தங்களுடைய கருத்துக்களை கேள்விகளாக கொடுத்து பதில் சொல்வதை விட நேரடியாக சொல்லலாமே ஏனெனின் கேள்விகளாக கேக்கும் போது சில குழப்பங்கள் வரலாமே?
சாதாரன கேள்விகளாக இருந்தால் பரவாயில்லை ஆனால் தேவனை குறித்த காரியங்களை குறிப்பிடும் போது கேள்வியாக கேட்டு பதில் கொடுப்பதை தவிர்த்தால் நன்றாயிருக்கும்..
இது எனது தனிப்பட்ட கருத்து
ரோமர் 10:17ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
விசுவாசம் உருவாவதற்கு கேள்வி அவசியமாகிறது. கேள்வியே இல்லாத பட்ச்சத்தில் பதில் என்பது பயனில்லாதது.
எனவே ஆழமான காரியங்களை வெளிப்பாடு சம்பந்தமானவைகளை எழுதும்போது முதலில் வேத வசனத்தின் அடிப்படையில் ஒரு கேள்வியை உண்டாக்கி அதற்க்கு என்ன பதில் என்பதை சிந்திக்க வைத்து பின்னர் நம் கருத்தை சொல்வது என்பது சிறந்தது என்று நான் கருதுகிறேன்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும். உங்களை ஒரு கேள்வி கேடடால் அதற்க்கு உங்களுக்கு தெரிந்த பதில் ஏதாவது சொல்வீர்கள் அதையும் வசன அடிப்படையில் நான் consider பண்ணி பார்த்துவிட்டு பின்னரே என் பதிலை எழுதுவது வழக்கம்.
மற்றபடி அநேக பொதுவான போதனை/ கருத்துக்களை எழுதும்போது அதை கட்டுரை வடிவில் எழுதி "கிறிஸ்த்தவ கட்டுரைகள்" பகுதியில் பதிவிட்டுள்ளேன் சிஸ்ட்டர்
வேதம் 100% உண்மை ஆகினும் நமக்கு புரியாத எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது "ஏன் இப்படி ஆண்டவர் செய்தார்" என்று கேள்வியை எழுப்பினால் அதற்கான பதில் ஆண்டவரிடம் இருந்து தானாக வரும் என்று நான் விசுவாசிக்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
////////////////////வேதம் 100% உண்மை ஆகினும் நமக்கு புரியாத எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது "ஏன் இப்படி ஆண்டவர் செய்தார்" என்று கேள்வியை எழுப்பினால் அதற்கான பதில் ஆண்டவரிடம் இருந்து தானாக வரும் என்று நான் விசுவாசிக்கிறேன்.//////////////////
இதட்கு என்ன அண்ணா கருத்து சற்று தெளிவாக கூறுங்கள்
எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்பதன் கருத்து ???
////////////////////வேதம் 100% உண்மை ஆகினும் நமக்கு புரியாத எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது "ஏன் இப்படி ஆண்டவர் செய்தார்" என்று கேள்வியை எழுப்பினால் அதற்கான பதில் ஆண்டவரிடம் இருந்து தானாக வரும் என்று நான் விசுவாசிக்கிறேன்.//////////////////
இதட்கு என்ன அண்ணா கருத்து சற்று தெளிவாக கூறுங்கள்
எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்பதன் கருத்து ???
"கண்மூடித்தனமாக" என்றால் "சரியான பொருளை அறியாமல் கண்டபடி நம்பக்கூடாது" என்று அருத்தம் அப்படி இருந்தால் சத்துரு நம்மை சுலபமாக ஏமாற்றிவிடுவான்.
இன்று வேத வசனங்களின் தவறான புரிதலால்தான் அநேக மாறுபட உபதேசங்கள் உருவாகியிருக்கிறது. எல்லோருமே தங்கள் பிரிவுக்கு ஏதாவது சில வசன ஆதாரம் சொல்கிறார்கள். அவ்வாறு இருக்கையில், நாம் வேத வசனத்தின் சரியான பொருள் அறிந்து விசுவாசிக்க வேண்டும் என்பதே அதன் கருத்து.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவனை தவிர உலகில் உள்ள எதையுமே கண்மூடி தனமாக நம்பக்கூடாது.
வேத வசனங்கள்கூட ஆண்டவர் சொல்லி நேரே நம் கைக்கு வரவில்லை. அது எத்தனையோ மனிதர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் கரங்களை
கடந்து வந்திருக்கிறது ஒரு கமா மாறினால் கூட பொருள் மாறும் எனவே எதையுமே சரியான பொருள் அறியாமல் கண்மூடித்தனமாக நம்புவது ஏற்றதல்ல.
ஆவியானவர் பாவங்களை கண்டித்து உணர்த்துவார்த்தான் ஆனால் நாம் எதோ ஒரு தவறான கருத்தில் உறுதியாக இருக்கும் பட்ச்சத்தில் அவர் போராடி நம்மிடம் எதையும் திணிப்பது இல்லை. உதாரணமாக "பொய் சொல்லக்கூடாது" என்று வசனம் உறுதியாக சொல்கிறது ஆனால் அநேகர் அதை அறிந்தும் பொய் சொல்கிறார்கள் அவர்களோடு ஆவியானவர் போராடுவது இல்லை. ஆவியானவர் மென்மையானவர் ஓரிரு முறை நமக்கு உணர்த்தியும் அதை நாம் ஏற்காமல் ஒரு தவறான நிலையில் இருந்தாலே அவர் அப்படியே விட்டுவிடுவார் பின்னர் நாம் சரியான நிலையில் இருப்பதுபோல் நமக்கு தெரியும் ஆனால் நாம் வஞ்சிக்கப்பட்டிருப்போம். அந்த உண்மையே நமக்கு தெரியாது.
மேலும் வேத வசனங்கள் உண்மை என்று கண்மூடி தனமாக நம்புவது வேறு, சில வசனங்களின் பொருளை எந்த உறுதிபடுத்துதலும் இல்லாமல்கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு இருப்பது வேறு.
நானே அதுபோல் கண்மூடித்தனமாக சில தவறான புரிதல்களை கொண்டிருந்தேன்.
லேவியராகமம் 3:16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும்கர்த்தருடையது.
போன்ற வசனங்களை படிக்கும்போது கர்த்தரை கொழுப்பையும் இரத்தத்தையும் ஆகாரமாக உண்ணக்கூடிய ஒருவராக நினைக்க நேர்ந்தது.
ஆனால் அதன் கருத்து அப்படியல்ல என்பதை ஆண்டவர் தெரிவித்த பிறகே அறிந்தேன்.
அதேபோல் ஒரு வேத வசனத்தைக்கூட சரியான பொருள் தெரியாமல் கண்மூடித்தனமாக எதோ ஒரு பொருளில் நம்பிக்கொண்டு அதன்படி நடந்துகொண்டிருக்க வாய்ப்புண்டு இதில் வசனமா உபதேசமா என்றெல்லாம் வேறுபாடு இல்லை. "நம் தேவன் ஜீவனுள்ளவர்" என்பது மட்டுமே நாம் கண்மூடி தனமாக நம்பவேண்டியது. மற்ற எதையுமே கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.
நாம் கண்மூடித்தனமாக நம்பினால் சில வேறு மதத்தவர்கள் கூட இப்படி வேறு எதோ ஒரு புத்தகத்தை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி தவறு என்று சொல்ல முடியும்.
எனவே எதையும் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்ப்போம். ஆண்டவர் துணையுடன் ஆராய்ந்து பார்த்து உண்மையை அறிந்து உறுதியாக நிற்போம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)