கர்த்தருக்கு ஆதாம் பாவம் செய்தது தெரிந்தும் அவர் எதுவும் தெரியாதவர் போல அவனிடம் வந்து கேட்க காரணம் என்ன?
தெரிந்தவர்கள் வசனத்துடன் பதில் தரவும்
அன்பான சகோதரியே தங்கள் வசன அடிப்படையில் பதில் வேண்டும் என்று சொன்னதால் எந்த வசனத்தை சொல்வது என்பது புரியாத நிலையில் இந்த கேள்வியை அப்படியே விட்டுவிடடேன்.
தங்கள் கேள்விக்கான பதிலை வசனத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டதை இங்கு எழுதுகிறேன்.
என்ற வசன அடிப்படையில் பாவம் செய்த ஆதாம் தேவனுக்கு பிள்ளை என்ற நிலையை விட்டு பாவத்துக்கு (சத்துருக்கு) அடிமை என்ற நிலைக்கு போய்விட்டான்.
"பிறன் வேலைக்காரனை இச்சிக்காதே" என்று சொன்ன தேவன் தானே விரும்பி அடுத்தவன் வீட்டு பொருளான அவனை பயில்காட்டி தன்னிடம் சேர்க்க முயல்வது நியாயமல்ல எனவே அவனே தன்னை உணர்ந்து தன்னை நோக்கி வர வேண்டும் என்ற நோக்கத்திலியே "ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்" என கூப்பிட்டு அவனே தன்னை நோக்கி வரட்டும் என்று எதிர்பார்த்திருக்கலாம்.
இதன் தொடர்ச்சியாக:
ஏசாயா 59:2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினைஉண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
என்ற வசனப்படி,
ஆதாம் செய்த பாவமானது "தீமையை பார்க்க மாடடாத சுத்த கண்ணனான" பரிசுத்த தேவனால்
அவனை காண முடியாதபடி பிரிவினை உண்டாக்கிவிட்ட்து எனவே தேவன் ஆதாமே நீ எங்கே இருக்கிறாய் என கேட்க்கவேண்டிய நிலை உருவானது.
இன்றும் அதுபோலவே நாம் செய்யும் ஒவ்வொரு மீறுதலும் தேவனுக்கும் நமக்கும் இடையே பிரிவினை சுவராக நிற்கிறது.
இறுதியாக எனது கருத்து என்னவென்றால்
நமது பிள்ளையை நாம் இரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு நம் அலுவல்களை பார்க்க செல்கிறோம். திரும்ப வந்த பார்த்த போது அந்த பிள்ளை நாம் வைத்த இடத்தில் இருக்காமல் வேறு ஒரு நிலையில் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது. அதை பார்த்த நாம்
"உன்னை நான் எங்கு வைத்தேன் நீ எங்கே இருக்கிறாய்" என்று கேட்பதுபோல்
தேவன் ஆதாம் ஏவாளை பார்த்து "நீ எங்க இருக்க? சாப்பிடாதே என்று சொன்ன கனியை சாப்பிட்டுவிடடாயா?" என்று கேட்ட்தாகவே நான் நினைக்கிறேன்.
உங்களுக்கு எது சரியாக தோன்றுகிறதோ எடுத்துகொள்ளுங்கள்.
வேறு ஏதாவது கருத்த இருந்தால் சொல்லுங்கள் சிஸ்ட்டர்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//////////////////////இதன் தொடர்ச்சியாக:
ஏசாயா 59:2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
என்ற வசனப்படி,
ஆதாம் செய்த பாவமானது "தீமையை பார்க்க மாடடாத சுத்த கண்ணனான" பரிசுத்த தேவனால்
அவனை காண முடியாதபடி பிரிவினை உண்டாக்கிவிட்ட்து எனவே தேவன் ஆதாமே நீ எங்கே இருக்கிறாய் என கேட்க்கவேண்டிய நிலை உருவானது.///////////
பாவம் எம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது உண்மைதான். ஆனால் பாவம் செய்திருக்கும் போது எமக்கு தான் தேவனின் முகத்தை பார்க்க முடியாது என்று அறிந்திருக்கிறேன். தேவனாலும் எம் முகத்தை பார்க்க முடியாதா? என்பதை தயவு செய்து விளக்கவும்.
பாவம் எம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது உண்மைதான். ஆனால் பாவம் செய்திருக்கும் போது எமக்கு தான் தேவனின் முகத்தை பார்க்க முடியாது என்று அறிந்திருக்கிறேன். தேவனாலும் எம் முகத்தை பார்க்க முடியாதா? என்பதை தயவு செய்து விளக்கவும்.
தேவனுடைய பார்வைக்கு எதுவும் மறைவாய் இல்லை என்பது உண்மை. ஆகினும் பாவம் செய்த மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு சுவர் உருவாவதால் அவர் சிரத்தை எடுத்து அவனை பார்க்க வேண்டிய நிலை வருகிறது.
உதாரணமாக ஒருவரின் பிள்ளை ஒரு சாக்கடைக்குள் விழுந்து எதிர் பக்கம் கரையேறி நிற்க்கிறது. இப்பொழுது தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையே அந்த துர்நாற்றம் பிடித்த சாக்கடை இருக்கும் அதைபோல் தேவனையும் பாவம் செய்தவனையும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அடுத்து தேவன் மோசேயிடம்
உன் கையில் இருப்பது என்ன? என்று கேட்கிறார். அது "கோல்" என்று அவருக்கு தெரியாதா என்ன?
எசேக்கியேயேலிடம் "இந்த எலும்புகள் உயிரடையுமா?" என்று கேடகிறார்.
இதுபோல் பல கேள்விகள் வேதத்தில் உண்டு.
இதற்க்கு எல்லாம் ஒரே விளக்கம்தான்.
கேள்விக்கான பதிலை தேவன் அறிந்து மனுஷன் வாயில் இருந்து என்ன வருகிறது என்பதை அறியவே இவ்வாறு கேட்பதாக நாம் புரிந்துகொள்ளலாம்.
அதேபோல் ஒரு கேள்விதான் தேவன் ஆதாமை பார்த்து "நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்ட்தும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மனிதனின் வாயிலிருந்து என்ன வரும் என்பதை தேவன் அறிவார் தானே?
தெரிந்து கொண்டு ஏன் கேட்கிறார்?
சற்று தெளிவாக விளக்கவும் அண்ணா
ஒருவருக்கு அவர் நிலையை அடுத்தவர் சொல்லி தெரிவதைவிட அவரே அவர் வாயால் இந்த காரியத்தை நான் செய்தேன் என்று சொல்லும்போது அவருக்கு தன நிலையை அறியும் உணர்வு வர சாத்தியம் அதிகம்.
எனவே ஆதாம் அவன் வாயாலே அவன் நிலையை சொல்லும்படிக்கு தேவன் அவ்வாறு கேடகிறார்.
(இப்படியே போனால் கர்த்தர் எதுவுமே யாரிடமும் கேட்க்கவேண்டிய தேவையே இருக்காது எல்லாமே அவருக்கு முன்கூட்டி தெரியும் பிறகு ஏன்தான் அவர் மற்றவர்களை பார்த்து கேள்விகளை கேட்ட்டாரோ?)
உங்கள் பக்கத்தில் ஏதாவது கருத்து இருந்தால் சொல்லுங்கள் சிஸ்ட்டர்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)