களை முதலில் தருகிறேன் அதன் பின்னர் ஓய்வுநாள் கட்டளை குறித்து கேட்கப்படும் நான்கு முக்கியமான கேள்விகளுக்கு வேதம் கூறும் பதிலையும் தருகிறேன் வாசித்து பயனடையுங்கள்.


காரணம் 01-

ஓய்வுநாள் கட்டளையானது நியாயப்பிரமாணமாகும்.

நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டது. புறஜாதியாரான நமக்கு அது கொடுக்கப்படவில்லை. ரோமர்-2:14 இன்படி நியாயப்பிரமாணம் புறமக்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அப்படியிருந்தும் அவர்கள் நியாயப்பிரமாணத்தை பெறாமலே நியாயப்பிரமாணப்படி செய்து வந்தார்கள் என்றும் அவ்வசனம் கூறுகிறது. ஆயினும் நியாயப்பிரமாணத்திலுள்ள பலியிடுதல், ஓய்வுநாளை அனுசரித்தல், மாதப்பிறப்புகள் பண்டிகைகளை கொண்டாடுதல், பாஸ்காவை புசித்தல் போன்றவற்றை புறஜாதிமக்கள் கடைப்பிடிக்கவில்லை. நியாயப்பிரமாணத்திலுள்ள ஒழுக்கக் கட்டளைகளை மட்டுமே புறஜாதிமக்கள் கடைப்பிடித்தனர்.

நியாயப்பிரமாணத்தில் 3 உட்பிரிவுகள் உண்டு

1 சமூகக் கட்டளைகள்

2 சடங்காச்சாரக் கட்டளைகள்


3 ஒழுக்க கட்டளைகள்


இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்



01. சமூகக் கட்டளைகள்

சமூகக் கட்டளைகளுக்குள் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் போன்ற சட்டங்கள், மற்றும் அரசியலோடு சம்பந்தப்பட்ட கட்டளைகள் என்பன அடங்கும். இப்படிப்பட்ட சட்டங்கள் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவ மக்களுக்கு இல்லை. மாறாக அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்களோ அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து வாழும்படி அழைக்கப்படுகிறார்கள்.


(ரோம 13:1-7) எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்துநிற்கிறான்; அப்படி எதிர்த்துநிற்கிறவர்கள் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவ ஊழியக்காரனாயிருக்கிறானே. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவ ஊழியக்காரராயிருக்கிறார்களே. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.

(1பேது 2:13-14) நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.

(1தீமோ-2:2) நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.


02. சடங்காச்சாரக் கட்டளைகள்

சடங்காச்சாரக் கட்டளைகளுக்குள் வழிபாட்டு முறைகள், பலியிடுதல், ஓய்வுநாள் ஆசரிப்பு போன்ற விடயங்கள் அடங்கும். இப்படிப்பட்ட சடங்காச்சார கட்டளைகளுக்கு பதிலாக 'தேவனை எங்கும் தொழுது கொள்ளலாம்" “ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்" “நாட்களை தேவனுக்கென்று நியமித்துக் கொள்ளுதல்" போன்ற ஆலோசனைகளை பின்பற்றும் படி புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.


(யோவா-4:21) நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.

(யோவா-4:23-24) தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

(ரோம-14:5-6) அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.


03. ஒழுக்கக் கட்டளைகள்

ஒழுக்கக் கட்டளைகளுக்குள் தனிமனிதனுக்கான ஒழுக்கம், நீதி நியாயம் செய்தல், பரிசுத்த வாழ்வு முறைகள் என்பன அடங்கும். ஒழுக்கக் கட்டளைகள் புதிய ஏற்பாட்டு காலத்தில் புதுப்பிக்கப்பட்டு புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. எப்படியெனில் “கொலை செய்யக் கூடாது” என்று இருந்த கட்டளை மாற்றப்பட்டு “சகோதரனை பகைத்தாலே கொலை செய்ததற்கு சமம்” என்று கூறப்பட்டுள்ளது. “விபச்சாரம் செய்யக் கூடாது” என்பது மாற்றப்பட்டு “பெண்ணை இச்சையோடு பார்த்தாலே விபச்சாரம் செய்ததற்கு சமம்” என்று கூறப்பட்டுள்ளது. விவாகரத்து சட்டம் மாற்றப்பட்டு “அது விபச்சார முகாந்திரத்தினாலொழிய செய்யப்படக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.


(மத்-5:21-22) கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.

(மத்-5:27-28) விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

(மத்-5:31-32) தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.


இந்த மூன்று உட்பிரிவுகளில் சடங்காச்சாரக் கட்டளைகளும், சமூகக் கட்டளைகளும் இஸ்ரவேலருக்கு மட்டுமானவை. ஒழுக்க கட்டளைகள் யாவருக்கும் பொதுவானவை. ஆகவேதான் அவை புறஜாதியினருடைய இருதயங்களிலும் எழுதப்பட்டிருந்தது. ஒழுக்கக் கட்டளைகள் யாவும் மனிதர்கள் தங்கள் வாழ்வில் தாங்களாகவே அறிந்திருக்கிறார்கள். அவற்றை கட்டாயம் யாவரும் கடைப்பிடிக்க வேண்டும். நியாயப்பிரமாணம் புறஜாதி மக்களுக்கு வழங்கப்படா விட்டாலும் அவர்கள் சுபாவப்படியே ஒழுக்கக் கட்டளைகளை கடைப்பிடித்து வந்தனர். இதையே மேலே நாம் குறிப்பிட்ட ரோமர்-2:14 வசனம் குறிப்பிடுகிறது.
(ரோம-2:14) அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

எனவே இந்த சத்தியங்கள் நமக்கு எதை தெளிவுபடுத்துகிறதென்றால் நியாயப்பிரமான கட்டளை சட்டங்கள் எதுவும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. நீக்க வேண்டியவைகள் நீக்கப்பட்டு சேர்க்கப்பட வேண்டியவைகள் சேர்க்கப்பட்டு மாற்றப்பட வேண்டியவைகள் மாற்றப்பட்டு போதுமானளவு ஆலோசனைகளும் சட்டங்களும் புதிய ஏற்பாட்டில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளையே நாம் பின்பற்ற வேண்டும். ஓய்வுநாள் கட்டளையானது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட சடங்காச்சார கட்டளையாகும் அது புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படவுமில்லை. புதிய ஏற்பாட்டில் முன்மொழியப்படவுமில்லை.

தொடரும்....

 

.

 


__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
RE: ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?
Permalink  
 


 

காரணம் 02 

அது பாரமான சுமையாகும்

நியாயப்பிரமாணத்தின்படி செய்ய விரும்புபவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நீதிமான்களாக முயற்சி செய்து கிருபையை இழந்து விடுகிறார்கள் என்று வேதம் கூறுகின்றது. (கலா-5:4) நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.

நியாயப்பிரமாணம் அதை பெற்றுக் கொண்ட யூதர்களால் கூட சுமக்க முடியாதளவு பாரமான சுமையாக காணப்பட்டது. பரிசுத்தாவியானவர் சீஷர்களைப் பயன்படுத்தி புறமக்கள் இதை கடைப்பிடிக்க தேவையில்லை என்று நீக்கி விட்ட வரலாறு அப்போஸ்தலர் 15ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. அதில் அவர்கள் எடுத்த தீர்மானம்  என்னவென்றால் புறமக்கள் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக (அப்-15:20)விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்க வேண்டும் என்பதே. இவைகளுடன் புதிய ஏற்பாட்டின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால் போதுமானது.

இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்து அதை நிறைவேற்றி விட்டார் என்று வேதம் கூறுகின்றது. அத்துடன் இயேசுவே ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார் என்றும் வேதம் கூறுகின்றது. இந்த இயேசு நமக்கு கட்டளையிடாத ஓய்வுநாள் கட்டளை நமக்கெதற்கு?

தொடரும்...



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

காரணம் 03 

அது சாத்தியமானதல்ல

நியாயப்பிரமாணத்தின்படி செய்ய விரும்புபவர்கள் அதின் எல்லாக் கட்டளைகளையும் கைக் கொள்ள வேண்டும். வேதம் இவ்வாறு கூறுகிறது. (யாக்-2:10) எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். ஒன்றிலே தவறியது எல்லாம் தவறியதற்கு சமம் என்றால் ஒன்றை கடைப்பிடித்து நீதிமானாக விரும்புபவன் எல்லாவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் நியாயம்.

ஓய்வுநாள் கட்டளை கொடுக்கப்பட்ட வேதபகுதியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
யாத்-31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

ஓய்வுநாள் கட்டளையை கடைப்பிடிக்க வேண்டும் என்று யாராவது விரும்பினால் ஓய்வுநாளை கடைப்பிடிக்காதவர்களை கொலை செய்ய வேண்டும் என்னும் கட்டளையையும் பின்பற்ற வேண்டும். ஓய்வுநாளை கடைப்பிடிக்க வேண்டும் என்று போதிக்கப்படும் சபைகளின் விசுவாசியொருவர் ஓய்வுநாளில் ஏதாவது வேலை செய்து விட்டால் அவரை கொல்ல முடியுமா? முடியாது. ஏனெனில் நம் நாட்டு சட்டங்கள் நியாயப்பிரமாணத்தை வைத்து இயற்றப்படவில்லை.

நியாயப்பிரமாணத்தில் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட கட்டளைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றாகிய ஓய்வுநாளை கடைப்பிடிக்க விரும்பினால் மற்ற கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா? அவற்றில் விருத்தசேதனம் செய்தலும் ஒன்று. அதை செய்ய முன்வர முடியுமா? அதுமட்டுமன்றி மிருகபலி செலுத்துதல், கல்லெறி தண்டணை கொடுத்தல் என்பவற்றை நம்முடைய நாடுகளில் கடைப்பிடிப்பது சாத்தியமாகுமா? இவை நியாயப்பிரமாணத்தை வைத்து சட்டம் இயற்றப்பட்ட இஸ்ரவேல் நாட்டில் ஒரு வேளை சாத்தியமாகலாம் ஆனால் நம்முடைய நாடுகளுக்கு சாத்தியமாகாது.

காரணம் 04 

ஆதி சபை கடைப்பிடிக்கவில்லை.

ஆதி சபையினர் வாரத்தின் முதல் நாளிலேயே சபை கூடினர் என்று வேதத்தில் காணலாம். ஆதி சபையினர் அப்பம் பிட்கும்படி வாரத்தின் முதல்நாளில் கூடி வந்தனர் என்று வேதம் கூறுகின்றது. இதுவே அவர்களின் ஆராதனைக் கூடுதலாக இருக்கலாம். அந்த கூடுகையில் பரிசுத்தவான்களுக்காக தர்மப்பணம் சேர்க்கும் நடவடிக்கையும் இடம்பெற்றது.

(அப்-20:7 ) வாரத்தின் முதல்நாளிலே, அப்பம்பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்,
(1கொரி-16:2) நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.

ஏன் வாரத்தின் முதல்நாளில் கூடினார்கள் என்றால் இயேசுக்கிறிஸ்து உயிர்த்தெழுந்தது வாரத்தின் முதல்நாளிலாகும். இயேசு வாரத்தின் முதல்நாளில் உயிர்த்தெழுந்து  உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கினார். அத்துடன் பரிசுத்தாவியானவர் கிறிஸ்தவர்கள் மேல் பொழிந்தருளப்பட்டதும் வாரத்தின் முதல்நாளிலாகும். எனவே சீடர்கள் வாரத்தின் முதல்நாளை தங்கள் கூடுகைக்காக தெரிந்து கொண்டனர். அதைத்தான் இன்றைய கிறிஸ்தவ சபை செய்கிறது.

மேலும் சீஷர்கள் ஓய்வுநாளை சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தினார்கள். யூதர்கள் ஓய்வுநள் தோறும் கூடுவது வழக்கமாக இருந்தபடியால் அதை பயன்படுத்தி அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தனர்.
(அப்-13:44) அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.
(அப்-17:2) பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களிள் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,

எனவே இவ்வசனளங்களின்படி சீடர்களும் ஆதி சபையும் ஓய்வுநாளில் சபை கூடவில்லை என்து தெளிவாகிறது.

காரணம் 05 

இயேசு மீறினார்

இயேசுவின் மீது யூதர்கள் சாட்டிய ஒரு பெரிய குற்றச்சாட்டு அவர் ஓய்வு நாள் கட்டளையை மீறினார் என்பதாகும்.
யோவா-5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

ஓய்வுநாளில் நன்மையும் செய்யக்கூடாது என்று எண்ணிய யூதர்களுக்கு மத்தியில் அவர் ஓய்வுநாளை மீறி பல அற்புதங்களை செய்தார். அது மட்டுமல்ல அவர் ஓய்வுநாளை கடைப்பிடிப்பது கட்டாயமானது என்று பொருள்படக் கூடிய விதத்திலேனும் ஒரு தடவை கூட கூறவில்லை. ஓய்வு நாளில் பயிர்களைக் கொய்து தின்ற தம்முடைய சீடர்களின் செயலை அவர் நியாயப்படுத்தி பேசினார். ஓய்வு நாளில் உணவு சேர்க்க கூடாது என்ற கட்டளையை அவர் மீறினார். இன்று ஓய்வு நாளில் நாம் அடுப்பும் மூட்ட கூடாது என்று போதிப்பது சரியாகுமா?

தொடரும்...



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?
Permalink  
 


மிகவும் ஆழமான விளக்கங்கள். ஆகினும்  இவ்விளக்கங்களில் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை பிரதர். 
 
தேவனின் வார்த்தைகளை "இது யூதருக்கு கொடுத்தது இது மற்றவர்களுக்கு கொடுத்தது" என்று பிரித்தால் இயேசுவும் சரி பவுலும் சரி குறிப்பிடட ஜாதிக்கும் குறிப்பிடட சபைக்கும்தான் போதித்தார்கள் அதையும் நாம் நிராகரிக்க வேண்டிவரும்.
 
கர்த்தரின் வார்த்தைகள்  ஏன்றென்றைக்கும் வானங்களில் நிலைநிற்கிறது. 
 
சங்கீதம் 119:89 கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. 
 
அந்த நியமனங்கள்தான் பூமியை ஆள்கிறது என்று வேதம் சொல்கிறது 
 
இங்கு இஸ்ரவேலுக்கு ஒரு வானம் புறஜாதிக்கு ஒரு வானம் என்று எதுவும் இல்லை.  
 
என்னுடைய கருத்துப்படி ஒரு மனுஷன் இந்த உலகத்தில் மாம்சமாக பிறந்துவிடடாலே அவன் மீது தேவனின் வசனங்கள் கடடளை கற்பனைகள் தானாக செயல்பட ஆரம்பித்துவிடும்.
 
பழைய ஏற்பாடு காலத்தில் கற்பனையை மீறுபவர்கள் பலி செலுத்த வேண்டும் அல்லது அவர்களே சாக வேண்டும் 
 
ஆனால் இயேசுவின் பலிக்கு பிறகு 
 
கற்பனையை மீறுவதால் யாரும் சாகவோ பலி செலுத்தவோ தேவையில்லை. ஆனால் தேவனின் எந்த கற்பனையும் எந்த நாளும் ஒழிந்து போகாது.
 
மத்தேயு 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
  
நியாய பிரமானத்தில் உள்ளவர்கள்தான் இந்த பூமியில் ஒவ்வொன்றாக நிறைவேறுகிறதேயன்றி அதில் உள்ள  எதுவும் தேவையா தேவையில்லையா என்ற கேள்விக்கே இடமில்லை.
 


 



-- Edited by SUNDAR on Tuesday 27th of September 2016 04:19:15 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?
Permalink  
 


wrote..

///ஓய்வு நாட்களை கடைப்பிக்க வேண்டும் என்று யாராவது விரும்பினால் அவர்கள் அதை கடைப்பிடிக்கலாம். தவறில்லை. ஆனால் மற்றவர்களை கடைப்பிடிக்கும்படி கட்டாயப் படுத்தவோ குற்றப்படுத்தவோ கூடாது.///
 
 
இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
 
கடைபிடித்தல் நிச்சயம் மேலானது  நன்மை உண்டு. 
 
கடை பிடிக்கவிடடாள்  நித்திய வாழ்வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே கருதுகிறேன்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

 

////பத்து கற்பனைகளில் நான்கு கட்டளைகள் சடங்காச்சாரக் கட்டளைகளாகும். இதில் ஓய்வுநாள் கட்டளையும் அடங்கும். சடங்காச்சாரக் கட்டளைகள் இஸ்ரவேலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டவை. ஆயினும் ஓய்வுநாள் கட்டளை தவிர்ந்த ஏனைய மூன்று சடங்காச்சார கட்டளைகளும் புதிய ஏற்பாட்டு மக்களுக்கும் தேவனால் ஏற்புடையதாக்கப்பட்டுள்ளது.///
 
 
எந்த ஒரு தேவ கடடளையை நாம் நிராகரித்தாலும் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மையை இழக்கிறோம் மற்றபடி இயேசுவின் மரணத்திற்கு பிறகு அது கடடாயமில்லை.
 
 
ஏசாயா 13:3 நான் பரிசுத்தமாக்கினவர்களுக்கு கட்டளை கொடுத்தேன்;
 
 
 ஏசாயா 58:13 என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்தநாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
 
14. அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard