எங்கள் வீட்டில் ஒரு நாய் உண்டு. அந்த நாயால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது.
எந்த மனுஷனை பார்த்தாலும் குறைக்காது யாரையும் கடிக்காது யாருக்கும் தொந்தரவு செய்யாது. கிடைப்பதை தின்று ஊர் சுற்றிவிட்டு படுத்து படுத்து தூங்குவதுதான் அதன் வேலை. வீட்டு கார் பார்க்கிங்ல் படுத்து கிடைக்கும் அது, யாரும் கதவை திறக்கும் சத்தம் கேடடால்கூட திரும்பி பார்க்காது. பகலில் வெயில் நேரத்தில் உள்ளே வந்து கிடைக்கும் அது மாலை நேரத்தில் வெளியில் போய்விடும். முக்கியமான காவல் நேரமாகிய இரவெல்லாம் எங்காவது வெளியில் படுத்து விட்டு சரியாக காலையில் உள்ளேவந்து படுத்துவிடும். அத்தோடு வீட்டு காவலுக்கு வேறு ஏதாவது குட்டி நாயை எடுத்து வளர்க்க நினைத்தாலும் அதை கடித்து விரட்டிவிடும்
சில மாதங்களுக்கு முன் பனி மழை வெயில் என்று போராடிக்கொண்டு ரோட்டில் கிடந்த அந்த நாய்க்கு சிலநாடகள் சோறு போட்ட்தால் அது எங்களோடு ஒட்டிக்கொண்டது.
எந்த பயனும் இல்லாமல் தெண்டமாக இருக்கும் அந்த நாயை எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்றாலும் எங்கள் வீடடை தஞ்சம் என்று வந்த அதை அடித்து விரடடவும் மனமில்லை. வீட்டில் பலர் எதிர்ப்புக்கு மத்தியில் அதற்கு முடிந்தவரை சாப்பாடு போட்டு சொறி வந்தால் டெட்டால் போட்டு புண் வந்தால் மருத்துப்போட்டு பார்த்து வருகிறேன்.
என் இரக்கத்தினிமித்தம் இப்படி காப்பாற்றி வந்தாலும் அது எத்தனை நாள் நீடிக்கும் என்று சொல்ல முடியாது.
இந்த நாயைபோலவே இன்று அநேக கிறிஸ்த்தவர்கள் தன்னை அழைத்து பாதுகாக்கும் தன எஜமானாகிய தேவனுக்கு எந்த பயனும் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அத்தோடு புதிதாக ஆண்டவரை ஏற்றுக்கொண்டு உள்ளேவரும் விசுவாசிகளுக்கு அவர்கள் பெரிய இடறலாகவும் இருக்கிறார்கள்.
ஆகினும் ஆண்டவர் அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் கைவிட முடியாமல் அங்கீகரிக்கவும் முடியாமல் தன மிகுந்த இரக்கங்களிநிமித்தம் வேலியடைத்து உணவு கொடுத்து வேலை கொடுத்து நோய் வந்தால் மருந்து கொடுத்து பாதுகாத்து வருகிறார்.
தனக்கு ஏதாவது தேவை என்றால் மட்டும் ஆண்டவரிடம் வரும் அவர்கள், தேவைகள் பூர்த்தியானபின்னர் அவரை கண்டு கொள்வதே இல்லை. தேவை உள்ளவனுக்கு சல்லி காசு உதவி செய்யாத இவர்கள் தங்கள் வீட்டு விஷேஷங்களுக்கோ பணத்தை அள்ளி வீசி செலவு செய்கிறார்கள். கைகளில் தேவனின் வார்த்தையை ஏந்திக்கொண்டு சபைக்கு போகும் இவர்கள் அதிலுள்ள வார்த்தைகள்படி நடக்க கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. ஆண்டவரை அறிந்துள்ளோம் என்று சொல்லும் இவர்கள் யாருக்கும் அவரின் அன்பையம் அவர் வழிகளையும் எடுத்துசொல்வதில்லை .
தேவனோ தன்னை விசுவாசித்து வந்த அவர்களை தள்ளவும் முடியாமல் தன பிள்ளைதான் என்று சாத்தான் முன் சொல்லவும் முடியாமல் தவிக்கிறார்.
இவர்கள் போன்றவர்களை பார்த்துதான் ஆண்டவர்
வெளி 3:15உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்." என்று சொல்கிறார்.
தான் உண்டு தன வேலை உண்டு தன குடும்பம் உண்டு தன சம்பாத்தியம் உண்டு நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை சம்பாதிக்கிறேன் திருப்தியாக சாப்பிட்டு சம்பிரதாயமாக வாழ்கிறேன் என்று சொல்லி தேவனுக்கும்மற்ற சக மனுஷனுக்கும் பயனில்லாத ஒரு வாழ்க்கை வாழும் அருமையான கிறிஸ்தவர்களே கேளுங்கள்.
இந்த உலகில் உனக்கு கிடைக்கும் ஒவ்வொரு நன்மையையும் தேவனின் கையில் இருந்து அவர் இரக்கங் களினிமித்தம் கிடைக்கிறது என்பதை மறக்க வேண்டாம் அவர் தன கையை மூடிக்கொண்டால் உன் சம்பிரதாய வாழ்க்கை எல்லாம் சவ கிடங்குக்குதான் போகவேண்டும்.
எனவே எந்த பயனும் இல்லாத அந்த நாயை அடித்து காலை ஒடித்து வெளியே துரத்துவதுபோல தேவன் உங்களை துரத்திவிடும் முன் இன்றே விழித்து தேவனுக்கு ஏற்ற பயனுள்ள கிரியைகளை செய்து தப்பித்துக்கொள்ளுங்கள்.
தேவ எச்சரிப்பு: வெளி 3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
1 சாமு 2:32. இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் சகல நன்மைகளுக்கும் மாறாக என் வாசஸ்தலத்திலே உபத்திரவத்தைக் காண்பாய்;
-- Edited by SUNDAR on Thursday 29th of September 2016 01:21:07 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)