சாத்தானுக்கு எதிகாலம் மட்டுமல்ல தேவனின் எந்த திடடமும் தெரியாது அவர் செய்லபாடும் தெரியாது.
அப்படி தெரிந்திருந்தால் யோபுவின் முன்னிலைமையை விட அவன் பின்னிலைமை அதிகமாக ஆசீர்வதிக்கப்படும்படி சாத்தான் அவனை பற்றி தேவனிடம் பிராது பண்ணியிருக்கவே மாடடான்.
யோபு தோற்றுவிடுவான் என்றே அவன் எதிர்பார்த்தான் என்பதை அவன் வார்த்தையில் இருந்து அறிய முடியும்.
யோபு 2:4 சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.
5. ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
"தூஷிக்கனோ பாரும்" என்று சொல்லி அவன் தூஷிப்பான் என்றே சாத்தான் எதிர்பார்த்தான் அவன் அனுமானம் தப்பாகிப்போனது.
எனவே யோபு எதிர்காலத்தில் என்ன செய்வான் என்பதை சாத்தானால் அறிய முடியவில்லை.
-- Edited by SUNDAR on Thursday 6th of October 2016 03:13:35 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சிஸ்ட்டர் சத்துரு தொடக்கத்தில் இருந்தே யாரையாவது வீழ்த்தி தேவ திட்ட்ங்களை தகர்த்து தானே உலகத்தில் அதிபதியாக இருக்க முயற்சித்து கொண்டே இருக்கிறான்.ஆனால் எதுவுமே நிறைவேறவில்லை பிறகு அவனுக்கு எதிர்காலம் தெரியுமா என்ற கேள்வி என் எழுகிறது என்று புரியவில்லை.
காயீனை வைத்து ஆபேலை கொலை செய்தேன் ஆனால் தேவனோ சேத்தின் மூலம் மீண்டும் தன திடடத்தை தொடர்ந்தார்.
தாவீதை பத்சேபாள் வைத்து கெடுத்தால் அவனை வீழ்த்தி விடலாம் என்று சத்துரு நினைத்தான் ஆனால் அவள் சந்ததியிலேயே சாலமோனை பிறக்க செய்து சந்துருவின் திடடத்தை தேவன் சிதறிடித்தார்.
இயேசுவை கொன்றுவிடடாள் சுதந்திரவாளி ஒழிந்துபோவான் என்று சத்துரு நினைத்தான் ஆனால் அதன் மூலமே ஜனங்களுக்கு இரட்சிப்பு உருவாக்கி அவனின் திடத்திலேயே அவனுக்கு வீழ்ச்சியை உண்டாக்கியவர் தேவன்.
ஸ்தேவானை கொன்றால் சபை பயப்படும் என்று நினைத்தான் ஆனால் தேவனோ சபையை பெறுக செய்தார்.
இதுபோல் சத்துரு எதிர்காலத்துக்கு போடும் அனைத்து திடடமும் தேவனால் தகர்க்கப்படுவதோடு அவனுடைய வீழ்ச்சிக்கே அது வழிசெய்தது அப்படியிருக்க அவனுக்கு எதிர்காலம் எப்படி தெரிந்திருக்க முடியும் சிஸ்ட்டர்.
எதிர்காலம் சாத்தானுக்கு தெரியும் எதற்கு ஏற்ற உங்கள் கருத்து ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் அதற்க்கு என்னால முடிந்த விளக்கம் தருகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)