இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எது இல்லை இந்து மதத்தில்" என்றோரு உரையை ஒரு பெண் வாசித்தார்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
எது இல்லை இந்து மதத்தில்" என்றோரு உரையை ஒரு பெண் வாசித்தார்.
Permalink  
 


கடந்த நாளில் என் முதலாளிஇடம் பேசிக்கொண்டு இருந்தபோது " நீங்கள் தீவிர கிறிஸ்த்தவர், உங்களுக்கு கோபத்தை வரவைக்கும் ஒரு வீடியோவை நான் காட்டுகிறேன்" என்றார். நானும் காட்டுங்கள் சார் என்றேன். 
 
ஒரு வீடியோ அதில் "எது இல்லை இந்து மதத்தில்" என்றோரு உரையை ஒரு பெண் வாசித்தார்.
  
"எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும்". "யாரையும் விலக்காது. எந்த கடவுளையும் நிராகரிக்காது" என்று ஆரம்பித்து "ரிக்வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம், அதர்வ வேதம் என்று நான்கு பெரிய வேதங்கள்,  நீதி நெறிக்கு பகவத் கீதை, யுத்த கலைக்கு மஹாபாரதம், பிறன் மனைவி தொடாமைக்கு ராமாயணம"  என்று தொடர்ந்து "வீடு கட்டிட வாஸ்த்து, வானவியலுக்கும் வான சாஸ்த்திரம், அர்த்த சாஸ்த்திரம், காம சாஸ்த்திரம்" என்றெல்லாம் தொடர்ந்து, "பலியிடுதலையும், உயிர்களை கொல்லாமையும் எல்லாவற்றையுமே தன்னுள் கொண்டது இந்துமதம்" யாருக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு வாழ இந்துமதம் அனுமதிக்கிறது. ஏதும் கடடாயம் கிடையாது எதையும் அது நிராகரிப்பதில்லை. எனவே தாய் மதமே சிறந்தது என்று ஒரு நீண்ட உரையை சொல்லி முடித்தது.
 
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நான். சார் இந்த உரையில் எதையுமே நான் மறுக்கவில்லை எல்லாமே அடங்கியுள்ள  இந்து மதத்தை எத்தனைபேர் முழுமையான அறிந்திருக்கிறீர்கள்?
 
மஹாபாரதத்தில் வரும் விதுனர் நீதியில் பெரிய நீதி சொல்லப்பட்டுள்ளது அது எத்தனைபேருக்கு தெரியும்? கருட புராணம் படித்திருக்கிறீர்களா அதில் பாவம் செய்த்தவர்கள் கொடிய வேதனை அனுபவிக்கும்  வைதரணி நதி பற்றி தெரியுமா  சரி அதை விடுங்கள் பகவத் கீதையில் சொல்லப்படட காரியங்களை எத்தனைபேர் கைக்கொண்டு நடக்கிறீர்கள்?  என்று கேடடேன்.
 
நீங்கள் அதையெல்லாம் படித்திருக்கிறீர்களா? நான் எதையுமே இன்னும் படிக்கவில்லை என்றார்.
 
இதுதான் சார் இந்து மதம். 
 
"உள்ளே எல்லாமே இருக்கு" "எல்லாம் இருக்கு" என்று சொல்லிக்கொண்டு என்ன இருக்கு என்று எதையுமே அறியாமல் வாழ்வதுதான் இன்றைய  இந்துமதம். உங்களுக்கென்று என்ன நீதி இருக்கிறது?  உங்களுக்கு நீதியை போதிக்க யார் இருக்கிறார்கள்? போதித்தாலும் அமர்ந்து கேட்க்க எத்தனைபேர் இருக்கிறீர்கள்?  அவரவர் அவரவர் இஷடத்துக்கு ஒரு வாழ்க்கை வாழ்வதன்பெயர்தான் இந்து மதமா என்று கேட்ட்டேன் அவரால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.
 
ஒரு இந்து முறையாக அவர்கள் வேதங்களை வாசித்தாலே போதும்  அதில் ஆண்டவராகிய இயேசுவை பற்றி சொல்லியிருப்பதை அவர்கள் அறிந்துகொள்ள முடியும். அவர்களால் அறியவும் முடியாது அதிலிருந்து எடுத்து அறிவிப்போரும் யாரும் இல்லை அறிந்த நாங்கள் விளக்கினாலும் அதை கேட்டு ஏற்கக்கூடியவர்கள் மிக சொற்பமே.
 
காரணம் என்ன தெரியுமா?
 
ஆதிமதம் என்றோரு போர்வையை போர்த்திக்கொண்டு தன இஷடம்போல வாழ்ந்து பழகியாகிவிடடது.  கோவில் கொடை என்ற பேரில் கூடடத்தை கூட்டி கும்மாளம் போடுவதும், சாமி கும்பிடப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு சைட் அடிக்க போவதும், தெய்வத்துக்கு செய்கிறேன் என்ற பெயரில் காணிக்கைகள் திரட்டி தங்கள் பைக்குள் போடுவதும், சாமியை சுற்றி வந்து விடடால் சங்கடங்கள் ஓடிவிடும் என்பதும்  கங்கையில் போய் மூழ்கிவிடடால் பாவ கரை எல்லாம் போய்விடம் எனபதும் மிக சுலபமான வழிமுறைகள்.   
 
இப்படியொரு இலகுவான வழி வேறு எந்த மதத்திலும் இல்லை எனவே அதை விட்டு வெளியில் வர அநேகருக்கு மனதில்லை  
 
ஒரு காலத்தில் நானும் அப்படிதான் பயந்துபோய் இருந்தேன்.   
 
கிறிஸ்த்தவத்துக்கு வந்தால் பீடி சிகரெட் குடிக்க கூடாது, மது அருந்த கூடாது, சினிமா பாட்டு கேட்க கூடாது, ஆபாச படங்களை பார்க்க கூடாது, அடுத்தவன் மனைவியை நோக்க கூடாது, ஏமாற்றக்கூடாது, லஞ்சம் வாங்க கூடாது இன்னும் எத்தனையோ....இப்படி எதுவுமே இல்லாமல் எப்படி உலகத்தில் வாழ்வது என்று நினைத்து கிறிஸ்த்துவை நிராகரித்தேன்.
 
ஆனால் ஒருநாள் ஆண்டவர், நான் வாழும் வாழ்க்கையின் முடிவு என்னை எங்கேகொண்டு சேர்க்கும் என்று தெரிவிக்க என்னை பாதாளம் என்றோரு  கொடிய குழிக்குள் இறக்க்கி அங்கு நடக்கும் வேதனைகளை காண்பித்தபோது. ஆண்டவரே இந்த மோசமான கொடூரமான இடத்துக்கு யாரும் வரக்கூடாதே அதற்க்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கதறினேன் துடித்தேன். 
 
அதன்பின் என் வாழ்க்கை முற்றிலும் திருப்ம்பிப்போனது.  
 
இன்றோ தேவனின் வார்த்தைகளை கைக்கொண்டு நடப்பதே எனக்கு சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய் மாறிப்போனது. 
 
நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா சந்தோஷத்தையும் அதற்க்கு மேலான சந்தோஷத்தையும் தேவன் நமக்காக நித்தியத்தில் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார்.
 
நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் எந்த தாய் மதத்துக்குள் புகுந்தாலும் உங்கள் பாவ சிந்தைகளை உங்களை விட்டு ஒழிக்கவும் முடியாது பாவம் செய்து பழகிப்போன ஒருவன் பரிசுத்தம் அடையவும் முடியாது. ஆண்டவராகிய இயேசுவே ஒருவரே நம் பாவங்களை நீக்கி நம்மை பரிசுத்தம் செய்ய வல்லவர். அவரேயல்லாமல் வேறொரு ரட்சிப்பு இல்லவே இல்லை.
 
சொற்ப  கால உலக வாழக்கையில் கிடைக்கும் அற்ப சந்தோஷத்துக்காக நித்திய சந்தோஷத்தை இழந்துபோக போகிறீர்களா? நித்தியமான வேதனைக்குள் அமிழ்ந்து போக போகிறீர்களா? அல்லது ஆண்டவரின் கரத்துக்குள் வந்து நித்திய பேரின்பத்தை சுதந்தரிக்க போகிறீர்களா? 
 
"பாதாளம் என்று எதுவுமில்லை மரணத்துக்கு பின்னால் ஒன்றும் இல்லை" என்று மனக்கோடடை வைத்திருப்பவர்கள் உங்கள்  
புராணங்களிலேயே அதைப்பற்றி சொல்லப்பட்டிருப்பதை ஆராய்ந்து பாருங்கள்.   
 
அந்த பாதாளம் என்னும் கொடிய வேதனையில் இருந்து தப்பிப்பது மிக சுலபம்: ஆண்டவராகிய இயேசு நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்துவிடடார்.
 
 
ரோமர் 10:10 நீதியுண்டாக (இயேசுவை) இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக (அவரை)  வாயினாலே அறிக்கைபண்ணப்படும்..    
 
இன்றே முடிவு எடுங்கள்! அவர் பரிசுத்த கரத்துக்குள் ஓடி வாருங்கள்.  ஆண்டவரின் வருகை மிக சமீபமாய் இருக்கிறது


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 626
Date:
எது இல்லை இந்து மதத்தில்
Permalink  
 



சரியாக சொன்னீர்கள் அண்ணா

செய்வதையெல்லாம் செய்து விட்டு கோவிலுக்கு போவதும் சபரி மலை என்று அங்கு செல்வதும் பலருக்கு வழக்கமாகி உள்ளது.. அதையும் விட பேசாத கற்களை வணங்கிக்கொண்டு அடிமைத்தனத்தில் வாழ்கிறார்கள்..

நானும் இந்து மாதத்தில் இருந்து தான் ஆண்டவரை ஏற்றுக் கொண்டேன்... அதிலிருக்கும் போது பாவம் என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது வாழ்ந்தேன்... ஆனால் இயேசுவோ உளையான சேற்றிலிருந்து என்னை தூக்கி எடுத்தார்..

மேலும் நமக்கோ சரியான பாதையில் நடத்த நம் தேவாதி தேவன் நமக்குண்டு.. விழுந்தாலும் தூக்கிவிடவும் அவருண்டு..

கர்த்தருக்கே மகிமை..

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard