நம் சிந்தைதான் சாத்தன் கைவைக்கும் முக்கிய இடம். என்னதான் பரிசுத்தமாக இருந்தாலும் அதில் ஏதாவது பாவ சிந்தனைகளை உள்ளே போட்டு ஏதாவது அகப்படுகிறதா என்று பார்ப்பதுதான் அவன் வேலை.
நாம் அதை பொருட்படுத்தாமல் தள்ளிவிடடாள் தப்பிக்கொள்ளலாம் ஆனாலும் அவனின் முயற்சிகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
நாம் இடம் கொடுத்தால் நம் சிந்தையை முற்றிலும் ஆக்கிரமித்து செயல்பட அவனால் முடியும்.
I நாளாகமம் 21:1சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
அதன் பின்னர் யார் சொன்னாலும் கேட்க்க மாட்டொம்.
4. ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது;
ஆகினும் பாவத்தை செய்து முடிக்கும்வரைதான் அவன் ஆளுகை இருக்கும்பி அதற்க்கான தண்டனைகள் வரும்போது அவன் விட்டுவிட்டு ஓடிவிடுவான்.
10. இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது;
நீங்கள் எதை மனதில் வைத்து கேடகிறீர்கள் என்று தெரிந்தால் அதற்க்கு சரியான விளக்கம் கொடுக்க முடியும்.
-- Edited by SUNDAR on Thursday 6th of October 2016 03:09:32 PM
-- Edited by SUNDAR on Thursday 6th of October 2016 03:10:47 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சில தவறான எண்ணங்கள் சிந்தையில் ஏட்படுமாயின் அதை எவ்வாறு தவிர்ப்பது ? சில வேளைகளில் அதை தடுக்க முடியாதுள்ளது ..
ஆலோசனை தரவும்
உண்மைதான் சகோதரி அவன் கொண்டுவரும் சிந்தனைகளை நம்மால் உடனே நிறுத்திவிட முடியாது என்பது நான் அறிந்ததே. அதாவது அவன் என்ன செய்ய சொல்ல வருகிறானோ அதை சொல்லி முடித்தபின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை முடிவெடுக்க முடியும்.
தவறான சிந்தனைகளை கொண்டுவருவது சத்துரு என்பதை சொல்லியிருக்கிறேன் அவன் இருக்கும்வரை தன வேலையை செய்துகொண்டுதான் இருப்பான். நாம்தான் விழிப்புடன் இருந்து அதை முறியடிக்க வேண்டும்.
அத்தோடு சாத்தன் கொண்டுவரும் ஒவ்வொரு தவறான சிந்தனையும் நமக்கு ஒரு இதறல்தான் என்றாலும் அதுவே நம்மை ஒவ்வொரு முறையும் தேவன் பக்கத்தில் கொண்டு செல்லும் படிக்கட்டு என்றுதான் சொல்லவேண்டும். எனவே அதில் கடந்து செல்லாமல் தேவனை கிட்டி சேர்வது கூடாத காரியம்.
நம் ஆண்டவராகிய இயேசுகூட சத்துருவால் காண்பிக்கப்படட பல ஆசையான காரியங்களை கடந்த பின்னர்தான் வல்லமையான ஊழியத்தை ஆரம்பித்தார்.எனவே இதை யாரும் தவிர்த்துவிட முடியாது.
அதை எப்படி மேற்கொள்வது என்பதற்கு எனக்கு தெரிந்த சில ஆலோசனைகளை தருகிறேன்.
1.எந்த விஷயத்தில் நமக்கு ஆசை இருக்கிறதோ அந்த விஷயத்தில்தான் சத்துரு உள்ளே வருவான் எனவே முடிந்தவரை ஆசைகளை கர்த்தருக்குள் கட்டுப்படுத்த முயற்சிக்கவும்.
2. கர்த்தரை பற்றிய பயம் நம் சிந்தனைகளை கட்டுப்படுத்தும் ஒரு பெரிய ஆயுதம். "ஐயோ" நான் பரிசுத்த தேவனின் பிள்ளை நான் இப்படி சிந்திப்பது தேவனுக்கு பிடிக்காது என்று ஓரிடத்தில் முற்றுப்புள்ளி வைப்பது.
3. வேத வசனங்களை கொண்டு சிந்தனையை வெட்டுதல் அதற்க்கு பைபிளை நான்கைந்து முறை முழுவதும் படித்து நம் சிந்தனை வசனத்தின் அடிப்படையில் எப்படி பாவமாகிறது என்பதை அறிந்து அதை வசனத்தால் மேற்கொள்ளுதல்.
4. இயேசுவை முழுவதுமாக அண்டிக்கொள்ளுந்தல். ஆண்டவராகிய இயேசுவே எனக்கு இந்த சிந்தனை வருகிறது என்னால் இதை மேற்கொள்ளுவது கடினமாக இருக்கிறது எனக்கு இதை மேற்கொள்ள பெலத்தாரும் என்று சொல்லி சிந்தனைகள் வரும்போதெல்லாம் ஜெபித்தல்.
5. எப்போதும் தேவ சிந்தனையில் இருத்தல். இந்த தளம் அதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட்து. மற்ற சிந்தனைகளி ல் இருந்து விடுபட்டு வசனம் பற்றிய தியானத்தில் தொடர்ந்து இருப்பதால் சத்துரு நம்மை நெருங்கவே முடியாமல் செய்வது.
எனக்கு தெரிந்த ஆலோசனைகள் இவைகள்தான் சிஸ்ட்டர்
-- Edited by SUNDAR on Thursday 13th of October 2016 01:20:24 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)