இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுயத்தின் மீது சாய்ந்தால் தோல்வி தொடரும்,,, கர்த்தரின் மீது சாய்ந்தால் வெற்றி தொடரும்..


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
சுயத்தின் மீது சாய்ந்தால் தோல்வி தொடரும்,,, கர்த்தரின் மீது சாய்ந்தால் வெற்றி தொடரும்..
Permalink  
 


ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 

 

நாம் அநேக நேரங்களில் எமது சுயத்தின் மீது சாய்ந்து தீர்மானங்கள் எடுத்து தோற்று போன சந்தர்ப்பங்கள் அநேகம் இருக்கலாம்.. என்னுடைய வாழ்க்கையில் இது அநேகமாக நடந்துள்ளது..  எனது சுய பெலத்தில் சாய்ந்துகொண்டு ஓட முயற்சித்த  நேரங்களில் எல்லாம் நான் தோல்வி அடைந்ததே அதிகம்... பல தோல்விகள் என்னை சூழ்ந்து கொண்ட நேரங்களில் அநேகமாக நான் சோர்ந்து போனேன்.. ஆனால் ஆண்டவர் என் தோல்விகளின் மத்தியில் சில பாடங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார்..

 

அதாவது நீ உன் சுய பலத்தினால் ஓட நினைத்தால் அது உனக்கு முடியாத காரியம் என்று... எனவே நான் இப்போது கர்த்தரின் பக்கம் சாய்ந்துகொண்டு ஓட முயல்கிறேன்.. அவரின் பலத்தினால் ஓடுகிறேன்.. இது எனக்கு மிக பெரிய சமாதானத்தையும் தைரியத்தையும் தருகிறது... ஒரு காரியம் என்னால் முடியவில்லையே என்று நினைக்கும் போது "நீ ஓடுவது உன் சுய பலத்தினால் அல்ல கர்த்தரின் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறாய்" என்ற வார்த்தை என்னை பெலப்படுத்தி நடத்துகிறது. 

 

எனவே எனக்கான சோதனைகளுக்கு நான் அஞ்சுவதில்லை.. இதற்கு காரணம் நான் என் தேவனின் பக்கம் சாய்ந்து கொண்டமையே ஆகும்.. 

 

இப்படியான ஒரு சூழ்நிலையில் ஆசா இராஜாவும் கடந்து செல்கிறார்  

 

அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.

2 நாளாகமம் 14 :1

ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

2 நாளாகமம் 14 :2 

 

3. அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,

 

4. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,

5. யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.

 

6. கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

 

7. அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.

 

11. ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

 

12. அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.

 

2 நாளாகமம் 15 :

 

 

16. தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.

 

17. மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிளெல்லாம் உத்தமமாயிருந்தது.

 

இப்படியாக ஆண்டவரோடு அவன் சார்ந்திருக்கையில் அவன் காரியங்கள் எல்லாம் வாய்த்தது... கர்த்தர் அவனோடு இருந்தார்..

 

ஆனால் இப்படி வைராக்கியமாக இருந்த ஆசா ராஜா ஒரு கட்டத்தில் கர்த்தரை சார்ந்து கொள்ளாமல் யுத்த நேரத்தில் பென்னதாத் ராஜாவின் பக்கம் சார்ந்து கொண்டபடியால் 

 

2 நாளாகமம் 16 :

2. அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:

 

3. எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான். 

 

மனுஷன் பக்கம் அவன் சார்ந்து கொண்டபடியால் அவனுக்கு தோல்விகள் ஏற்பட ஆரம்பித்தது....

 

2 நாளாகமம் 16 :

7. அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.

 

8. மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரைவீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்துகொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.

 

9. தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

 

12. ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.

 

இப்படியாக ஆசா கர்த்தரை அல்லாமல் மனுஷனையும் தன்னையும் சார்ந்து கொண்டபடியால் அவனுக்கு தொடர் தோல்விகளும் கடைசியில் அவன் வியாதிகளிலும் அவன் பரிகாரிகளையே தேடின படியால் அவன் அதிக வேதனைப்பட்டிருப்பான். 

 

எனவே எமக்கு என்ன வேதனைகள், துன்பங்கள், சோதனைகள் வந்தாலும் நாம் கர்த்தரை சார்ந்துகொள்ளும் போது அவர் எமக்கு எல்லாவற்றிலும் துணையாய் இருப்பதோடு வெற்றியையும் தருவார். 

 ஆண்டவரே இது என்னாலே முடியாதுப்பா.. நீங்க நடத்துங்கப்பா..  என்று முழுமையாக எம் பலவீனங்களை அவரின் பாதத்தில் வைக்கும் போது நிச்சயமாக அவர் எம்மை நடத்துவார்.. அவரின் பலத்தினால் தாங்குவார்.. எமக்கு ஊன்று கோளாக நிச்சயம் இருப்பார். 

இது எனது அனுபவம்.. 

 

கர்த்தருக்கே மகிமை.. 

 

 

 



-- Edited by Debora on Wednesday 21st of December 2016 10:57:15 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard