இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மண்ணுக்கும் மனித உடலுக்கும் இடையிலான தொடர்பு


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
மண்ணுக்கும் மனித உடலுக்கும் இடையிலான தொடர்பு
Permalink  
 


கல் தோண்டுவதட்கு முன்பா மண் தோன்றியது ?? யாருக்காவது தெரியுமா? 

 

மேலும் மண்ணுக்கும் மனிதனின் உடலுக்கும் இருக்குற தொடர்பை விளக்க முடியுமா? 

 

உதாரணமாக கனியுப்புக்கள் ?

 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

சகோதரி இது என்னுடைய தளத்தில் சில காலங்களுக்கு முன்பு நான் இட்ட பதிவு. ஆனால் என்னுடைய சொந்த பதிவு அல்ல. மனித படைப்பு குறித்து இன்னும் சில விடயங்கள் இருக்ன்றன மேலும் வாசிக்க விரும்பினால் இந்த லிங்குக்கு சென்று வாசியுங்கள்

http://www.siluvayadi.blogspot.com/2013/05/blog-post_30.html

http://www.siluvayadi.blogspot.com/2013/04/blog-post.html

 

மண்ணான மனிதன்

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான்.(ஆதி 2.7)
எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல. மனுஷனுடைய மாம்சம் வேறே மிருகங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே (1கொரி 15.19)

மனிதனை கடவுள் மண்ணினாலேயா படைத்தைார் என்பதை அறிய ஆராய்ந்த போது இன்று மண்ணிலிருந்து கிடைக்கும் கனியவளங்களுடன் மனித உடலில் சம்பந்தம் வைத்திருக்கிறதை அறிய முடிகிறது.

உலகமெங்குமுள்ள மனிதர்கள் ஏதாவது ஓரு மண்ணின் நிறத்தில்தான் இருக்கின்றனர். (பிரௌன்)(Brown) மனித சரீரத்தின் முக்கிய மூலகங்களான நைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன், கால்சியம், தண்ணீர் போன்றவை மண்ணிலும் இருக்கிறது என்பதை விஞ்ஞான உலகம் கண்டுபிடித்த உண்மை. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகள் கட்டுக்கதைகள் அல்ல.

1. துப்பாக்கியில் ஒரு முறை சுடுவதற்கு பயன்படுத்தும் அளவிலான கரி மருந்து.
2. ஏழு துண்டு சோப்பு செய்யப் போதுமான கொழுப்பு
3. ஒரு பெரிய ஆணி செய்யப் போதுமான இரும்பு
4. ஒரு நாயின் மேலுள்ள பேன்களைப் போக்க போதுமான கந்தகம்
5. ஒரு சிறு கோழிக் கூட்டை வெள்ளையடிக்க போதுமான சுண்ணாம்பு
6. வயிற்றுக் கோளாற்றைக் கண்டுபிடிப்பதற்கு போதுமான உப்பு
7. 2200 தீக்குச்சிகளைச் செய்யப் போதுமான வெடிமருந்து.

இவ்வளவு கனிப்பொருள்கள் மனித உடலில் இருப்பதை பின்னாளில் சார்லஸ் H மேயர் எனும் மருத்துவ நிபுணர் விஞ்ஞான வாயிலாக கண்டுபிடித்தார்.

வேதாகமம் தேவனுடைய புத்தகம் என்பதை மனிதன் அறிந்து கொள்ளும்படி வேதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வைத்துவிட்டுப்போன உறவைப் பற்றி எண்ணிப் பார்ப்பதற்கு எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது.
--உறவாடும் உண்மைகள்--



-- Edited by t dinesh on Monday 23rd of August 2021 01:12:45 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

நன்றி அண்ணா

தங்களின் தளத்திட்கு சென்று சில கட்டுரைகளை வாசித்தேன் பயனுள்ளதாக இருந்தது..

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard